என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal district: வேகமாக வந்த சரக்கு வாகனம் A speeding cargo vehicle"

    • குமாரபாளையம் தனியார் கல்லூரியில் மருந்தியல் படிப்பு (பார்ம்.டி)படித்து வருகிறார்.
    • சேலம்-கோவை புறவழிச்சாலை வட்டமலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் கடக்கும்போது சரக்கு வாகனம் மோதியது

    குமாரபாளையம்

    கடலூரை சேர்ந்தவர் காமேஷ் (23). இவர் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் மருந்தியல் படிப்பு (பார்ம்.டி)படித்து வருகிறார். இவர் சேலம்-கோவை புறவழிச்சாலை வட்டமலை பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் கடக்கும்போது, எதிர் திசையில் உள்ள சர்வீஸ் சாலையில் வேகமாக வந்த சரக்கு வாகனம், இவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் காமேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுனர் பட்லூரை சேர்ந்த பூபதி, (26), என்பவரை கைது செய்தனர்.

    ×