என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weddings and temple specials will not take place"

    • தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை
    • கடந்த வாரம் குண்டு மல்லிகை கிலோ ரூ.600-க்கும், நேற்று குண்டுமல்லிகை ரூ.300-க்கும்

    பரமத்தி வேலூர்

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே தண்ணீர் பந்தல், கபிலர்மலை, சின்ன மருதூர், பெரிய மருதூர், பெரிய சோளிபாளையம், பாகம் பாளையம், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, அரளி, ரோஜா, செவ்வந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.

    விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். பூக்களை வாங்கி செல்வதற்கு வேலாயுதம் பாளையம், தவுட்டுப்பாளையம், தளவாபாளையம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை வருகின்றனர்.

    கடந்த வாரம் குண்டு மல்லிகை கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.250- முல்லைப் பூ கிலோ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் வாங்கிச் சென்றனர்.நேற்று குண்டுமல்லிகை ரூ.300-க்கும்,சம்பங்கி கிலோ ரூ.80-க்கும், அரளி கிலோ ரூ.80- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் வாங்கிச் சென்றனர்.புரட்டாசி மாதம் தொடங்கி விட்டதால் திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

    ×