என் மலர்
நாகப்பட்டினம்
இந்த நிலையில் நேற்று கருணாநிதி மறைவு செய்தியை சுந்தரம்பிள்ளை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென துக்கம் தாங்காமல் அதிர்ச்சியில் மயங்கி அவர் விழுந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தி.மு.க. அனுதாபியாக இருந்த சுந்தரம்பிள்ளை இறந்ததால் அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (வயது 26). இவர் நேற்று கருணாநிதி இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது மிகவும் சோகத்தில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
பலியான கலையரசன் உடலுக்கு அப்பகுதி தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளுர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ராஜரத்தினம் மகன் ஜெயராமன்(48). இவர் தீவிர தி.மு.க தொண்டர் ஆவார். திருத்துறைப்பூண்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை நிகழ்ச்சியை டி.வி.யில் ஜெயராமன் பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது துக்கம் தாங்காமல் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து ஜெயராமனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இந்த செய்தியை அறிந்து நாகை மாவட்டத்தில் 3 தி.மு.க தொண்டர்கள் மரணம் அடைந்தனர்.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள நெய்குப்பை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 68). தி.மு.க ஒன்றிய பிரதிநிதி ஆவார். இவர் நேற்று இரவு அவரது வீட்டில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதேபோல் பெரம்பூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). தி.மு.க மேடை பாடகர் ஆவார்.
இவரும் நேற்று தி.மு.க தலைவர் கருணாநிதி இறந்த செய்தி அறிந்து அவரது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
மயிலாடுதுறை அருகே கொற்கை அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் கொஞ்சான். இவரது மகன் நாகராஜ். தி.மு.க தொண்டர் ஆவார். இவர் நேற்று மாலையில் டி.வி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதி மறைந்த செய்தி வந்தது. இதை கேட்ட நாகராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளை ஆகும். இந்த ஊரில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தார்.
நேற்று மாலை கருணாநிதி மரணம் அடைந்த தகவல் வெளியானதும் அவரசு சொந்த ஊரான திருக்குவளை சோகத்தில் மூழ்கியது.
திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் பிறந்த வீடு தற்போது நூலகமாக மாற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை ஏராளமான பெண்கள் நூலகம் முன்பு திரண்டு கும்மியடித்து ஒப்பாரி வைத்து பாடினர்.
மேலும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்திருந்து கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு பாண்டவையாறு, ஓடம் போக்கி ஆறு, கடுவையாறு உள்ளிட்ட ஆறுகள் வழியாக பாசன வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கின்றன.
இந்த நிலையில் வெட்டாற்று கிளை பாசன வாய்க்காலான தேவநதி வாய்க்கால் மூலம் பெருங்கடம்பனூர், செல்லூர், பாலையூர், பாலக்காடு, வைரவன் இருப்பு, மேலநாகூர், நாகூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தேவநதி வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இதனால் தண்ணீர் இன்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. தற்போது கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தேவ நதி வாய்க்கால் தூர் வாரப்படாத காரணத்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதை கண்டித்து சில நாட்களுக்கு இப்பகுதி விவசாயிகள் வயலில் இறங்கி தீப்பந்தம் ஏந்தி விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து தேவநதி வாய்க்காலை தூர்வார முடிவு செய்தனர். இதற்காக விவசாயிகள் பணம் வசூல் செய்து எந்திரம் மூலம் தேவநதி வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திடம் தேவநதி வாய்க்காலை தூர்வார கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் வேறு வழியின்றி கடன் வாங்கி வாய்க்காலை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதன் மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தூர்வாரும் பணிக்கு ஆகும் செலவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசிடம் இருந்து பெற்று தரவேண்டும் என்றனர். #tamilnews
வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கு காட்டான் குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவரது மனைவி ஆசைமணி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். விவசாயியான மாயப்பன், குடும்ப பிரச்சினையால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மாரியப்பன் திடீரென பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மேலநெடுந்தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மகள் ஹைசா மைமூ (வயது 23). இவர் பி.காம். படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி ஹைசா மைமூ வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.
இதுபற்றி சீர்காழி போலீசில் தந்தை அப்துல் ரசாக் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஹைசா மைமூவை தேடி வருகின்றனர்.
ஹைசா மைமூ வீட்டை விட்டு எதற்காக சென்றார்? எங்கு சென்றார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2018 அனைத்து ஊராட்சிகளிலும் ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் மாவட்டங்களை தூய்மையின் அடிப்படையில் தரவரிசை படுத்துதல் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக அங்கீகரிக்கப்பட்ட கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்றின் மூலமாக ஊரக பகுதிகளில் தூய்மை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிகள் மத்திய அரசின் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் செயல்படுத்தபட உள்ளது. மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் குறிப்பிட்ட நிறுவனத்தால் மாதிரி அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திடவும், ஊராட்சியின் பொது இடங்களை தூய்மையாக பராமரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தூய்மை கணக்கெடுப்பு (ஊரகம்)-2018 என்ற சின்னம் கொண்ட வில்லைகள் அரசு வாகனங்களில் ஓட்டப்பட்டன.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோவிந்தராஜுலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு அருகே உள்ள குரங்குபுத்தூர் காவிரிகரை தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் வடிவேல்(30). கொத்தனார்.திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் குரங்குபுத்தூர் கடைத்தெருவுக்கு வந்த வடிவேலை அதே பகுதியை சேர்ந்த மைனர் என்ற சந்திரசேகரன். இவரது அண்ணன் முருகேசன், அமிர்தலிங்கம் மகன் தமிழ்செல்வன், ராதகிருஷ்ணன் மகன் பிரபு ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டினர்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வருவதை கண்டு தப்பி சென்றனர். வடிவேல் சந்திரசேகரிடம் கொத்தனாராக வேலை செய்துள்ளார். வன்னிய சங்கத்திலும் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கட்சியை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். இதனால் வடிவேல்மீது ஆத்திரம் கொண்ட சந்திரசேகர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. வடிவேலை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவ மனையிலும், மேல்சிகிச்சைக்காக திருவாருர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும், சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து கடல் வழியாக கஞ்சா மற்றும் தங்கம் அடிக்கடி கடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடலோர காவல்படை போலீசார் ரோந்து படகில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேதாரண்யத்தை அடுத்த பெரிய குத்தகையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கடலோர காவல்படை டி.எஸ்.பி. கலித்தீர்த்தானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு படகு கடலோரம் நின்றுகொண்டிருந்தது. கடற்கரையில் 6 மூட்டைகளில் 192 கிலோ கஞ்சா கடத்த தயாராக இருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட வானவன் மாதேவியை லோடு ஆட்டோ டிரைவர் ரமேஷ்குமார் (வயது 30), யாழ்பாணம், மருதங்தேனியை சேர்ந்த சக்திவேல் (வயது 43) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் பெரிய குத்தகையை சேர்ந்த முனீஸ்வரன், யாழ்பாணத்தை சேர்ந்த சுகுகுமார் ஆகியோர் காரில் தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிடிப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சோதனையின் போது கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் மும்தாஜ் பேகம், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கீழக்குத்தகையைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி பார்வதி (வயது 61). அதே பகுதியில் உள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பில் பண்ணைக் குட்டை வெட்டும்பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியில் 50-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நூறுநாள் வேலை திட்டப்பணியில் பார்வதியும் நேற்று மண்வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பண்ணைக்குட்டையிலேயே பார்வதி மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட ஒன்றிய ஆணையர் தியாகராஜன், இறந்த பார்வதியின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி ரூ.25 ஆயிரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் பார்வதி பண்ணைக்குட்டை பணியில் மயங்கி விழுந்தபோது 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் வரவில்லை. அருகில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லலாம் என்று முயற்சி செய்தபோது அங்கும் பணியில் யாரும் இல்லை என தெரியவந்தது. இதனால் முதலுதவி செய்ய முடியாமல் மூதாட்டி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews






