என் மலர்
நீங்கள் தேடியது "Mayiladuthurai youth knife attack"
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு அருகே உள்ள குரங்குபுத்தூர் காவிரிகரை தெருவை சேர்ந்தவர் காசிநாதன் மகன் வடிவேல்(30). கொத்தனார்.திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மதியம் குரங்குபுத்தூர் கடைத்தெருவுக்கு வந்த வடிவேலை அதே பகுதியை சேர்ந்த மைனர் என்ற சந்திரசேகரன். இவரது அண்ணன் முருகேசன், அமிர்தலிங்கம் மகன் தமிழ்செல்வன், ராதகிருஷ்ணன் மகன் பிரபு ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி அரிவாளால் வெட்டினர்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வருவதை கண்டு தப்பி சென்றனர். வடிவேல் சந்திரசேகரிடம் கொத்தனாராக வேலை செய்துள்ளார். வன்னிய சங்கத்திலும் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கட்சியை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். இதனால் வடிவேல்மீது ஆத்திரம் கொண்ட சந்திரசேகர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. வடிவேலை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவ மனையிலும், மேல்சிகிச்சைக்காக திருவாருர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலும், சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






