என் மலர்
நீங்கள் தேடியது "Farmer Suicide In Vedaranyam"
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தேத்தாகுடி தெற்கு காட்டான் குத்தகை கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவரது மனைவி ஆசைமணி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். விவசாயியான மாயப்பன், குடும்ப பிரச்சினையால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மாரியப்பன் திடீரென பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.