என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழி அருகே மேலையூரில் உள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணைக்கு வந்த மேட்டூர் நீைர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் உள்ள கடைசி கதவணை வழியாக பூம்புகார் கடலில் சங்கமிக்கும்.

    ஒவ்வொரு வருடமும் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இந்த கடைசி கதவனையை வந்தடையும். அவ்வாறு இந்த ஆண்டு மேட்டூரில் கடந்த 24ம் தேதி தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் 10 நாட்களில் இக்கதவணையை இன்று வந்தடைந்தது. கதவணை வந்தடைந்த காவிரி தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள், மயிலாடுதுறை உபகாட்ட செயற் பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் விவசாயிகள் படையலிட்டும், மலர்தூவியும் வணங்கி வரவேற்றனர்.

    இக்கதவணையில் தண்ணீர் தேக்கி வைத்து ஒவ்வொரு பாசன ஆறுகள், கிளை வாய்க்கால்களுக்கும் மற்றும் பெருந்தோட்டம் ஏரிக்கும் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். 

    இதன் மூலம் 3057 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு பெருந்தோட்டம் ஏரி பாசனத்தின் மூலம் 2020 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    தண்ணீர் வந்தடைந்தது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு உரிய நேரத்தில் காவிரி தண்ணீர் வந்து சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு 20 நாட்களுக்கு முன்னரே கிடைத்துள்ளதால் மகிழ்சியோடு கூடுதல் பரப்பளவில் சாகுபடியை தொடங்குவோம் என தெரிவித்தனார்.அதே நேரம் முறைவைக்காமல் தண்ணீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிச்சாவரம் முதல் பழையாறு வரை 20 கி.மீ தூரம் படகில் இரு கை சிலம்பம் சுற்றி 2 சிறுவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
    சீர்காழி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் அம்சா தம்பதியினர். இவர்களுக்கு 6ம் வகுப்பு பயிலும் அதியமான் (12), 4ம் வகுப்பு பயிலும் ஆதிஸ்ரீ (9) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் மாவீரர் சிலம்ப கலைக்கூடத்தில் பாரம்பரிய விளையாட்டான சிலம்ப விளையாட்டை கற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தொடங்கிய சிலம்பம் சுற்றும் சாதனை முயற்சி மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு வரை 10 கி.மீ தூரம் தொடர்ந்து 2 மணி நேரம் படகில் இரு கைகளாலும் கம்பு சிலம்பம் சுற்றி உலக சாதனை நடத்தினர்.

    பழையாறு வந்தடைந்த சிறுவர்களை சீர்காழி எம்.எல்.ஏ.பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி வரவேற்றனர். நிறைவில் ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் 2 மணி நேரத்தில் நிறைவு செய்த சாதனையை அங்கீகரித்து, சான்றிதழ், பதக்கங்களை அதன் நிறுவனர் ஜேக்கப்ஞா னசெல்வன், தலைமை அதிகாரி எஸ்தர் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

    இந்த சாதனையை  இந்த வயது பிரிவில் இதுவரை எவரும்மேற்கொ ள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை புரிந்த மாணவ ர்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், பழையாறு மீனவ பஞ்சாய த்தார், மீனவ கிராம மக்கள் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவித்து பாராட்டினர்.

    சீர்காழியில் ஜமாபந்தி நிறைவு நாளில் 41 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி வட்டத்துக்கு உள்பட்ட 94வருவாய் கிராமங்களுக்கான கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் மொத்தமாக 635 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் 283 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 311மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 

    41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை வகித்து, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித்தொகைகோரி மனு  அளித்து ஏற்றுக்கொள்ள ப்பட்ட தகுதியுடைய 41 பயனாளிகளுக்கு அவற்றிக்கான சான்றிதழ் ஆணையினை வழங்கினார்.

    அதேபோல் 15 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட்கார்டு) வழங்கி னார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஆதிதிராவிடர் நலன் தனி தாசில்தார் இளங்கோவன், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் சாந்தி, குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் சபிதாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்து சம்பாதித்து ரஷ்யாவில் படிக்க வைத்து மகளை டாக்டர் ஆக்கிய பெண்
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ரமணி. இவருக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். 24ஆண்டுகளுக்கு முன்பு விஜயலட்சுமி 11 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது ரமணியின் கணவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.


    கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டு உறவினர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் குடும்பத்தை காப்பாற்ற மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் கழுவி சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலைக்கு சென்றார். மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குபவர்கள் தரும் மீன்களை உரசி செதில்கள் நீக்கி அதை துண்டாக வெட்டி சுத்தம் செய்து கொடுப்பது இவரது பணியாகும்.

    இதற்காக 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மீன் வாங்குபவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். காலச்சக்கரம் சுழன்ற நிலையில் மூத்த மகன் ரவிச்சந்திரன் ரத்தநாள சுரப்பி குறைபாடு என்ற மருத்துவத்தால் சரிசெய்ய முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக இவர் ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது.

    இதனால் 10-வதுக்கு மேல் படிப்பை தொடர முடியாமல் தற்போது வீட்டிலேயே இருக்கிறார். இவருக்கு மருந்து மாத்திரைகளுக்கு மாதத்தில் பல ஆயிரம் ரூபாய் செலவாகும் நிலையில் நன்கு படித்து வந்த ஒரே மகளான விஜெயலட்சுமி 12-ம் வகுப்பு படித்துவிட்டு மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்ந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற தனது மகளின் ஆசையை நிறைவேற்ற தனது சொந்த வீடு மற்றும் நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தார்.

    தற்போது ரஷ்யாவில் படித்து முடித்து மருத்துவராய் திரும்பியுள்ள மகள் விஜயலட்சுமி இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற வேண்டிய அங்கீகார தேர்வு எழுத வேண்டியது உள்ளதால் அதற்காக பயின்று வருகிறார். இன்னமும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்யும் பணியில் ரமணி ஈடுபட்டு வருகிறார்.

    கூட்டுக்குள் இருக்கும் குஞ்சுகளுக்கு எங்கெங்கோ பறந்து திரிந்து உணவை எடுத்து வந்து ஊட்டி வளர்க்கும் தாய்ப் பறவை போல, சொத்துக்களை இழந்தாலும், தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய கல்வி செல்வத்தை முழுமையாக கொடுத்த திருப்தி தாய் ரமணியின் கண்களில் தெரிகிறது. ரத்த நாள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு அரசு சார்பில் மருத்துவ உதவி வழங்கினால் அதுவே தனக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும் என்று கண்களில் ஈரம் கசிய ரமணி தெரிவிக்கின்றார்.

    மயிலாடுதுறையில் தரைக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவோர் மீது நகராட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    அந்த வகையில் பேருந்து நிலையம் மற்றும் வண்டிக்காரத்தெரு பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகள் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதால் ரூபாய் 500 வரை அபராதம் விதித்தும், வியாபாரிகளின் தராசுகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

    மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களிடமிருந்து சொற்ப அளவில் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விற்பனை செய்யும் தரைக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி துறையினரை கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் தரைக்கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் குற்றம்சாட்டினர். 

    சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி துறை அதிகாரிகள், போலீசார். பேச்சுவார்த்தை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்றும், பிளாஸ்டிக் பை விற்பனை செய்யும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    வைத்தீஸ்வரன் கோவில் அருகே சாலையில் பாலை ஊற்றி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர் சங்கத்தின் மூலமாக வைத்தியநாதபுரம், கொண்டத்தூர், கதிராம ங்கலம், பாகசாலை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பசும்பாலை ஆவின் நிர்வாகம் கொள்மு தல் செய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பால் கொள்முதல் செய்வதற்கான தொகையை வழங்காமல் உற்பத்தியாளர்களை அலைக்கழித்து வருவதா கவும், இதுகுறித்து வைத்தீ ஸ்வரன்கோவில் ஆவின் பால் நிர்வாகத்திடம் வைத்தியநாதபுரம் மக்கள் கேட்டதால் தங்கள் பகுதியில் கறந்த பசும்பாலை கொள்முதல் செய்யாமல் பால் கொள்முதலை நிறுத்தி விட்டனராம்.

    இதனால் சுமார் 200 லிட்டர் பால் வீணாகி விட்டதாக கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆவின் பால் நிர்வாகிகளை கண்டித்து வைத்தியநாதபுரம் சாலையில் பாலை ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தரங்கம்பாடி பேரூராட்சி கூட்ட முடிவில் துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் தள்ளு வண்டிகளை நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, தரங்கம்பாடி பேரூராட்சியில் கவுன்சிலர் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கமலக்கண்ணன் வரவேற்றார்.

    இதில் பூம்புகார் தொகுதி நிவேதாமுருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளில் குடிநீர், மின்வசதி மற்றும் சாலை வசதிகள் குறித்து கவுன்சிலர்கள் குறைகளை தெரிவித்தனர். 

    விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிவேதாமுருகன் எம்.எல்.ஏ பேசினார். முன்னதாக பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வண்டிகளை 10 பேருக்கு வழங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, அலுவலக ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மயிலாடுதுறை அருகே தன் மனைவியிடம் பேசியதை கண்டித்த டிரைவரை அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு தூக்கணாங்குலத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சாமியப்பன். லாரி டிரைவர் (வயது 52). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இதற்கு முன்பு ஆனதாண்டவபுரம் ரோடு அருகே உள்ள தெருவில் வசித்து வந்துள்ளார். அதை விற்பனை செய்துவிட்டு தூக்குனாங்குலத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

    இவர் வீட்டுக்கு அருகே அவருடைய தம்பி வீரமணியும் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரமணியின் மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்குசென்று விட்டாராம். 

    தன் மனைவியிடம் நீ ஏன் அடிக்கடி தனிமையில் பேசுகிறாய் என சந்தேகப்பட்டு வீரமணியிடம் சாமியப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதில் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வீரமணி அண்ணன் சாமியப்பனை தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த விழுந்த சாமியப்பனை மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ க்கல்லூரி அனுப்பி வை த்தனர். ஆனால் வழியிலேயே சாமியப்பன் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி புத்தூர் அரசு கலை கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
    சீர்காழி:

    தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் சுற்றுச்சூழலை காக்கும் முயற்சியை பின்பற்றும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புத்தூரில் உள்ள பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் மூன்றாமாண்டு படித்து இந்த ஆண்டு படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து விடைபெறும் 

    மாணவர்கள் அவர்களின் நினைவாக 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு தங்களின் நன்றியை கல்லூரிக்கு செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர். கி.விஜயலட்சுமி வணிகவியல் துறைத்த லைவர் முனைவர். மு. திருநா ராயணசாமி மற்றும் துறை பேராசிரியர்கள் முனைவர் வே.மகேஸ்வரி முனைவர் வே.சுரேஷ் முனைவர் ம.ராஜசேகர் முனைவர் வ.தம்பிஞானதயாளன் ஆகியோர் கலந்து கொ ண்டனர். 

    கல்லூரியிலிருந்து விடை பெறும் மாணவர்கள் இதுபோன்று மரக்கன்றுகளை நட்டு தங்களின் நினைவுகளை நிலைநாட்டும் நற்பண்பு களை கல்லூரி நிர்வாக மும் அனைத்துத் துறை பேராசிரியர்களும் மகிழ்வுடன் பாராட்டினர்.

    மயிலாடுதுறையில் வளர்ச்சியடைந்த 10 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகராட்சியின் நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் சிறப்பு உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. 

    கூட்டத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ.முன்னிலையில் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்.எஸ். குமார் வரவேற்றார். அப்போது மயிலாடுதுறை போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், புதிய பஸ் நிலையம் அமைவதற்கும், நகர வளர்ச்சியை பெருக்கவும், 10 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

    மயிலாடுதுறை நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் மயிலாடுதுறை எல்லையையொட்டி மணக்குடி கிராமத்தில் பூம்புகார்-கல்லணை நெடுஞ்சாலையில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ள இடத்தின் அருகில் 13.77 ஏக்கர் பரப்புடைய தருமபுரம் ஆதீனம் பராமரிப்பில் உள்ள சக்திபுரீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய ஆவணங்களை அரசுக்கு அனுப்பப்பட்டு தருமபுர ஆதீனம் முன் நுழைவு அனுமதி பெறப்ப ட்டுள்ளது.

    இடத்திற்கு கிரைய தொகை நிர்ணயம் செய்ய அரசிடம் தற்போது கோப்பு பரிசீலனையில் உள்ளது. மேலும் மயிலாடுதுறை நகராட்சியினை யொட்டி யுள்ள மன்னம்பந்தல் கிராமத்தில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 

    புதிய பஸ் நிலையத்தையும் புதிய கலெக்டர் அலுவலகத்தையும் ஒட்டி புறவழிச் சாலைகள் அமைய உள்ளதால் மயிலாடுதுறை தற்போது உள்ள எல்லையினையொட்டி அமைந்துள்ளமணக்குடி, மன்னம்ப ந்தல், வள்ளலா கரம், ரூரல், பட்டமங்கலம், நல்லத்துக்குடி, சித்தர்காடு, மாப்படுகை, திருவழுந்தூர், நீடூர், ஆகிய ஊராட்சிகளை மயிலாடுதுறை நகராட்சி யுடன் இணைக்க, வளர்ச்சி மற்றும் வருவாய் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு நகராட்சியின் தரத்தை உயர்த்திட நகரமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதோடு ஆலோசனை வழங்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    எனவே நகர பகுதியின் எல்லையினை ஒட்டிய மேற்கண்ட ஊராட்சிகளின் திருஇந்தளூர், நீடூர், மாப்படுகை, சித்தர்காடு, பட்டமங்கலம், நல்லத்து க்குடி, ரூரல் ஆகியவை வளர்ச்சியடைந்த கிராம ங்கள் என்பதால் நகராட்சியுடன் இணை த்தால் நகராட்சியின் தரம் உயர்வதுடன்வருவாய் பெருகும்.

    மேற்கண்ட வளர்ச்சியடைந்த 7 ஊரக பகுதிகளுடன் மணக்குடி மன்னம்பந்தல் வள்ள லாகரம் ஆகிய 3 ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட 10 ஊராட்சி பகுதியினை நகராட்சியுடன் இணைக்க உரிய அரசாணை பிறப்பிக்க கோரி அரசிற்கு அனுப்பப்பட உள்ளது.

    இவ்வாறு நகராட்சி சிறப்பு மன்ற கூட்டத்தில் ராஜகுமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அரசு அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழியில் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த சில தினங்களாக கத்திரிவெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுவந்தனர்.இதனிடையே சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொள்ளிடம், சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோயில், திருமுல்லைவாசல், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்தமழை பெய்யத் தொடங்கியது.

    திடீரென பலத்த காற்றும் வீசியது. இதனால் நகரில் தேர் வடக்கு வீதி பிரதான சாலையில் வேப்பமரம் வேரூடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. மழை பெய்ததால் சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காற்றுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறித்து அறிந்த அப்பகுதி வார்டு உறுப்பினர் முபாரக் சீர்காழி தீயணைப்பு த்துறையினருக்கு தகவல் அளித்தார்

    உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் மற்றும் வார்டு உறுப்பினர் முபாரக் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். இதேபோல் சீர்காழி அடுத்த அகணி ஊராட்சி தென்னங்குடி பகுதியில் மின்கம்பி பலத்த காற்றில் அறுந்து சாலையோரம் தாழ்வாக தொங்கியது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் உஷ்ணம் குறைந்துபொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    மயிலாடுதுறை அருகே உள்ள தோப்பிடையாள் காளியம்மன் கோவிலில் பச்சை-பவள காளி விழா நடைபெற்றது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மாமாகுடி கிராமத்தில் கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்படியாள் ஸ்ரீ காளியம்மன் கோவில் உள்ளது.
     
    இக்கோவிலில் நடைபெறும் காளியாட்ட உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் காளி ஆட்ட உற்சவம் நேற்று நடைபெற்றது.

    90வது ஆண்டாக நடைபெறும் உற்சவத்தை முன்னிட்டு கிராமமக்கள் காப்புகட்டி பால்குடம் எடுத்து மாரியம்மன் காளியம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்ய ப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மாமாகுடி பிள்ளையார்கோவில் கோவிலில் இருந்து அலகுகாவடி 16அடிநீல அலகு குத்தியும் பக்தர்கள் வீதியுலாவாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.  விழாவின் முக்கிய நிகழ்வாக பச்சைக்காளி பவளக்காளி திருஉருவத்திற்கு மாரிய ம்மன் கோவிலில் படையலிட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
     
    காளியம்மன் கரகம் புறப்பாடு செய்யப்பட்டு காளி ஆட்ட உற்சவம் மேளதாள வாத்தியஙகள் முழங்க தொடங்கியது. பச்சைக்காளி பவள க்காளி ஆகிய இரு அம்மன்களுக்கும் பொது மக்கள் வேண்டுதலை நிறைவேற்றகோரி மாலை அணிவித்து வணங்கினர்.

    தொடர்ந்து 1 மணிநேரம் கண்கவர் வாணவேடிக்கை விண்ணை அதிரச்செய்ய பச்சைக்காளி பவளக்காளி ஆக்ரோசத்துடன் திருநடனம் புரிந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. 3 மணிநேரம் காளியாட்ம் நடைபெற்றது. 

    பின்னர் காளி ஆட்ட வீதியுலா தொடங்கியது. விடியவிடிய வீதியுலா சென்று இரவு காளிகள் கோவிலை வந்தடையும் காளி ஆட்டத்தை பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். காளி ஆட்டங்களைதங்கள் செல்போனில் படம்பிடித்தனர். 
    பொறையார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×