search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயனாளி ஒருவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் சான்றிதழ் வழங்கினார்.
    X
    பயனாளி ஒருவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் சான்றிதழ் வழங்கினார்.

    ஜமாபந்தி நிறைவு - 41 மனுக்களுக்கு தீர்வு

    சீர்காழியில் ஜமாபந்தி நிறைவு நாளில் 41 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி வட்டத்துக்கு உள்பட்ட 94வருவாய் கிராமங்களுக்கான கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் மொத்தமாக 635 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவற்றில் 283 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 311மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. 

    41 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமை வகித்து, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித்தொகைகோரி மனு  அளித்து ஏற்றுக்கொள்ள ப்பட்ட தகுதியுடைய 41 பயனாளிகளுக்கு அவற்றிக்கான சான்றிதழ் ஆணையினை வழங்கினார்.

    அதேபோல் 15 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை (ஸ்மார்ட்கார்டு) வழங்கி னார். அப்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஆதிதிராவிடர் நலன் தனி தாசில்தார் இளங்கோவன், சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் சாந்தி, குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் சபிதாதேவி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×