என் மலர்
உள்ளூர் செய்திகள்

துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் தள்ளு வண்டி வழங்கல்.
துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் தள்ளுவண்டிகள்
தரங்கம்பாடி பேரூராட்சி கூட்ட முடிவில் துப்புரவு பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் தள்ளு வண்டிகளை நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, தரங்கம்பாடி பேரூராட்சியில் கவுன்சிலர் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கமலக்கண்ணன் வரவேற்றார்.
இதில் பூம்புகார் தொகுதி நிவேதாமுருகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளில் குடிநீர், மின்வசதி மற்றும் சாலை வசதிகள் குறித்து கவுன்சிலர்கள் குறைகளை தெரிவித்தனர்.
விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிவேதாமுருகன் எம்.எல்.ஏ பேசினார். முன்னதாக பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் வண்டிகளை 10 பேருக்கு வழங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ, அலுவலக ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






