என் மலர்
மயிலாடுதுறை
விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அண்ணா கல்யாண மண்டபத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் செய்ய வி.ஏ.ஓ.க்கள், பற்றாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்புக்கு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலர் பாண்டியன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பு நடத்தினார்.
மாவட்ட கொள்முதல் மற்றும் இயக்கம் துறை மேலாளர் பன்னீர்செல்வம், தரக்கட்டுபாட்டு பொருப்பு மேலாளர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது விவசாயிகளிடம் இருந்து விவசாயம் செய்த நிலத்துக்கு சிட்டா அடங்களை ஆன்லைனில் பதிவு செய்து அந்த பதிவு சரியானதா என வி.ஏ.ஓ., வேளாண்மை அலுவலரும் ஒப்புதல் செய்யவேண்டும்.
இதன் பிறகுதான் நேரடி கொள்முதல் செய்யும் பற்றாளர் விவசாயிகளிடம் இருந்து ஈரப்பதம் இல்லாமல் நெல்லை எடுக்கவேண்டும் என பயிற்சியின் போது வலியுறுத்தப்பட்டது.
இதற்கான பயிற்சிக்கு மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி, உள்ளிட்ட வி.ஏ.ஓ.க்கள், பற்றாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறையில் ஒரு கிராம நிர்வாக அலுவலர் சிட்டா அடங்கல் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதை கண்டுபிடித்தனர்.
அந்த முறைகேடுகள் இனி நடந்துவிடாமல் தடுக்கவே மாவட்ட கலெக்டர் லலிதா ஆலோசனைப்படி இந்த ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழியில் வீட்டில் வைத்து பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
சீர்காழி:
தமிழக அரசு குடும்பஅட்டைதாரர்களுக்கு முழு கரும்பு, மஞ்சள் பையுடன்
21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகை வழங்கிட உத்தரவிட்டு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி சீர்காழி வட்டத்தில் 97 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள ரேஷன் கடையில் உள்ள
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தக் கடை பிரதான சாலையில் அமைந்துள்ளது.
கடையில் போதிய இடவசதி இல்லை எனக் கூறி அருகில் அண்ணா தெருவில் ஒரு வீட்டினை பிடித்து, ரேஷன் கடை ஊழியர்கள் அங்கு அமர்ந்து இன்று காலை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிடும் முனைப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் அந்த வீட்டில் குவிந்தனர்.
வீட்டிற்கு சென்று பொருட்களை வாங்கி, வெளியே வர ஒரே வழி என்பதால் அந்த குறுகிய வழியில், குறுகிய இடத்தில் பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு பரிசுத் தொகுப்பு பெற்று செல்ல முனைப்பு காட்டினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அருகில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் திடீரென பொதுமக்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறி கூடியதால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது.
பரிசு தொகுப்பு வாங்க வந்த மக்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் வரிசையில் நின்றனர். முக கவசம் அணிந்து பொருட்கள்
வாங்க வேண்டும் என ஊழியர்களும் அறிவுறுத்தவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி நகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்த போதும் பொதுமக்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளாமல் பரிசுத் தொகுப்பு வாங்கி சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஆர்வமாக இருந்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெற வருபவர்களுக்கு டோக்கன் முறையில் தேதி குறிப்பிட்டு சமூக இடைவெளியுடன் நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுச் செல்ல அதிகாரிகளுக்கு அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்ற தொகுப்பில் 20 பொருட்களுக்கு பதிலாக 18 பொருட்களும் சிலருக்கு 19 பொருட்களும் இருந்ததாக குடும்ப அட்டைதாரர்கள் கூறினார்.
சிலருக்கு ரவை, வெள்ளை உளுந்து போன்ற பொருள் இல்லாமல் இருந்ததாக தெரிவித்தனர்.
சீர்காழியில் ஊரடங்கை மீறி திறந்த 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழியில் முழுமுடக்கம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் நகராட்சி ஆணையர் பட்டுசாமி தலைமையில் குழுவினர் நகரில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என பொதுமுடக்க விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது மட்டன்கடை, மீன்கடை, பிளாஸ்டிக்கடை திறந்து வியாபாரம்
செய்த 9 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.4900 அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
சீர்காழி:
தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, வெல்லம், முழுகரும்பு உள்ளிட்ட துணிப்பையுடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.
சீர்காழி வட்டாரத்தில் 97ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்படவுள்ளது.
அதன்படி சீர்காழி தென்பாதியில் உள்ள ரேசன் கடை, சட்டநாதபுரம்
அங்காடி ஆகியவற்றில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை சீர்காழி குடிமைபொருள் வட்ட வழங்கல் வட்டாட்சியர் சபிதாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய சபிதாதேவி, குடும்ப அட்டைதாரர்கள் அரசின் பொங்கல்பரிசுதொகுப்பை சமூக இடைவெளியுடன், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ளலாம்.
முழுமையாக அனைத்து கார்டுதாரர்களுக்கும் விடுபடாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றார்.
சீர்காழியில் சாலையில் திரிந்த 25 மாடுகள் பிடித்து அடைக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் பிரதான போக்குவரத்து சாலைகளில் கால்நடைகள் தினந்தோறும் சுற்றி திரிகின்றது.
இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் வரை விபத்துக்குள்ளாகி வருகின்றது.
தொடர் விபத்துகளால் வாகனங் களில் செல்பவர்கள்,
உயிரிழப்பு மற்றும் கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது.
இதனையடுத்து சீர்காழி நகராட்சி ஆணையர் கால்நடைகளை
முறையாக பராமரிக்காமல் சாலைகளில் சுற்றிதிரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்
என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி சீர்காழி நகர் பகுதியில் பிரதான சாலைகளில் சுற்றித் திரிந்த
25-க்கும் மேற்பட்ட மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி வளாகத்தின் ஒரு பகுதியில் அடைத்தனர்.
மாடுகளை தேடி வந்த உரிமையாளாகளிடம் ஒவ்வொரு
மாடுகளுக்கும் தலா ரூ.1000-ம், கன்றுகளுக்கு தலா ரூ.500-ம்
அபராதம் விதித்து ஆணையர் பட்டுசாமி உத்தரவிட்டார்.
சீர்காழியில் டாஸ்மாக்கில் திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி ஈசானிய தெருவில் மயானத்திற்கு எதிரே டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இந்த கடையின் ஊழியர்கள் இரவில் வழக்கம்போல்
கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, முன்பக்க இரும்பு கதவும், அங்குள்ள சி.சி.டி.வி கேமராவும் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
தில்லை நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சீர்காழி கோவிந்தராஜன் நகரைச் சேர்ந்த சக்திவேல் (வயது 19) கடப்பாரையால் இருப்புக் கதவை உடைப்பது தெரியவந்தது.
மேலும் ஆள்நடமாட்டம் இருந்ததால் திருட்டு முயற்சியை கைவிட்டு
தப்பிச் சென்றதும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சக்திவேலை
போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எருக்கூர் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதாக கூறி நவீன அரிசி ஆலை முன்பு அரிசியை கொட்டி ஒப்பாரி வைத்து மக்கள் போராட்டம் நடத்தினர்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை அமைந்துள்ளது.
இந்த அரிசி ஆலையில் அரைக்கப்படும் அரிசியே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இங்கு இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசிகள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதை கண்டித்தும் தரமான அரிசி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினரும், பொது மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே எருக்கூர் நவீன அரிசி ஆலை முன்பு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத தரமற்ற
அரிசியைத் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக எருக்கூர் ரவுண்டானா பகுதியிலிருந்து பேரணியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் அரிசிஆலை முன்பு வந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர்கள் நீதிசோழன், தனசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஒன்றிய தலைவர்கள் ராமச்சந்திரன், பிரபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் செல்லப்பன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி, பெண்கள் சுற்றிநின்று ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம்-சீர்காழி பிரதான தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதை அடுத்து சீர்காழி டி.எஸ்.பி. லாமெக் தலைமையில் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
சோழம்பேட்டையில் ரேசன் அரிசி மூட்டைகள் குட்டையில் வீசப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்துள்ள சோழம்பேட்டை கிராமத்திலுள்ள இரு குட்டைகளில் ரேசன் கடைகள் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்படுகின்ற அரிசிகள் மூட்டை, மூட்டையாக கிடந்தது அப்பகுதியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோழம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் அரசு வழங்கும் இலவச ரேசன் அரிசியையே நம்பி வாழும் சூழலில் அக்கிராமத்திலுள்ள மாரியம்மன்கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இரு குட்டைகளிலும் ரேசன் அரிசி மூட்டை, மூட்டையாக மிதப்பதாக தகவல் அறிந்து பொதுமக்கள் சென்று பார்த்து வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் கூறியபோது, அன்றாடம் உணவுக்கு பெரும்பாலான குடும்பங்கள் அரசு வழங்கும் ரேசன் அரிசியை தான் நம்பி வாழும் சூழலில் சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள குட்டைகளில் மூட்டை, மூட்டையாக அரிசி மிதப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தரமான அரிசியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் ரேசன் அரிசி கொட்டப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. மாவட்ட மற்றும் வட்ட வழங்கல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றார்.
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு அளவீடு செய்து வழங்கும் இக்காலத்தில் குளத்திலும், குட்டையிலும் தூக்கிவீசப்பட்டிருப்பதை
அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.
ஆச்சாள்புரத்தில் உள்ள சிவலோக தியாகராஜர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருவெண்ணிற்றுயம்மை உடனாகிய சிவலோக தியாகராஜர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் தனி சன்னதியில் திருமணக் கோலத்தில் திருஞான சம்பந்தர் பெருமான் தோத்திர பூர்ணாம்பிகையுடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தனுர்மாத வழிபாட்டிற்காக வந்தார்.
தொடர்ந்து மூலவர் சிவலோக தியாகராஜர் சுவாமி, திருவெண்ணிற்றுயம்மை, ரிணவிமோசனர், திருஞானசம்பந்தர் பெருமான் ஆகிய சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
கோசாலையில் பசு மாடுகளுக்கு பழங்கள் அளித்து வழிபாடு செய்தார். முன்னதாக கோவில் கட்டளைமடத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்ளூர் பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொள்ளிடம் சோதனைசாவடி அருகே பாலத்தின் விரிசலை போலீசார் சீரமைத்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் இணைப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்புராடு உடைந்து கம்பிகள்
வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
இதனால் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தில் செல்லும்
அனைத்து வாகனங்களும் அச்சத்துடன் சென்று வந்தன.
வாகன ஓட்டிகள் மிகுந்த பயத்துடன் வாகனங்களை இயக்கி வந்தனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், கார் போன்ற வாகனங்களில் செல்பவர்களும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.
கடந்த 10 நாட்களாக அதிகாரிகள் பாலத்தின் நடுவே உடைந்த பகுதியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் ஆகியோர் தங்களது சொந்த செலவில் பணியாட்கள் மூலம் தற்காலிகமாக பாலத்தின் நடுவில் ஏற்பட்ட விரிசலை சிமெண்ட்,
ஜல்லி கலந்த கான்கிரீட் கலவையை பாலத்தின் உடைந்த பகுதியில் வைத்து பூசி சரி செய்யும் பணியில் ஈடுபட்டு பாலத்தின் விரிசலை சரி செய்தனர்.
அதனைத்தொடர்ந்து போலீசார் முயற்சியால் பாலத்தின் நடுவில் ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சரி செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்த கொள்ளிடம் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி நிரந்தரமாக பாலத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி. லாரியை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவேள்விக்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. பழைய எண்ணெய் கிணறு உள்ளது.
இங்கு குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்தில் இருந்து கடந்த 10 நாட்களாக தளவாட பொருட்களை லாரியில் ஏற்றி வந்து 15&க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆழ்துளை போடும் கருவிகள் மூலம் பணிகள் நடந்து வருவதாகவும்,
இதனால் புதிதாக ஒரு எண்ணெய் கிணறு அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முயற்சிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து திருவேள்விக்குடி மெயின்சாலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்
ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது குத்தாலம் எரிவாயு சேமிப்பு மையத்தில் இருந்து தளவாட பொருட்கள் ஏற்றி வந்த லாரியை மறித்து போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் மற்றும் ஓ.என்.ஜி.சி. பாதுகாப்பு ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச
பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடல் அரிப்பை தடுக்க மீனவ கிராமங்களில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்ககோரி ராமலிங்கம் எம்.பி.யிடம் மனு அளித்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே பெருந்தோட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் மோகனா ஜெய்சங்கர் தலைமையில் நாயக்கர் குப்பம், சாவடி குப்பம் மற்றும் மடத்துகுப்பம் ஆகிய மீனவ கிராம பொறுப்பாளர்கள் ஒன்றிய கவுன்சிலர் வள்ளி ஆகியோர் ராமலிங்கம் எம்.பியை சந்தித்து கோரிக்கை
மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, பெருந்தோட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம், சாவடி குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் கிட்டத்தட்ட 1000 மீனவ குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மூன்று மீனவ கிராம மக்கள் சிறிய படகுகள் மூலம்
மீன்பிடி தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர். மீன்பிடித் தொழில் இல்லாத காலங்களில் மீனவர்கள் தங்களுடைய படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 3 மீனவர் கிராமங்களில்
கடலரிப்பு அதிகரித்துக் காணப்படுவது மேற்கண்ட மூன்று கிராமங்களில் கிட்டத்தட்ட 300 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரையில் தங்களுடைய படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் மடத்துக்குப்பம் பகுதியில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு
கடல்நீர் உள்ளே புகும் அபாயம் உள்ளது.
இதனால் மீனவ குடியிருப்புகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு 3 மீனவ கிராமங்களில் உள்ள கடற்கரையில் கருங்கல் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்
என கூறப்பட்டுள்ளது.






