என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தாய்ப் பாலின் மகத்து வத்தைப் பற்றியும், தாய்ப் பாலுட்டுவதால் குழந்தை களுக்கு ஏற்படும் நன்மை பற்றி கூறப்பட்டது.
    • தாய் மற்றும் குழந்தையின் உறவு வலுப்படும் முறை பற்றியும், தாய்ப்பாலூட்டி மார்பக மற்றும் கருமுட்டைப்பை புற்று நோயை வராமல் தடுப்பது பற்றி கூறப்பட்டது.

    ஓசூர், 

    உலக தாய்ப்பாலூட்டும் வாரத்தை முன்னிட்டு, ஓசூர் குணம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை சார்பில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இதில், பெண்களுக்கு தாய்ப் பாலின் மகத்து வத்தைப் பற்றியும், தாய்ப் பாலுட்டுவதால் குழந்தை களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும், பேறு காலத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை நீக்குவது குறித்தும், தாய் மற்றும் குழந்தையின் உறவு வலுப்படும் முறை பற்றியும், தாய்ப்பாலூட்டி மார்பக மற்றும் கருமுட்டைப்பை புற்று நோயை வராமல் தடுப்பது பற்றியும் மகப்பேறு டாக்டர்கள் கவிதா செந்தில், வனிதா பிரதீப் குமார், மற்றும் ஸ்ரீசுதா விஜி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் நாகராஜன், தனசேகரன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    • அரசு பள்ளி எதிரே வந்த போது பின்னால் வந்த தனியார் ேபருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.
    • இதில் கார் பலத்த சேதம் அடைந்து உள்ளே இருந்த 5 பேர் காயமடைந்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் ரஞ்சித். இவரது மனைவி பவித்ரா. இவர்கள் இருவர் மற்றும் உறவினர்கள் 5 பேருடன் பெங்களூரில் இருந்து காரில் காஞ்சிபுரத்திற்கு புடவை எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரி அருகே தேசிய ெநடுஞ்சாலை யில் காவேரிப்பட்டணம், திம்மாபுரம் அருகே அரசு பள்ளி எதிரே வந்த போது பின்னால் வந்த தனியார் ேபருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது.

    இதில் கார் பலத்த சேதம் அடைந்து உள்ளே இருந்த 5 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வரும் வழியிலேயே பவித்ரா உயிரிழந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கே.ஆர்.பி அணை, தளி மற்றும் கெலமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதி, இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அப்பகுதிகளை மேம்படுத்தப்படும்.
    • மேலும், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் உள்ள படகு இல்லம் சுற்றுலாத் துறையின் மூலம் மேம்பாடு செய்வதற்காக கருத்துரு தயார் செய்து, அரசிற்கு பரிந்துரைக்கப்படும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றுலாப் பயணிகள் சிறப்பாக உள்ளது.

    தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் நேற்று கிருஷ்ண கிரி மாவட்டத் திற்கு வந்தார்.

    அவர் கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டல் மற்றும் ஓசூர் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள விடுதிகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகளை பார்வை யிட்டார்.

    மேலும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவை பார்வையிட்டார். அவருடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் சரயு, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன் (ஓசூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    ஆய்வின் போது அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ஓசூரில் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் தமிழ்நாடு சுற்றுலா விடுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பில் விடுதி அறைகள் பராமரிப்பு பணிகள், நுழைவு வாயில் அமைக்கும் பணிகள், உணவகம் உள்ளிட்ட வைகள் சீரமைக்கப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    மேலும், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் உள்ள படகு இல்லம் சுற்றுலாத் துறையின் மூலம் மேம்பாடு செய்வதற்காக கருத்துரு தயார் செய்து, அரசிற்கு பரிந்துரைக்கப்படும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2020-ம் ஆண்டில் 14 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2021-ம் ஆண்டில் 16 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2022-ம் ஆண்டில் 20 லட்சம் சுற்றுலாப் பயணி களும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் உள்ள கே.ஆர்.பி அணை, தளி மற்றும் கெலமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதி, இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அப்பகுதிகளை மேம்படுத் தப்படும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றுலாப் பயணிகள் சிறப்பாக உள்ளது என்று கூறும் அளவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திர குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் ரவி, தாசில்தார்கள் சம்பத் (கிருஷ்ணகிரி), சுப்ரமணி (ஓசூர்), ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் வசந்தன், உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பட்டாசு குடோன் வெடித்து பலியான–வர்களின் உடல் சிதறி கிடந்த அனைத்து இடங்களையும், சுமார் 250 மீட்டர் தொலைவு வரை சுற்றி பார்வயைிட்டும் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
    • அந்த பகுதி முழுவதும் பார்வையிட்டு தொடர்ந்து 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 29-ந் தேதி பட்டாசு குடோனில் வெடிவிபத்து நடந்தது 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்ட தடயவியல் துறை ஆய்வு செய்ததில் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்த விபத்து நடந்தது என்று அமைச்சர் கூறினார். இந்த விபத்து குறித்து கிருஷ்ண–கிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வெடிவிபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் பட்டாசா? கியாஸ் சிலிண்டரா? என்பது குறித்து பாராளு–மன்றத்திலும் விவாதம் நடந்ததால் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் இன்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் பழைய பேட்டையில் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    அப்போது சம்பவம் குறித்து தகவல்களை ஐ.ஜி. சுதாகர், மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டறிந்தார். மேலும், பட்டாசு குடோன் வெடித்து பலியான–வர்களின் உடல் சிதறி கிடந்த அனைத்து இடங்களையும், சுமார் 250 மீட்டர் தொலைவு வரை சுற்றி பார்வயைிட்டும் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

    மேலும், விபத்தில் பலி யான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வ–ரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.

    ன்று சென்னையில் இருந்து தடய–அறிவியல் துறை இயக்குனர் விசாலாட்சி விஜயலட்சுமி, துணை இயக்குனர்கள் நளினி, சண்முகசுந்தரம் ஆகியோர் வெடி–விபத்து நடத்த கிருஷ்ணகிரிக்கு இன்று நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வெடிவிபத்து நடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதி முழுவதும் பார்வையிட்டு தொடர்ந்து 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு முனிராஜ் என்கிற விஜய்(27), சக்தி(24) ஆகிய 2 பேரும் சேகர் என்பவரை கொலை செய்தனர்.
    • 2 பேரும் சேகரின் மனைவி ரஞ்ஜினி வீட்டிற்கு சென்று கோர்ட்டில் வந்து எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று கூறியும், ஆபாசமாக திட்டியும் மிரட்டி சென்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்தவர் செல்லப்பா என்கிற சேகர். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு முனிராஜ் என்கிற விஜய் (27), சக்தி (24) ஆகிய 2 பேரும் கொலை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    நேற்று 2 பேரும் சேகரின் மனைவி ரஞ்ஜினி வீட்டிற்கு சென்று கோர்ட்டில் வந்து எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று கூறியும், ஆபாசமாக திட்டியும் மிரட்டி சென்றனர்.

    இதுகுறித்து ரஞ்ஜினி ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். 

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 60 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10,000- என்று கூறப்படுகிறது.
    • குட்கா பொருட்களை மோட்டர் சைக்கிளுடன் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் ஜுஜுவாடி சோதனைச்சாவடியில், நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 60 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10,000- என்று கூறப்படுகிறது.

    மேலும் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் (வயது29) மற்றும் மகிபால் சிங் (27) ஆகிய இருவரும் விற்பனைக்காக சேலத்திற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து, குட்கா பொருட்களை மோட்டர் சைக்கிளுடன் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    • சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்காண்டபள்ளி சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் (வயது53). தொழிலாளி. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

    ஆனால், மீண்டும் அவர் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது மகள் இஷிகா ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக நலனுக்காக மகா சண்டி யாகம் 2 நாட்கள் நடைபெற்றது.
    • விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே சர்வீஸ் ரோடு, மாருதி நகரில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, உலக நலனுக்காக மகா சண்டி யாகம் 2 நாட்கள் நடைபெற்றது.

    கடந்த திங்கட்கிழமை, கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, மற்றும் சிறப்பு பூஜைகளுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. நேற்று (செவ்வாய்கிழமை) சிகர நிகழ்ச்சியாக மகா சண்டி யாகம் நடந்தது

    இதையொட்டி, கோவில் அருகே பெரிய அளவிலான யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் நெய் ஊற்றியும், பூஜை பொருட்கள் மற்றும் மங்கள திரவியங்கள் சமர்ப்பித்து சண்டி யாகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை வெங்கட்ராமன் சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் யாகத்தை நடத்தினர். தொடர்ந்து கலசாபிஷேகம், சாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேலும் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்,பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 29-ந் தேதி பட்டாசு குடோனில் வெடிவிபத்து நடந்தது 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்ட தடயவியல் துறை ஆய்வு செய்ததில் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்த விபத்து நடந்தது என்று அமைச்சர் கூறினார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வெடிவிபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் பட்டாசா? கியாஸ் சிலிண்டரா? என்பது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதம் நடந்ததால் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் இன்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் பழையபேட்டையில் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    அப்போது சம்பவம் குறித்து தகவல்களை ஐ.ஜி. சுதாகர், மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டறிந்தார். மேலும், பட்டாசு குடோன் வெடித்து பலியானவர்களின் உடல் சிதறி கிடந்த அனைத்து இடங்களையும், சுமார் 250 மீட்டர் தொலைவு வரை சுற்றி பார்வயைிட்டும் ஐ.ஜி. ஆய்வு செய்தார். மேலும், விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.

    இதேபோன்று சென்னையில் இருந்து தடயஅறிவியல் துறை இயக்குனர் விசாலாட்சி விஜயலட்சுமி, துணை இயக்குனர்கள் நளினி, சண்முகசுந்தரம் ஆகியோர் வெடிவிபத்து நடத்த கிருஷ்ணகிரிக்கு இன்று நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வெடிவிபத்து நடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதி முழுவதும் பார்வையிட்டு தொடர்ந்து 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

    • கோவில் திருவிழா, விசேஷம் மற்றும் துக்க காரியங்களுக்கும் வெடிக்க பட்டாசுகளை ஜோட்டியிடம் அப்பகுதி பொதுமக்கள் வாங்கி செல்வார்கள்.
    • ஜோட்டி தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து மற்றும் அதற்கான மூலப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த வெடிவிபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியுடன் பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் முறையாக பராமரிப்புடன் பட்டாசுகளை பாதுகாப்புடன் வைத்திருக்கிறீர்களா என்று மாவட்ட நிர்வாகத்தினர் லைசென்சு வாங்கிய பட்டாசு கடைக்காரர்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து ஒரு பெண் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போச்சம்பள்ளியில் நாட்டு வெடிக்கான மருந்து மற்றும் மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த பெண் பட்டாசு வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஜோட்டி (வயது55). இவர் அதே பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பட்டாசுகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

    தீபாவளி மற்றும் அப்பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழா, விசேஷம் மற்றும் துக்க காரியங்களுக்கும் வெடிக்க பட்டாசுகளை ஜோட்டியிடம் அப்பகுதி பொதுமக்கள் வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் ஜோட்டி தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து மற்றும் அதற்கான மூலப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்.

    இதுகுறித்து ஜம்புகுட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வெடிமருந்து மற்றும் மூலப்பொருட்களை பதுக்கிய ஜோட்டி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரியில் நடந்த வெடிவிபத்துக்கு காரணம் பட்டாசா? அல்லது சிலிண்டரா? என்று தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் வீட்டில் வெடிமருந்து பொருட்களை பதுக்கி வைத்ததால் பெண் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நாங்கள் கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு ஓட்டல் நடத்தி வருகிறோம்.
    • காந்தி சாலை ஓட்டலில் இருந்து உணவுப்பொருட்கள் இங்கு எடுத்து வருவோம்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு குடோனில் கடந்த 29-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் பலியாகினர். இந்த விபத்திற்கு பட்டாசு குடோன் அருகில் ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததே காரணம் என தடயவியல் நிபுணர்கள் கூறி இருந்தனர்.

    இந்த நிலையில் விபத்து குறித்து விசாரிக்க சிப்காட் நில எடுப்பு பிரிவின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 1884 வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    பட்டாசு குடோன் விபத்து நடந்த இடத்தில் அதிகாரி பவணந்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். அப்போது விபத்தில் இறந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் மகள் சரண்யா, மருமகள் வினிதா ஆகியோர் விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பு காரணம் இல்லை என மனுவை அளித்தனர்.

    பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கிருஷ்ணகிரி, காந்தி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு ஓட்டல் நடத்தி வருகிறோம். தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் வியாபாரம் குறைந்தது. இதையடுத்து பழையபேட்டையில் ஒரு ஓட்டல் கடை தொடங்கினோம்.

    காந்தி சாலை ஓட்டலில் இருந்து உணவுப்பொருட்கள் இங்கு எடுத்து வருவோம். அவசர தேவைக்கு டீ, ஆம்லெட் போடுவதற்கு கியாஸ் சிலிண்டர் அடுப்புகளை பயன்படுத்துவோம். விபத்தில் ராஜேஸ்வரிக்கு சிறு தீக்காயம் கூட ஏற்படவில்லை சிலிண்டர்களை வெடிக்காத நிலையில் எடுத்துள்ளார்கள். ஆனால் ஓட்டல் சிலிண்டர் வெடித்ததாக கூறுகிறார்கள்.

    இது தொடர்பாக அதிகாரிகளே விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு கூற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள்.

    • கிராம மக்கள் வீடு கட்டுவதற்கு நிலங்கள் வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
    • ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம்.

    கிருஷ்ணகிரி,

    தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துமாரனப்பள்ளி ஊராட்சி போத்தசந்திரத்தை சேர்ந்த கிராம மக்கள் வீடு கட்டுவதற்கு நிலங்கள் வழங்க கோரி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    போத்தசந்திரம் கிராமத்தில், ஆதி தமிழர் சமுதாயத்தை சேர்ந்த, 40 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கென்று நிலங்கள் இல்லை. ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். போதுமான வசதிகளும் இல்லை. எங்கள் பகுதியில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அவற்றில் நாங்கள் வீடு கட்ட ஏதுவாக நிலங்களை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×