என் மலர்
நீங்கள் தேடியது "தாய்ப்பால் வார விழிப்புணர்வு"
- தாய்ப் பாலின் மகத்து வத்தைப் பற்றியும், தாய்ப் பாலுட்டுவதால் குழந்தை களுக்கு ஏற்படும் நன்மை பற்றி கூறப்பட்டது.
- தாய் மற்றும் குழந்தையின் உறவு வலுப்படும் முறை பற்றியும், தாய்ப்பாலூட்டி மார்பக மற்றும் கருமுட்டைப்பை புற்று நோயை வராமல் தடுப்பது பற்றி கூறப்பட்டது.
ஓசூர்,
உலக தாய்ப்பாலூட்டும் வாரத்தை முன்னிட்டு, ஓசூர் குணம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை சார்பில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், பெண்களுக்கு தாய்ப் பாலின் மகத்து வத்தைப் பற்றியும், தாய்ப் பாலுட்டுவதால் குழந்தை களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும், பேறு காலத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை நீக்குவது குறித்தும், தாய் மற்றும் குழந்தையின் உறவு வலுப்படும் முறை பற்றியும், தாய்ப்பாலூட்டி மார்பக மற்றும் கருமுட்டைப்பை புற்று நோயை வராமல் தடுப்பது பற்றியும் மகப்பேறு டாக்டர்கள் கவிதா செந்தில், வனிதா பிரதீப் குமார், மற்றும் ஸ்ரீசுதா விஜி மற்றும் குழந்தைகள் நல மருத்துவர்கள் நாகராஜன், தனசேகரன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.






