என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ் மற்றும் பர்கூர் மதியழகன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் ஆகியோர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
- கே.ஆர்.பி அணை, தளி மற்றும் கெலமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதி, இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அப்பகுதிகளை மேம்படுத்தப்படும்.
- மேலும், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் உள்ள படகு இல்லம் சுற்றுலாத் துறையின் மூலம் மேம்பாடு செய்வதற்காக கருத்துரு தயார் செய்து, அரசிற்கு பரிந்துரைக்கப்படும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றுலாப் பயணிகள் சிறப்பாக உள்ளது.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் நேற்று கிருஷ்ண கிரி மாவட்டத் திற்கு வந்தார்.
அவர் கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டல் மற்றும் ஓசூர் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள விடுதிகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகளை பார்வை யிட்டார்.
மேலும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவை பார்வையிட்டார். அவருடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் சரயு, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன் (ஓசூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
ஆய்வின் போது அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதா வது:-
ஓசூரில் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் தமிழ்நாடு சுற்றுலா விடுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் மதிப்பில் விடுதி அறைகள் பராமரிப்பு பணிகள், நுழைவு வாயில் அமைக்கும் பணிகள், உணவகம் உள்ளிட்ட வைகள் சீரமைக்கப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் உள்ள படகு இல்லம் சுற்றுலாத் துறையின் மூலம் மேம்பாடு செய்வதற்காக கருத்துரு தயார் செய்து, அரசிற்கு பரிந்துரைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 2020-ம் ஆண்டில் 14 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2021-ம் ஆண்டில் 16 லட்சம் சுற்றுலாப் பயணிகளும், 2022-ம் ஆண்டில் 20 லட்சம் சுற்றுலாப் பயணி களும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் 12 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் உள்ள கே.ஆர்.பி அணை, தளி மற்றும் கெலமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள வனப்பகுதி, இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளுக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் அப்பகுதிகளை மேம்படுத் தப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் உள்ள சுற்றுலாத் தளங்களை சுற்றுலாப் பயணிகள் சிறப்பாக உள்ளது என்று கூறும் அளவிற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட சுற்றுலா அலுவலர் கஜேந்திர குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் ரவி, தாசில்தார்கள் சம்பத் (கிருஷ்ணகிரி), சுப்ரமணி (ஓசூர்), ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் வசந்தன், உதவி செயற்பொறியாளர் ரவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






