என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • வீட்டில் யாரும் இல்லை. இந்நிலை யில் அவர்களது குடிசை வீட்டில் நேற்று மாலை திடீரென புகை வந்துள்ளது.
    • சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை எரிந்துள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த நேரிட மானப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி பெரியக்கா (65).

    நேற்று காலை வழக்கம் போல லட்சமணன் ஆடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு சென்றுள்ளார். பெரியக்காவும் ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலைக்கு சென்றுள்ளார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் அவர்களது குடிசை வீட்டில் நேற்று மாலை திடீரென புகை வந்துள்ளது.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை எரிந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து குடிசையில் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    இது குறித்து தகவலறிந்து வந்த பர்கூர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைப்பதற்குள் குடிசை முற்றிலும் எரிந்து நாசமானது.

    வீட்டில் இருந்த, 5 மூட்டை நெல், அரை மூட்டை அரிசி, ஒன்றரை மூட்டை கம்பு, 1 மூட்டை கேழ்வரகு உள்ளிட்ட உணவுப்பொருட்களுடன் ரேஷன், ஆதார், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்ககளும் தீயில் கருகின. விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களின் உயிரை பறிக்கின்ற உயிர் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.
    • மருத்துவரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களின் உயிரை பறிக்கின்ற உயிர் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

    மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரையும் மரண குழியில் தள்ளும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை அனைத்தும் பயனற்ற நிலையே நீடித்து வருகிறது.

    இந்த நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் தமிழக கவர்னரையும் கண்டித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தலின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மூத்த முன்னோடிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு நீட் தேர்வை ஒழித்து, தமிழ்நாட்டு மக்களின் கல்வி உரிமையையும், விலை மதிப்பிலாத உயிரையும் காக்க அணி திரண்டு பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிறப்பு, இறப்பு சான்றிதழ், டிரேடு லைசென்ஸ், கட்டிட திட்ட வரைவு அனுமதி உள்ளிட்ட சேவைகளையும் இணைய தளத்தின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்த படியே பெறலாம்.
    • இந்த செயலியை பதி விறக்கம் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய் தால், உங்கள் வரி பாக்கி களை வங்கி டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ முறையில் ஆன்லைனில் கட்டலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சியில், 33 வார்டுகளிலும் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வரிகளை நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று செலுத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாலும், மக்களின் நலன் கருதியும் நகராட்சிக்கு இணையம் மற்றும் மொபைல் ஆப் வழியாக வரி கட்டும் திட்டத்தை நகராட்சி தலைவர் பரிதா நவாப் நேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    கிருஷ்ணகிரி நகராட்சியில், சொத்துவரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி மற்றும் தொழில் வரி, குப்பை விரி உள்ளிட்டவைகளை நகராட்சி நிர்வாக ஆணையகரகத்தின் இணையதளத்தின் மூலம் நேரடியாக கட்டலாம்.

    பிறப்பு, இறப்பு சான்றிதழ், டிரேடு லைசென்ஸ், கட்டிட திட்ட வரைவு அனுமதி உள்ளிட்ட சேவைகளையும் இணையதளத்தின் மூலம் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே பெறலாம்.

    இணையதளத்தின் மூலம் கிருஷ்ணகிரி நகராட்சிக்குள் வசிக்கும் நபர்கள் தங்களை பதிவு செய்தால், அதில் வரும் 'க்யூ ஆர் கோட்' மூலம் வரி பாக்கிகளை செலுத்தியும், சலுகைகளையும் பெறலாம்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள், மற்றும் நகராட்சிக்கு தேவைப்படும் கோரிக்கைகளையும் இதில் தெரிவிக்கலாம்.

    மேலும் 'மொபைல் ஆப்' மூலம் வரி கட்டும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்தால், உங்கள் வரி பாக்கிகளை வங்கி டெபிட் கார்டு, நெட் பேங்கிங், யுபிஐ முறையில் ஆன்லைனில் கட்டலாம்.

    எனவே வரிபாக்கிகளை பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே பெற்று பயனடையலாம்.

    மேலும் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட த்தில் இணையாதவர்கள், பணம் கட்டாதவர்களையும் இணைக்கும் வகையில், 10 பேர் கொண்ட, 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பாதாள சாக்கடை திட்ட இணைப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நகராட்சி ஆணையாளர் வசந்தி, கணினி திட்ட உதவியாளர் ஜெயலட்சுமி, செயற் பொறியாளர் சேகர், வருவாய் ஆய்வாளர் தாமோதரன், இளநிலை பொறியாளர் அறிவழகன், இளநிலை உதவியாளர்கள் சரவணன், பாலச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கொலை செய்யப் பட்டு 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
    • மர்ம நபர்கள் அவருடைய கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள மொள்ளம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற கூலுவகுத்தான் (வயது75). விவசாயி.

    இவருக்கு 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். அனைவரும் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். மேலும் தனித்தனியாக விவசாயம் செய்து வந்தனர். மாரியப் பனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மாரியப்பன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ராயக்கோட்டை அருகே உள்ளுகுறுக்கை பக்கமுள்ள நல்லராலப்பள்ளியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கை, கால்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் கொலை செய்யப்பட்டு கிடந்தது காணாமல் போன மாரியப்பன் என்று தெரிய வந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    மர்ம நபர்கள் அவருடைய கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து போலீசார், விவசாயியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாரியப்பனை, அவரது தம்பி சின்னராஜின் மருமகன் மணி (35) என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்ததும், மணி தலைமறைவாகி விட்டதும் தெரியவந்தது. சொத்து பிரச்சினையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளி மணியை தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூர்-தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
    • மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஓசூர்,

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவஅணி ஆகிய வற்றின் சார்பில் நாளை, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூர்-தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன், பொருளாளர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் கட்சியினர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், மேற்கு மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரகாஷ் எம்.எல்.ஏ.கூறினார்.

    • கடந்த மாதம் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், பலர் குறைந்த நாட்களில் பலன் தரும் கொத்தமல்லி, கீரை சாகுபடியில் ஈடுபட்டோம்.
    • கடந்த வாரம் பெய்த மழையால் கொத்தமல்லி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், மத்திகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் மற்றும் கீரைகளான, புதினா, கொத்தமல்லி உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதில் குறிப்பாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.

    சந்தையில் கொத்தமல்லிக்கு ஆண்டு முழுவதும் வரவேற்பு உண்டு. இதனால், இச்சாகுபடி விவசாயிகளுக்குச் சந்தை வாய்ப்பு எப்போதும் இருக்கும்.

    கொத்தமல்லி இலையை பொறுத்தவரை சந்தைக்கு வரத்து மற்றும் நுகர்வுத் தேவையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும். அதிகபட்சமாக ஒரு கட்டு ரூ.25 வரை விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு வரத்து அதிகரித்ததால், படிப்படியாக விலை குறைந்து நேற்று ஒரு கட்டு ரூ.2 முதல் ரூ.5 வரை விற்பனையானது. மேலும், வழக்கத்தை விட விற்பனையும் சரிந்தது.

    இதனால், போக்குவரத்து செலவு, அறுவடை கூலிக்கு கூட விலை கிடைக்காததால், பல விவசாயிகள் கொத்தமல்லி அறுவடையைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், விற்பனையாகாத கொத்தமல்லி கட்டுகளை சாலையோரங்களில் வீசி வருகின்றனர்.

    இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறுகையில் கடந்த மாதம் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால், பலர் குறைந்த நாட்களில் பலன் தரும் கொத்தமல்லி, கீரை சாகுபடியில் ஈடுபட்டோம்.

    குறிப்பாக கொத்தமல்லியை அதிக விவசாயிகள் சாகுபடி செய்தனர். மேலும், கடந்த வாரம் பெய்த மழையால் கொத்தமல்லி விளைச்சல் வழக்கத்தை விட அதிகரித்தது.

    இதனால், சந்தைக்கு வரத்து அதிகரித்து, விலை சரிந்துள்ளது. விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடி மற்றும் சந்தை வாய்ப்பு தொடர்பாக முறையான ஆலோசனை மற்றும் வழி காட்டுதல் வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • புதர் பகுதியில் சடலமாக முனிரத்தினம்மாவின் உடல் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா அருகேயுள்ள பேட்ராயன தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்னம்மா (வயது38). இவர் தனது தங்கை மகனை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் மாலை நடைபயிற்சிக்காக சென்றார்.

    இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில், சுமார் இரவு 8 மணியளவில் பூதன ஹள்ளி பகுதியில் உள்ள ஒரு புதரின் அருகில் தலை, கை, கால்களில் பலத்த காயங்களுடன் சிறுவனின் அழுகை குரல் கேட்டதை அடுத்து அவனை மீட்ட குடும்பத்தினர் தொடர்ந்து முனிரத்தினம்மாவை தேடினர்.

    நீண்ட நேரமாக தேடியும் அவர் கிடைக்காததாலும், இருள் சூழ்ந்து விட்டதாலும் அவரை தொடர்ந்து தேட முடியாமல் வீட்டுக்கு திரும்பி விட்டனர்.

    பின்னர், மீண்டும் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, புதர் பகுதியில் சடலமாக முனிரத்தினம்மாவின் உடல் சடலமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் உடனே இதுகுறித்து பன்னார்கட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசாரும், தடயவியல் நிபுணர்களும் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமானவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 500 பேருக்கு அன்னதான நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.

    மத்தூர்,

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதான நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்டச் செயலாளர் வெற்றி கொண்டான் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.
    • மனமுடைந்த பசப்பா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எப்பிரி கிராமத்தைச் சேர்ந்தவர் பசப்பா (வயது61). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி மதுக் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார்.

    இதுகுறித்து அவரது மனைவி சாரதா (55), தனது கணவர் பசப்பாவிடம் தட்டி கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த பசப்பா நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினரகள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேப்பனபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி துணை மின் நிலையம் மற்றும் சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் பவுன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி துணை மின் நிலையம் மற்றும் சூளகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி நகரம், தொழிற்பேட்டை, பவர்ஹவுஸ் காலனி, சந்தை பேட்டை, அரசு மருத்துவமனை, சென்னை சாலை, ஜக்கப்பன் நகர், வீட்டு வசதி வாரியம் பகுதி-1, பகுதி-2, பழையபேட்டை, காட்டி நாயனப்பள்ளி, அரசு ஆண்கள் கலை கல்லூரி, கே.ஆர்.பி.அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூல குண்டா, மிட்டப்பள்ளி, மாதேப்பட்டி, கங்கலேரி, தாளாப்பள்ளி, செம்படமுத்தூர், பெல்லாரம்பள்ளி, கூலியம், குந்தாரப்பள்ளி, சாமந்தமலை, நரணிகுப்பம், பில்லனகுப்பம், கல்லுகுறுக்கி, பூசாரிப்பட்டி, தானம்பட்டி, கொண்டேப்பள்ளி மற்றும் அதை சுற்றி உள்ள கிராமங்களில் மின்சாரம் இருக்காது.

    அதே போல சூளகிரி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூளகிரி நகரம், உலகம், மாதரசனப்பள்ளி, ஏனுசோனை, சின்னார், சுண்டகிரி, சாமல்பள்ளம், பீர்ப்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி ஆகிய பகுதிகளுக்கும், அதை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அந்த வழியாக வந்த லாரியின் பின்னால் மொபட்டை சீனப்பா ஓட்டி சென்றார்.
    • திடீரென்று ஒரு வளை–வில் திரும்பும் போது லாரியின் பின்னால், மொபட் மோதி விபத்துக்கு உள்ளானது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனப்பா (வயது70).

    தொழிலாளியான இவர் நேற்று தனது மொபட்டில் ஓசூர்-பாகலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் பின்னால் மொபட்டை சீனப்பா ஓட்டி சென்றார்.

    திடீரென்று ஒரு வளைவில் திரும்பும் போது லாரியின் பின்னால், மொபட் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த சீனப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது.
    • மத்திகிரி போலீசார் மெக்கானிக் மணிவேல் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் வனகாவலராக சக்திவேல் (வயது39) பணியாற்றி வருகிறார்.

    இவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் மனுவை ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:

    ஓசூர் சானமாவு வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு இயங்கி வரும் தனியார் கிரசர் குவாரி அருகே ஒரு நாட்டு துப்பாக்கி, 137 பால்ரஸ் குண்டுகள், 59 கிராம் கரித்தூள், 235 கிராம் அலுமினிய கலந்த வெடி மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து தான் விசாரித்தபோது அந்த கிரசர் குவாரியில் மெக்கானிக்காக வேலை செய்யும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மணிவேல் (30) என்பவர் நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    இந்த மனுவை பெற்றுக் கொண்ட மத்திகிரி போலீசார் மெக்கானிக் மணிவேல் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். 

    ×