என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்சியினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய காட்சி.
திருப்பத்தூர் நகர வி.சி.க சார்பில் அன்னதானம்
- 500 பேருக்கு அன்னதான நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.
மத்தூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு அன்னதான நிகழ்ச்சி திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மாவட்டச் செயலாளர் வெற்றி கொண்டான் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






