என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டு துப்பாக்கி, வெடிமருந்துகளை பதுக்கி வைத்த மெக்கானிக் கைது
- நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது.
- மத்திகிரி போலீசார் மெக்கானிக் மணிவேல் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் வனகாவலராக சக்திவேல் (வயது39) பணியாற்றி வருகிறார்.
இவர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் மனுவை ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:
ஓசூர் சானமாவு வனப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு இயங்கி வரும் தனியார் கிரசர் குவாரி அருகே ஒரு நாட்டு துப்பாக்கி, 137 பால்ரஸ் குண்டுகள், 59 கிராம் கரித்தூள், 235 கிராம் அலுமினிய கலந்த வெடி மருந்து ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தான் விசாரித்தபோது அந்த கிரசர் குவாரியில் மெக்கானிக்காக வேலை செய்யும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மணிவேல் (30) என்பவர் நாட்டு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட மத்திகிரி போலீசார் மெக்கானிக் மணிவேல் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.






