என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.31 லட்சம் சிக்கியது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடந்த சோதனையில் பறக்கும் படையினர் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:&
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் 6 பேரூராட்சிகளில் வரகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில், 1 லட்சத்து 83 ஆயிரத்து, 143 ஆண்கள், 1 லட்சத்து, 81 ஆயிரத்து, 681 பெண்கள், இதரர் 131 பேர் என 3 லட்சத்து, 64 ஆயிரத்து, 955 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக கிருஷ்ணகிரி நகராட்சியில் 66 வாக்கு சாவடிகள், ஓசூர் மாநகராட்சியில் 248, பர்கூர் 16, தேன்கனிக்கோட்டையில் 28, காவேரிப்பட்டணம் மற்றும் ஊத்தங்கரையில் தலா 18, நாகோஜனஹள்ளி மற்றும் கெலமங்கலத்தில் தலா 15 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 424 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு உபகரணங்கள், ஓட்டுபதிவு எந்திரம் உள்ளிட்டவைகள் தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை அனுப்பப்படும். வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் பதற்றமான, 66 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா, கூடுதல் அலுவலர்கள், போலீசார் நியமிக்கப்படுவர்.
இதுவரை தேர்தல் தொடர்பாக 27 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.25 லட்சம் ஒரே இடத்தில் பறிமுதல் செய்யப்பட்டதால், அதை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளோம். தேர்தல் பணிகளில் மாவட்ட முழுவதும் 4,800 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஊத்தங்கரை, பர்கூர், நாகோஜனஅள்ளி, காவேரிப்பட்டணம், கெலமங்கலம் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் வாக்களிக்க மொத்தம் 424 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 66 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பதற்றமான வாக்-குச்சாவடிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, கிருஷ்ணகிரி கோட்டை பகுதியில் உள்ள நகராட்சி உருது பெண்கள் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை அவர் பார்வையிட்டார்.
அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கபிலன், முத்தமிழ்செல்வராசு, சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மொபட் மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). அதே பகுதியை சேர்ந்கவர் முருகன் (42). இவர்கள் 2 பேரும் கூலித்தொழிலாளிகள்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் லட்சுமணனும், முருகனும் வேலை விஷயமாக மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி& ரா£யக்கோட்டை சாலையில் கூவத்தி கோவிந்தன் கொட்டாய் என்ற இடத்தில் சென்ற போது திடீரென மொபட் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் லட்சுமணன், முருகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து கேள்விப்பட்டதும் கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான லட்சுமணன், முருகன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் மொபட் மோதி 2 தொழிலாளிகள் பலியான சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலை யொட்டி, தன்னார்வ அமைப்புகளின் சார்பில், ஓசூரில் நேற்று வாக்காளர் விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது.
ஓசூரில், பாகலூர் ரோடு மேம்பாலம் அருகே இந்த விழிப்புணர்வு பேரணியை, மாநகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஓசூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இதில் ஓசூர் அரசு ஐ.டி ஐ. என்.எஸ்.எஸ். மாணவர்கள், ஆசிரியர்கள் சிவலிங்கம், சரவணன், வெங்கடேசன் மற்றும் சமூக சேவகர் ராதா, தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கடந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது, ஓசூர் பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. முன்னதாக, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
முடிவில் அனைவரும் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்த விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள பாவக்கல் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது பார்த்திபன் (வயது47) என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மத்தூர் அருகே ராணுவ வீரரை கொலை செய்த சம்பவத்தில் மனைவி கோர்ட்டில் சரணடைந்த நிலையில் 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணத்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 42). இவரது மனைவி சசிகலா(38). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
நரேஷ் குமார், காஷ்மீரில் லாக் டோரா பகுதியில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு கொண்டே வந்ததால் சசிகலா கோபத்தில் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே ராணுவ பணிக்கு சென்றிருந்த நரேஷ்குமார், கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பினார். கடந்த 13-ந் தேதி மதுபோதையில் இருந்த நரேஷ்குமார், மனைவி சசிகலா வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இதற்கு சசிகலா மறுப்பு தெரிவித்து திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். அப்போது ஆத்திரத்தின் உச்சியில் இருந்த சசிகலா, தாலி கட்டிய கணவன் என்றும் பாராமல் நரேஷ்குமார் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த நரேஷ்குமாரை உருட்டுக் கட்டையால் தாக்கினார். மேலும் அங்கு நின்ற சசிகலாவின் உறவினர்களும் சரமாரியாக நரேஷ் குமாரை தாக்கினர்.
அப்போது திடீரென ஆவேசத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் நரேஷ்குமாரை அரிவாளால் வெட்டினர். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த நரேஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசாரிடம் நரேஷ்குமார் அளித்த மரண வாக்குமூலத்தில் தன்னை தனது மனைவி சசிகலா மற்றும் உறவினர்கள் 7 பேர் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தார்.
இதையடுத்து பாரூர் போலீசார் , சசிகலா மற்றும் அவரது உறவினர்களான திருப்பூர் ஆயுதப்படை போலீஸ் காரர் மகேஸ்வரன், அவரது மனைவி ராஜ்குமார், முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன், அவரது மனைவி தீபா, மற்றும் ராஜ்குமார், வடிவேலு, சதீஷ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சசிகலா, நேற்று கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
ராணுவ வீரர் நரேஷ்குமாரை அவரது மனைவி ஈவு இரக்கமில்லாமல் கண்ணில் மிளகாய் பொடி தூவி கொன்றது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இதில் தனது தந்தையை கொன்ற நரேஷ்குமாரை பழிக்குபழியாக சசிகலா கொலை செய்தது தெரிய வந்தது.
அதாவது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நரேஷ் குமாருக்கும், சசிகலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சசிகலா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார்.
இதனால் குடிபோதையில் நரேஷ் குமார் சசிகலா வீட்டுக்கு சென்றார். அங்கு சசிகலாவிடம் தகராறு செய்ததால் அவரது தந்தை மகாலிங்கம் (58) தட்டி கேட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த நரேஷ்குமார், மாமனார் என்றும் பாராமல் அரிவாளால் வெட்டி கொன்றார். அப்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நரேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்து ராணுவ பணிக்கு சென்று விட்டார். இந்த வழக்கு கோர்ட்டில நிலுவையில் இருந்து வந்தது.
தன் கண்முன்பே தந்தை வெட்டிக்கொன்ற கணவர் நரேஷ்குமார் மீது சசிகலாவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த 13-ந் தேதி நரேஷ்குமார், ஊருக்கு வந்து சசிகலாவிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். ஏற்கனவே தந்தையை கொலை செய்த நரேஷ்குமார் மீது ஆத்திரத்தில் இருந்ததால் மிளகாய் பொடி தூவி கொலை செய்தது தெரிய வந்தது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது காணொலியில் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து பேசி வருகிறார் என்று ஓசூரில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஓசூர் ராம்நகரில் இன்று நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களுக்காக 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதையெல்லாம் நிறைவேற்ற முடியாமல் தற்போது காணொலியில் அவர் மக்களை சந்தித்து பேசி வருகிறார்.
அ.தி.மு.க மக்களுக்காக உழைக்கும் கட்சி. அ.தி.மு.க வேட்பாளர்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். எனவே அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்,
முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகிறது. தி.மு.க. ஒரு கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி,
வடநாட்டில் இருந்து ஏஜெண்ட்டை இறக்கி தேர்தலில் வெற்றி பெற்றார்கள், கவர்ச்சியான விளம்பரங்களை கூறி வெற்றி பெற்றது திமு.க.. ஆனால் அ.தி.மு.க.வோ எதை செய்ய வேண்டுமோ அதை கூறியது.
நாங்கள் சொன்னதை செய்தோம். சொல்லாததையும் செய்தோம். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன் கூட, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், ஏன், முதலமைச்சராக கூட ஆகலாம்.
குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் கொடுப்பது, முதியோர் உதவி தொகை உயர்த்துதல், சுய உதவி குழுக்கள் கடன், மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து போன்ற எதையுமே தி.மு.க. செய்யவில்லை.
தி.மு.க.விற்கு வாக்களித்தவர்கள் தங்களது தங்க நகைகளை பறிகொடுத்தது தான் மிச்சம். கடந்த 2011, 2016-ல் நடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது அ.தி.மு.க. விலையில்லா மிக்சி, பேன், கிரைண்டர், ஆகியவை கொடுத்தது அ.தி.மு.க.. மாணவர்களின் கல்வியை உயர்த்த லேப்டாப், உள்ளிட்ட அனைத்து உபகரணங்களை வழங்கி படிப்பதற்காக வசதிகளை செய்தது அ.தி.மு.க. ஆட்சி தான்.
நீட் விவகாரத்தில் விவாதம் செய்ய தயார் என்று நான் கூறினேன். அதற்கு இதுவரை தி.மு.க.விடமிருந்து எந்த பதிலும் இல்லை, மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு பொம்மை முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். எழுதி கொடுப்பதை படித்து வருகிறார்.
12,110 கோடி ரூபாய் விவசாயிகளுக்காக பயிர் கடன் தள்ளுபடி செய்தது அ.தி.மு.க ஆட்சி. , பொங்கலுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுத்தது அ.தி.மு.க.
ஆனால் தற்போது பொங்கலுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன கொடுத்தார். அவர் கொடுத்த 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றவை, அதில் ரூ.500 கோடி ஊழலை தி.மு.க. அரசு செய்துள்ளது.
ஓசூர் மாநகராட்சி, நகராட்சியாக இருந்தபோது அ.தி.மு.க. அரசு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்டங்களையும், சாலை வசதி, ராமநாயக்கன் ஏரி அழகுப்படுத்தப்பட்டது, 20 கோடி செலவில் மலர்களை சந்தைப்படுத்த சர்வதேச மலர் ஏல மையம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை கல்லூரி, ஆர்.டி.ஓ அலுவலகம், ஆகியவை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சி. இதனால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்".
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, நாகரசம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கிருஷ்ணகிரி சேலம் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே நடைபெற்றது.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தும், வாழ்த்தியும் பேசினார்.

அப்போது அவர் பேசும் போது, ‘இன்றைக்கு ஆட்சி அதிகாரம் தி.மு.க.விடம் உள்ள நிலையில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரும் வகையில் அமையும். அதற்கு அ.தி.மு.க.வினர் அயராமல் பாடுபட வேண்டும். இந்த தேர்தல் இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்க வேண்டும்’ என்றார்.
இதையும் படியுங்கள்... ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ அமைக்கப்பட்ட மருத்துவக்குழு மாற்றியமைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 6 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பொம்மதாதனூர் அடுத்துள்ள என்.குத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவருக்கு 6 வயதில் மவுனிஸ் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மவுனிசை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மவுனிஸ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் சிக்கிய வாலிபர் படுகாயம் அடைந்தார்.
காவேரிப்பட்டணம்:
பெங்களூரு பழைய பைப்பனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் இன்றுகாலை மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டணம் அருகேயுள்ள சப்பானிப்பட்டி பகுதியில் வந்த போது விபத் தில் அருண்குமார் படுகாயம் அடைந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து காவேரிப் பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கள்ளத்துப்பாக்கி வைத்து இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மலசோனை கிராமத்தில் ஒருவர் கள்ளத் துப்பாக்கி வைத்து இருப்பதாக போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது சீனிவாச ஆசாரி (வயது40) என்பவர் வீட்டில் சோதனை நடத்திய போது கள்ளத்துப்பாக்கி சிக்கியது. இதனை அவரிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் பறி முதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சீனி வாச ஆசாரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.
போச்சம்பள்ளி அருகே கணவரை கொலை செய்து தலைமறைவான மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது42). ராணுவ வீரர். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் நரேஷ்குமார் ராணுவத்துக்கு சென்று விட்டார்.
இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு நேற்று விடுமுறையில் நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தாய் வீட்டில் இருந்த மனைவி சசிகலாவை குடும்பம் நடத்த குடிபோதையில் சென்று அழைத்துள்ளார்.
இதனால் கணவன்-மனைவிக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சசிகலா வீட்டில் இருந்த மிளகாய் பொடியை கணவர் நரேஷ்குமார் முகத்தில் தூவியும் கட்டையால் தாக்கியும் மற்றும் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை நரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கணவரை கொலை செய்து தலைமறைவான சசிகலாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பசுமாடுகளின் சாணங்களை கூடையில் அள்ளி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளரையும், அவரோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரையும் அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
ஓசூர்:
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் உறுப்பினர் பதவிகளை பிடிக்க போட்டியிடும் பேட் பாளர்கள் பொதுமக்களை கவரும் வகையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஓசூர் மாநகராட்சியில் 11-வது வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தனது வார்டிலுள்ள சதாசிவநகர், இந்திரா நகர், தாயப்பாதோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
வாக்கு சேகரிப்பின் போது ஒருபடி மேலே சென்று பொதுமக்களின் வீடுகளின் முன்பு கட்டப்பட்டிருந்த பசுமாடுகளின் சாணங்களை அவரே கூடையில் அள்ளி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அவரையும், அவரோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரையும் அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
மேலும் டீக்கடைகள், டீ போட்டு கொடுத்தும், பஜ்ஜி சுட்டும் வித்தியாசமான முறையில் அ.தி.மு.க. வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.