என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
    கிருஷ்ணகிரி:

    உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் கெலமங்கலம், தேன்கனிக் கோட்டை, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, நாகோஜனஹள்ளி ஆகிய 6 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நாளை (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

    கெலமங்கலம் பேரூராட்சிக் குட்பட்ட 15 வார்டுகளுக்கும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக் குட்பட்ட 18 வார்டுகளுக்கும், வாக்கு எண்ணிக்கை தேன்கனிக் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் வருகிற 22-ந் தேதி அன்று நடைபெற உள்ளது. 

    இந்த மையத்தில் வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் இடம், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு தடுப்பு வலைகள் அமைத்தல் போன்ற பணிகள் குறித்தும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    ஓசூர் மாநகராட்சிக் குட்பட்ட 45 வார்டுகளுக்கு மத்திகிரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. 

    இந்த மையத்தில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் இடம், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு தடுப்பு வலைகள் அமைத்தல் போன்ற பணிகள் குறித்தும், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர் களுக்கு தேவையான அடிப் படை வசதிகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி,  மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) முத்துமாரி, ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், தாசில்தார்கள் கிருஷ்ண மூர்த்தி, குருநாதன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சு, மாநகராட்சி பொறியாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே குடிபோதையில் ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளிகள் 2 பேர் இறந்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளியை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 55). தளி அடுத்த திப்பேன அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(43). இருவரும் கூலித்தொழிலாளிகள்.

    இந்த நிலையில் நண்பர்களான ராஜப்பாவும்,  நாகராஜிம் நேற்று அங்குள்ள ஏரி அருகே அமர்ந்து மது குடித்தனர். அப்போது அதிக போதையில் இருந்த அவர்கள் 2 பேரும், ஏரியில் குளிக்க சென்றனர்.

    அப்போது அங்கு வந்த ராஜப்பாவின் தங்கை ராணி , மதுபோதையில் ஏரியில் இறங்க வேண்டாம். தண்ணீரில் அதிகமாக உள்ளது என்று எச்சரித்தார்.

    ஆனால் தங்கையின் அறிவுரையை ராஜப்பா, கேட்காமல் அலட்சியமாக பேசினார். பின்னர் ராஜப்பாவும், நாகராஜிம் ஏரிக்குள் இறங்கி குளித்தனர்.

    அப்போது தண்ணீரில் இறங்கிய நாகராஜ் திடீரென மூழ்கினார். அவர் தத்தளிப்பதை கண்ட ராஜப்பா, அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்ற முயன்றார்.

    இதில் ராஜப்பாவும், நாகராஜிம் தண்ணீரில் மூழ்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தளி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  இதைத்தொடர்ந்து தளி போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.  பின்னர் ராஜப்பா உடல் மட்டும் கிடைத்தது. இரவு நேரமானதால் நாகராஜ் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

    இன்று காலையில் மீண்டும் நாகராஜ் உடலை தேடினர். பின்னர் அவரது உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 

    ஏரியில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    தங்கை எச்சரிக்கையை மீறி ஏரியில் குளிக்க சென்ற அண்ணன், மற்றும் அவரது நண்பர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் தளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் கிருஷ்ணகிரி இளம்பெண் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே பெரியமுத்தூர் கொல்ல கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி தனலட்சுமி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள்ஆகிறது. குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் தனலட்சுமி வேதனையில் இருந்து வந்தார். தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்த அவர் கடந்த சில நாட்களாக மனவிரக்திலும், குழந்தை ஏக்கத்திலும் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனலட்சுமி, விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தனலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி கிருஷ்ணகிரி டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 8 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டி வௌகலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி நதியா (வயது 23).

    இந்த நிலையில் நேற்று நதியா, தனது தாய் வீட்டுக்கு சென்று டவுன் பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் 8 பவுன் தங்க நகையை வைத்திருந்தார்.

    அப்போது பஸ்சில் கிருஷ்ணகிரி அருகே வந்த போது தனது கைப்யை காணாமல் போனதை கண்டு நதியா அதிர்ச்சி அடைந்தார். அருகே நின்ற ஒரு பெண்,  நகை பையை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி  அடைந்த நதியா, இதுபற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் நகையை திருடி சென்ற மர்ம பெண்ணை தேடி வருகிறார்கள்.

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 8 பவுன் நகை திருடிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே உள்ள ஆவத்துவாடி  கிராமத்தில் மாரியம்மன் திருவிழா வெகு சிறப்பாக நேற்று மாலை நடைபெற்றது. 

    இந்த விழாவில் கிராம மக்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று மாரியம்மன் கோவில் முன்பு  பக்தர்கள் ஈரத்துணியுடன் தரையில் உருளு தண்டம் விழும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    இந்த நிகழ்ச்சியில் மாரியம்மன் கோயில் பூசாரி தலையில் வைத்தபடி அருள் வந்து பக்தர்களை  மிதித்து மற்றும் குதிரைக்கு கொள்ளு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், விழா குழுவினர் கள் மற்றும் இளைஞர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தனியார் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயமடைந்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் இருந்து சூளகிரி அருகே உள்ள அத்திமுகத்துக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலையில் சென்று கொண்டிருந்தது.

    காலை 10 மணியளவில் சூளகிரி அருகே முக்காலப்பள்ளி என்ற இடத்தில் பஸ், சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி பயணிகள் அலறினர்.

    அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் , மற்றும் பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விபத்து நடந்த பகுதியின் சாலை குண்டும் குழியுமான மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த சாலையில் பஸ் டிரைவர் , வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரிய வந்தது. தனியார் பஸ் விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் இறந்து கிடந்த பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் தென்பெண்ணை ஆற்றில் 50 வயது வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அங்கு சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனே இதுபற்றி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆற்றில் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்-? என்பது தெரியவில்லை.  பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் மாசாணியம்மன் கோவிலில் மயான பூஜை மற்றும் குண்டம் விழா நடைபெற்றது.
    ஓசூர்:

    ஓசூர் பாகலூர் சாலையில் சமத்துவதும் அருகே ஸ்ரீ மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு 5-ஆம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி, கடந்த 1-ந் தேதி கொடியேற்றம் மற்றும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது பின்னர், கடந்த 14-ந் தேதி ஓசூர் தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளம் அருகிலிருந்து பால்குட மற்றும் பூகரக ஊர்வலமும், அம்மனின் பல்லக்கு ஊர்வலமும் நடைபெற்றது. 

    மேலும் திரளான பக்தர்கள் அலகு குத்தியவாறு, ஊர்வலத்தில் நடந்து சென்றனர்.நேற்று முன்தினம்(15-ந்தேதி) இரவு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மயான பூஜை செய்து, கோவில் பூசாரி பாண்டியன் வாயில் எலும்பை கடித்தவாறும், கையில் சூலாயுதம் ஏந்திக்கொண்டும் அருள் வந்து ஆடினார். 

    மேலும், பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மயான பூஜை நிகழ்ச்சியை காண்பதற்காக, ஓசூர், சமத்துவபுரம், நல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்களும், பொதுமக்களும் திரளாக வந்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில் 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே கேட்பாரற்று கிடந்த 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்க்கள் தென்னரசு, கோபிநாத் மற்றும் போலீஸ் ஈஸ்வரன் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி-வேப்பனபள்ளி சாலையில் உள்ள குந்தாரப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். 

    அப்போது அங்கு 24 மூட்டைகளில் 50 கிலோ அளவிலான 1,200 கிலோ ரேஷன் அரிசி கேட்பாரற்று கிடந்தது. இதையடுத்து அந்த அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    மதகொண்ட பள்ளியில் பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்ட பள்ளியில் பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. 

    ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தேர் திருவிழா மிக விமர்சியாக நடைபெற்றது. 

    அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தி களை அமர்த்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்கள் ஆண்களும், பெண்களும்  கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்று ஊரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மாலை தேரை நிலை நிறுத்தினர். 

    திருவிழாவிற்கு தேன்கனிகோட்டை, தளி, மத கொண்டப் பள்ளி,சாரக பள்ளி, குப்பட்டி, பேளகொண்டபள்ளி, கலு கொண்டபள்ளி, உலி வீரனபள்ளி உள் ளிட்ட கிராமங்கள் சேர்ந்தவர்களும்மற்றும் கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    பல்வேறு பக்தி அமைப்புகளின் சார்பாக பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினர் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஆண்டில் நடைபெறும் முதல் தேர்திருவிழா இதுவாகும்.

    திருவிழாவை தொடர்ந்து இன்று மாட்டு திருவிழாவும் அது விமர்சையாக நடைபெறும். தொடர்ந்து இரவு சுவாமியின் பல்லக்கு உற்சவம் ஊர்வலம் நடைபெறும் மற்றும் வாணவேடிக்கை நடைபெறும்.
    திருப்பத்தூர் மாவட்டம், காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    மத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், காக்கனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது24). இவரது மனைவி வெற்றிசெல்வி (24). காதல் திருமணம் செய்த இந்த தம்பதிகள் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மூக்காகவுண்டர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு நடந்தது-.

    இதனால் மனமுடைந்து காணப்பட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெகதீஸ் வெகுநேரமாகியும் வீடு திரும் பில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து வெற்றிசெல்வி மத்தூர் போலீசில் புகார்  கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து மாயமான ஜெகதீசை தேடி வருகிறார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி முதியவர் பலியானார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜெகதாப் அடுத்துள்ள கெட்டூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது69). இவர் விவசாயம் செய்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று மதியம் இவர் காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கால் இடறி ஆற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு தங்கவேல் இறந்து கிடந்தார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறந்து கிடந்த தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×