என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் தனியார் பஸ்சை படத்தில் காணலாம்.
    X
    சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் தனியார் பஸ்சை படத்தில் காணலாம்.

    தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 25 பயணிகள் படுகாயம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தனியார் பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 25 பயணிகள் காயமடைந்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் இருந்து சூளகிரி அருகே உள்ள அத்திமுகத்துக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலையில் சென்று கொண்டிருந்தது.

    காலை 10 மணியளவில் சூளகிரி அருகே முக்காலப்பள்ளி என்ற இடத்தில் பஸ், சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி பயணிகள் அலறினர்.

    அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் , மற்றும் பொதுமக்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் பெண்கள் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சூளகிரி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விபத்து நடந்த பகுதியின் சாலை குண்டும் குழியுமான மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்த சாலையில் பஸ் டிரைவர் , வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரிய வந்தது. தனியார் பஸ் விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×