என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.
    X
    தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்த காட்சி.

    மதகொண்டப்பள்ளியில் வெங்கடரமண சுவாமி கோவில் தேர் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

    மதகொண்ட பள்ளியில் பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்ட பள்ளியில் பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. 

    ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தேர் திருவிழா மிக விமர்சியாக நடைபெற்றது. 

    அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தி களை அமர்த்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்கள் ஆண்களும், பெண்களும்  கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்று ஊரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மாலை தேரை நிலை நிறுத்தினர். 

    திருவிழாவிற்கு தேன்கனிகோட்டை, தளி, மத கொண்டப் பள்ளி,சாரக பள்ளி, குப்பட்டி, பேளகொண்டபள்ளி, கலு கொண்டபள்ளி, உலி வீரனபள்ளி உள் ளிட்ட கிராமங்கள் சேர்ந்தவர்களும்மற்றும் கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    பல்வேறு பக்தி அமைப்புகளின் சார்பாக பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினர் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஆண்டில் நடைபெறும் முதல் தேர்திருவிழா இதுவாகும்.

    திருவிழாவை தொடர்ந்து இன்று மாட்டு திருவிழாவும் அது விமர்சையாக நடைபெறும். தொடர்ந்து இரவு சுவாமியின் பல்லக்கு உற்சவம் ஊர்வலம் நடைபெறும் மற்றும் வாணவேடிக்கை நடைபெறும்.
    Next Story
    ×