என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கார்& டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி அருகே தேவசானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ரமேஷ் (வயது 45), கனசூரப்பா (32).
அதே பகுதியை சேர்ந்தவர்கள் முரளி (25), வெங்கடேசன் (44).
இவர்கள் 4 பேரும் நேற்று மாலை சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளிக்கு செல்லும் சாலையில் தேவசானப்பள்ளி கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிராமத்துக்கு அருகே காரும், கருங்கல் பாரம் ஏற்றிய டிப்பர் லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் ரமேஷ் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே சென்டர் மீடியனில் ஸ்கூட்டர் மோதி சென்னை வாலிபர் பலியானார்.
காவேரிப்பட்டணம்:
தருமபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அருகே ஏர்ரள்ளி அருகே 2 வாலிபர்கள் ஸ்கூட்டரில் இன்று காலை 8 மணியளவில் வந்தனர். அப்போது சென்டர் மீடியனில் ஸ்கூட்டர் மோதியது இதில் சம்பவ இடத்திலேயே ஸ்கூட்டரை ஓட்டி வந்த வாலிபர் பலியானார். பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் இதுபற்றி காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது விபத்தில் பலியானவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஹரி என்கிற தமிழன் என்று தெரிய வந்தது. மேலும் படுகாயம் அடைந்தவர் சென்னை பெரம்பூரை சேர்ந்த யுவராஜ் (22) என்றும் தெரிய வந்தது. இதையடுத்து காயம் அடைந்த யுவராஜை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியில் கள்ள ஓட்டு போடுவதாக அ.தி.மு.க.வினர் புகார் அளித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 1 மற்றும் 2வது வார்டுக்கு கிருஷ்ணகிரி நகராட்சி உருதுநடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில்,1-வது வார்டில், 1,950 ஓட்டுகளும், 2-வது வார்டில், 2,652 ஓட்டுகளும் உள்ளன. இதில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இருப்பதாலும், வார்டு மறுவரையறை செய்யப்பட்டபின், 3-வது வார்டின், 1,300 பேரை, 2-வது வார்டில் சேர்த்ததாலும், வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2வது வார்டில் ஓட்டளிக்க சென்ற இருவரின் ஓட்டுகள் ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அ.தி.மு.க.,வினர் அளித்த தகவல்படி கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நேரில் வந்து விசாரித்தார். அவரிடம் அக்கட்சியினர், பெண்கள் சிலர் கள்ள ஓட்டு போடுவதாகவும், ஓட்டு சாவடி பக்கவாட்டு பகுதி வழியாக சென்று மீண்டும் மீண்டும் ஓட்டளிப்பதாக அவரிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் ஓட்டுசாவடி பக்கவாட்டில் உள்ள பாதையை தகர சீட் கொண்டு அ.தி.மு.க.,வினரே அடைக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை ஏற்காத அசோக்குமார் எம்.எல்.ஏ., அதிகாரிகள் தங்கள் பணிகளை நேர்மையாக செய்ய வேண்டும் இல்லையென்றால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி சென்றார்.
பின்னர் அங்கிருந்தவர்களை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 1 மற்றும் 2வது வார்டுக்கு கிருஷ்ணகிரி நகராட்சி உருதுநடுநிலைப்பள்ளியில் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில்,1-வது வார்டில், 1,950 ஓட்டுகளும், 2-வது வார்டில், 2,652 ஓட்டுகளும் உள்ளன. இதில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இருப்பதாலும், வார்டு மறுவரையறை செய்யப்பட்டபின், 3-வது வார்டின், 1,300 பேரை, 2-வது வார்டில் சேர்த்ததாலும், வாக்காளர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2வது வார்டில் ஓட்டளிக்க சென்ற இருவரின் ஓட்டுகள் ஏற்கனவே போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அ.தி.மு.க.,வினர் அளித்த தகவல்படி கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நேரில் வந்து விசாரித்தார். அவரிடம் அக்கட்சியினர், பெண்கள் சிலர் கள்ள ஓட்டு போடுவதாகவும், ஓட்டு சாவடி பக்கவாட்டு பகுதி வழியாக சென்று மீண்டும் மீண்டும் ஓட்டளிப்பதாக அவரிடம் புகார் தெரிவித்தனர்.
மேலும் ஓட்டுசாவடி பக்கவாட்டில் உள்ள பாதையை தகர சீட் கொண்டு அ.தி.மு.க.,வினரே அடைக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதை ஏற்காத அசோக்குமார் எம்.எல்.ஏ., அதிகாரிகள் தங்கள் பணிகளை நேர்மையாக செய்ய வேண்டும் இல்லையென்றால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என கூறி சென்றார்.
பின்னர் அங்கிருந்தவர்களை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஓசூர் மாநகராட்சி, 6 பேரூராட்சிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து இன்று ஓட்டுபோட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளான ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம். நாகோஜனஅள்ளி, கெல மங்கலம் தேன்கனிக்கோட்டை மருதூர் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி நகராட்சி உள்ள 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்து முகக் கவசம் வழங்கி அனுப்பப்பட்டனர்.
மேலும் வயதானவர்கள் வீல்சேர் மூலம் வாக்குச் சாவடிகளுக்கு அழைத்து சென்று ஓட்டு போட வைத்தனர்.
கிருஷ்ணகிரி நகராட்சியில் மொத்தம் 66 வாக்குச் சாசாவடிகளில் 8 இடங்களில் 12 வாக்குச்சாவடிகள் பதட்ட மானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நகராட்சி சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.
ஓசூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. மொத்தம் 57 இடங்களில் 248 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் பனிப்பொழிவும், குளிரும் இருந்ததால் 8 மணிக்கு பிறகுதான் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுபோட சென்றனர். நேரம் செல்லச்செல்ல வாக்குச் சாவடிகள் கூட்டம் அதிகரித்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஓசூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
இதேபோல் ஊத்தங்கரை, காவேரிப்பட்டினம். நாகோஜனஅள்ளி, கெல மங்கலம் தேன்கனிக்கோட்டை மருதூர் ஆகிய 6 பேரூராட்சிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே கடன் தொல்லை காரணமாக காய்கறி விபாயாரி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள சூடாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது42). காய்கறி வியாபாரி. இந்த நிலையில் இவர் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளார். இதனால் அந்த கடனை திருப்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட நாகராஜ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தென்பென்ணை ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கோபசந்திரம் பக்கமுள்ளது பாத்தகோட்டா. இங்கு தென்பெண்ணை ஆற்றில் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இது குறித்து காமன்தொட்டி கிராம நிர்வாக அலுவலர் பாக்யராஜ் சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சென்டர் மீடியனில் கார் மோதி பெண் பலியானார்.
காவேரிப்பட்டணம்:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை திருமால் நகர் எக்ஸ்டன்சன் வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் அசோகன் (வயது 70).
இவர், இவரது மனைவி பிரேமா (60), மகன் சண்முகம் ஆனந்த் (34) ஆகியோர் காரில், தருமபுரி&கிருஷ்ணகிரி சாலையில் காவேரிப் பட்டணம் அருகே பையூர் பக்கமாக கடந்த 16-ந் தேதி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காரை அசோகன் ஓட்டி வந்தார். அந்த நேரம் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
இதில் காரில் பயணம் செய்த அசோகன், பிரேமா, சண்முகம் ஆனந்த் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அதில் பிரேமா சிகிச்சை பலனின்றி இறந்தார். அசோகனும், சண்முகம் ஆனந்த்தும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து காவேரிப் பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரிஷ்ணகிரியில் அனுமதியின்றி கற்கள் கொண்டு சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கனிம வள உதவி இயக்குனர் பொன்மணி மற்றும் அதிகாரிகள் பாஞ்சாலியூர் பட்டாளம்மன் கோவில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் 3 யூனிட் கற்கள் அனுமதியின்றி கொண்டு சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அதிகாரி பொன்மணி கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒசூர் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.
ஓசூர்:
பெங்களூரு நௌமங்களா ரூரல் கோட்டை தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் ஓசூர்&ஆவலப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற வேன் திடீரென்று பிரேக் பிடித்து நின்றது. இதில் நிலைதடுமாறி சந்தோஷ் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேன் பின்புறம் மோதி யது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கொத்தூர் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா -உத்தனப்பள்ளி ஊராட்சி கூகனூர் அருகில் உள்ள பழைய கொத்தூர் சாலையில் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்வ காளி யம்மன் ஆலயம் உள்ளது.
நேற்று மாசி மாதம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு செல்வகாளி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்து மங்கள ஆரத்தி காட்டி பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்த பிரசாத வழங்கப் பட்டது. இப்பூஜைகளை ஏற்பாடுகளை ஆலய தர்மகர்த்தா விஜயகுமார் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அலகுபாவி என்ற இடத்தில் 2 லாரிகள் மோதிய கொண்ட விபத்தில் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி கவிழ்ந்தது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலை அலகுபாவி அருகே ஒசூர் இருந்து சேலம் நோக்கி 2 லாரிகள் சென்று கொண்டிருந்தது.
இந்த லாரிகளில் டிரைவர்கள் போட்டி போட்டு முந்த முயன்றனர். அப்போது லாரிகள் ஒன்றன் பின் ஒன்று எதிர் பாராதவிதமாக மோதியது.
இதில் லாரிகள் மோதி கொண்டதில் பின்னர் வந்த ஒரு கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக சாலை நடுவே திடீரென கவிழ்ந்தது. இதில் 2 லாரி டிரைவர்கள் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் ஒசூர்&கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரு மணி நேரம் போக்குவரத்து பெரும் பாதித்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து வந்து கிரேன் மூலம் விபத்தில் சிக்கிய லாரிகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் தங்க நெருப்பு பந்து போல் சூரியன் உதித்ததால் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி கற்று வட்டாரங் களில் கடந்த சில வாரங்களாக ஜனவரி, பிப்ரவரி மாதம் வந்தாலே வெயில் அதிகரிக்கும். பனி பொழிவு காணாமல் போகும். ஆனால் சில வாரங்களாக இரவு மற்றும் அதிகாலையில் பனி பொழிவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சூரியன் காலை 6- மணிக்கே உதயமாகி பணிகளை விரட்டி அடிக்க உதயமாகும் தோற்றம் இன்று காலை 6-30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலை நடுவே தங்க நெருப்பு பந்து போல் சூரியன் உதித்து காணப்பட்டது.
இதனை அந்த வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்து செல்போனில் படம் பிடித்தனர்.






