என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சின்ன பர்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (வயது35). இவருக்கும் சந்தோஷ் என்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தேவியை சந்தோஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக தேவி பர்கூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே மின் மோட்டா வயர்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    பேரிகை அருகே உள்ள வானமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது60) விவசாயி. இவர் தனது விவசாய நிலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அங்கிருந்த கிணற்றில் இருந்து மோட்டார் மற்றும் மின்சார வயரை மர்ம நபர்கள் இரண்டு பேர் திருடி கொண்டிருந்தனர். இதை கவனித்த நாகராஜ் அவர்களை பிடிக்க முயன்றார். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட நபரை பேரிகை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பேரிகை அருகே உள்ள உளியாளம் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ் (32) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஓசூர் மாநகராட்சியில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முதலாக சந்திக்கும் உள்ளாட்சி தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 2,22,283 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1,42,198 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அதாவது 63.97 சதவித வாக்குகள் தான் பதிவாகியுள்ளன.

    இந்த 45 வார்டுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு மத்திகிரி அரசு கலைக்கல்லூரியில் தொடங்கியது.

    முதலில் தபால் ஒட்டு உள்ள பெட்டியை தேர்தல் அலுவலர் பால சுப்பிரமணியன் முன்னிலையில் திறந்து அதில் இருந்த 148 தபால் வாக்குகளை வார்டு வாரியாக வரிசைபடுத்தினார்கள்.

    இந்த வரிசைபடுத்தும் நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் தேன்மொழி, வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இருந்தனர்.

    வாக்கு எண்ணும் கட்டிடத்தை சுற்றி 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்தும் நடவடிக்கைகளையும் கண்காணிக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி சிவலிங்கம் மற்றும் ஏடிஎஸ்பி ராஜு ஆகியோர் மேற்பார்வையில் 250 போலீசார் பணியில் ஈடுபட்டனர்.

    ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் வார்டு வாரியாக வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

    1-வது வார்டு- அசோகா (அ.தி.மு.க)

    2-வது வார்டு- ஸ்ரீதரன் (அ.தி.முக).

    3-வது வார்டு- ரஜினி காந்த் (அ.தி.மு.க.)

    4-வது வார்டு- ஆறுமுகம் (தி.மு.க.)

    5-வது வார்டு-ரவி (தி.மு.க.).

    6-வது வார்டு- மம்தா சந்தோஷ் (தி.மு.க.).

    7-வது வார்டு- ஆனந்தய்யா (தி.மு.க.)

    11-வது வார்டு- தி.மு.க. வெற்றி

    தொடர்ந்து ஓட்டு எண்ணும் பணி நடந்து வருகிறது. இதில் தி.மு.க. 14 வார்டுகளிலும், அ.தி.மு.க. 5 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும், பா.ம.க. 2 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது. 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மிட்ட அள்ளி எம்.சவுளூரை சார்ந்தவர் முருகன் (வயது30). இவர் ஜே.சி.பி. ஆபரேட்டராக வேலை செய்து விவசாயமும் கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில்   தனது வீட்டின் அருகே உள்ள சொந்தமான வயலுக்கு மின் மோட்டார் மூலம் நீர் பாய்ச்ச சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது உறவினர்கள் சென்று பார்த்தனர். முருகன் மயங்கி விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    உடனே அவரை காவேரிப்பட்டினம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் சப்&இன்ஸ் பெக்டர் குணசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேரிகார்டு மீது பைக் மோதியதில் வாலிபர் பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    ஆந்திரமாநிலம், சித்தூர் அடுத்துள்ள குப்பம் பந்தலனகா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது26). இவர் நேற்று ஓசூரில் இருந்து பெங்களூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஓசூர் சிப்காட் ஆர்.டி.ஒ. அலுவலகம் முன்பு  உள்ள பேரிகார்டு மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மஞ்சுநாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று இரவு பல்லக்கு உற்சவம் மற்றும் பூ கரகம் நடந்தது.

    ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த் திருவிழா, அடுத்த (மார்ச்) மாதம் 18-ந் தேதி நடை பெறவுள்ளது. 

    தேர்த்திருவிழாவிற்கு முன்னதாக, ஓசூரில் பல்லக்கு உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

    அந்த வகையில், நேற்று நடந்த விழாவில் ஸ்ரீ விநாயகர், சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பிகை அம்மன், கோட்டை மாரியம்மன், வெங்கடேஸ்வர சுவாமி, முருகன், தர்ம ராஜசாமி, ராமர், கிருஷ்ண சாமி, துர்க்கை அம்மன், காளி, பாபா, உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட தெய் வங்களை அலங் கரிக்கப்பட்ட பல்லக்குகளில் வைத்து ஓசூர் ராம்நகரிலிருந்து இரவு ஊர்வலம் தொடங்கப் பட்டது.

    மேள, தாள வாத்தியம் முழங்க, நையாண்டி ஆட்டம் வாண வேடிக்கைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பல்லக்கு ஊர்வலம் விடிய,விடிய நடந்தது. 

    மேலும் தர்மராஜ சாமி பூ கரகம் நடனமாடியவாறு நகர வீதிகளில் சென்றது. அப்போது பொதுமக்கள் கரகத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    விழாவில், ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குளிர் மற்றும் கொட்டும் பனியையும் பொருட் படுத்தாமல் ஆங்காங்கே அமர்ந்து, பல்லக்கு உற்சவம் மற்றும் கரக ஆட்டத்தை கண்டு மகிழ்ந்தனர். முன்னதாக, நேற்று மதியம் ஓசூர் பஸ் நிலை யத்தில், விழாக்குழுவின் சார்பில் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 58 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 59 ஆயிரத்து 522 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 58 ஆயிரத்து 836 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 316 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உள்ளது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகர் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை, 6  மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. 

    இதையொட்டி விநாய கருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். 

    சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மஹா தீபாராதனைகளுடன் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம், வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதி சக்தி விநாயகர் கோவில் என பல் வேறு விநாயகர் கோவில் களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதே போல் தருமபுரி மாவட் டத்தில் அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. 

    இதில் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். தருமபுரி எஸ்.வி.சாலையில் உள்ள விநாயகர் கோவிலில்  சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் கிடந்த வெடி மருந்துகள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த ஆஞ்சிபாலு அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு வெடிமருந்துகள் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது 9 டெட்டனேட்டர்கள் மற்றும் வெடி மருந்து பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அவர், தளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வெடிமருந்துகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் ¢அப்பகுதி அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பாறைகளை உடைக்க மர்ம நபர்கள் வெடிமருந்து பொருட்களை பயன்படுத்தியது தெரிய வந்தது.

    இதில் ஈடுபட்ட மர்ம நபர்களை தளி போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே தீயில் கருகி 7 வயது சிறுமி பலியானார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி கரடிபாளையம் அம்மன் தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 40), கூலித்தொழிலாளி. இவரது மகள் கீதாஸ்ரீ (7). மத்திகிரி அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி விறகு அடுப்பில் அவரது பெற்றோர் வெந்நீர் வைத்திருந்தனர். அதை மாணவி கீதாஸ்ரீ எடுக்க முயன்ற போது அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் கருகி காயம் அடைந்தார். உடனே சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் மருத்து வமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீதாஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கள்ள ஓட்டு போட்ட பெண்ணை தி.மு.க.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சீதாராம் மேடு அருகேயுள்ள, அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நேற்று மாலை விறு விறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண் டிருந்தது.

    அப்போது, கள்ள ஓட்டுபோட்டதாக பெண் ஒருவரை, 27-வது வார்டு தி.மு.க வேட்பாளர்  மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதிகாரிகளிடம் பிடித்துகொடுத்தனர். விசாரணையில், அந்த பெண், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த வேலு என்பவரது மனைவி புஷ்பா (வயது 48) என்பதும், ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆயாவாக பணி செய்து வருவதும் தெரியவந்தது. 

    அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் வாக்காளர் அட்டையை போலியாக பயன்படுத்தியதும் தெரிய வந்தது. அந்த பெண்ணின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தி.மு.க.வினர் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து புஷ்பாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 70.5 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட் சியில் 45 வார்டுகளுக்கும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் பர்கூர் 15, ஊத்தங்கரை 15, நாகோஜனஅள்ளி 15, காவேரிப்பட்டணம் 15, கெலமங்கலம் 15, தேன்கனிக்கோட்டையில் 18 என மொத்தம் 171 வார்டுகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 18வது வார்டில் திமுக வேட்பாளர் சீனிவாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 170 வார்டுகளுக்கான தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இந்த தேர்தல் பெரும்பாலான பகுதிகளில் அமைதியாகவே நடந்து முடிந்தது. 

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் நேற்று நடந்த 8 நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 70.5 சதவீத வாக்குகள் பதிவானது.

    ஓசூர் மாநகராட்சியில் 63.97 சதவீதமும், கிருஷ்ணகிரி நகராட்சியில் 79.03 சதவீதமும், பேரூராட்சிகளை பொறுத்தவரை பர்கூரில் 81.54 சதவீதமும், தேன்கனிக்கோட்டையில் 70.9 சதவீதமும், கெலமங்கலத்தில் 74.41 சதவீதமும், காவேரிப் பட்டணத்தில் 80.15 சதவீதமும், நாகோஜன ஹள்ளியில் 84.07 சதவீதம், ஊத்தங்கரையில் 69.89 சதவீதம் என 6  பேரூராட்சிகளில் மொத்தம் 75.8 சதவீத வாக்குகள் பதிவானது. 8 நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 70.05 சதவீத வாக்குகள் பதிவானது.

    ×