search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியை தாக்கிய கணவர் கைது"

    • கணவர் எனது நடத்தையில் சந்தேகம் அடைந்து என்னிடம் தகராறு செய்து வந்தார்.
    • மனைவியை தாக்கிய கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜ புரத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது 19). இவர் சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் கட்டிட வேலை செய்து வரும் கவுதம் (26) என்பவருக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு 11 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் எனது கணவர் நடத்தையில் சந்தேகம் அடைந்து என்னிடம் தகராறு செய்து வந்தார்.

    சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த கவுதம் எங்களது 11 மாத குழந்தையை பார்த்து இது எனக்கு பிறந்தது தானா என கூறி தகராறு செய்தார். இதனால் எங்கள் 2 பேரும் இடைேய வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த எனது கணவர் மரக்கட்டையால் என்னை தாக்கினார். தாக்குதலில் படுகாயம் அடைந்த என்னை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் மனைவியை தாக்கிய கவுதம் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    புலியகுளம் அருகே உள்ள பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது 38). இவரது மனைவி மீனா (28). மாநகராட்சி ஒப்பந்ததாரர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான மனோகரன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தது.

    இது குறித்து 2 முறை கணவர் மீது மீனா அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவன்-மனைவி ஆகியோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் மீண்டும் தனது மனைவியை தாக்கினார். இது குறித்து மீனா ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மனோகரனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

    • மனைவி மீதும் வழக்குப்பதிவு
    • செலவு செய்த ரூ.98 ஆயிரத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்

    கோவை,

    கோவை அன்னூர் ஏ.எம்.காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 32). இவரது மனைவி முத்துலட்சுமி (30). இவர் அங்குள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார்.

    முத்துலட்சுமியின் முதல் கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தனது கல்லூரி நண்பரான கிருஷ்ணமூர்த்தியை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கிருஷ்ணமூர்த்தி, முத்துலட்சுமியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

    அதனால் தான் முத்துலட்சுமிக்கு செலவு செய்த ரூ.98 ஆயிரத்தை திருப்பி தருமாறு கடந்த ஒரு வாரமாக கேட்டுள்ளார். சம்பவத்தன்று மீண்டும் பணத்தை கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை தாக்கினார். இதனை பார்த்த முத்து லட்சுமியின் தாயார் அங்கு வந்து கிருஷ்ண மூர்த்தியை தடுத்தார். அப்போது அவரையும் தாக்கினார்.

    பின்னர் மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றார். இதனால் பயந்துபோன முத்துலட்சுமி அன்னூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிருஷ்ண மூர்த்தியை கைது செய்தனர்.

    அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத் தனர். இதே போன்று கிருஷ்ண மூர்த்தியும் தனது மனைவி தகாத வார்த்தை களால் திட்டி தாக்கியதாக புகார் தெரிவித்தார்.

    இதைய டுத்து போலீசார் முத்து லட்சுமி மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×