search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லக்கு உற்சவம்"

    • 7 கிராம தேவதைகள், மாரசந்திரம் கிராமத்திற்கு பக்தர்களால் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
    • திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேள, தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் விழா நடைபெற்றது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட மாரச்சந்திரம் கிராமத்தில், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய், நொடியின்றி வாழவும், கிராம தேவ தைகளுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு லக்கசந்திரம், தேர்பேட்டை, மாரச்சந்திரம், தொட்டி, தேன்கனிக்கோட்டை, ஜார்க்கலட்டி, திம்ம சந்திரம் ஆகிய 7 கிராமங்களில் இருந்து மாரியம்மன், முத்தாலம்மன், முத்தப்பா, பாலகுளி மாரியம்மா, செல்லாபுரியம்மா கங்கம்மா, லக்கசந்திரம் மாரியம்மன் ஆகிய 7 கிராம தேவதைகள், மாரசந்திரம் கிராமத்திற்கு பக்தர்களால் பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்கள் கிராம தேவதைகளை பல்லக்கில் சுமந்துசென்று, அக்னி குண்டத்தில் இறங்கினர்.

    திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேள, தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் விழா நடைபெற்றது.இதில் தேன்கனிகோட்டை பகுதி சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    • மேலும் விழாவையொ ட்டி ஓசூர் பஸ் நிலையம் அருகே நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த் திருவிழா, அடுத்த மாதம் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    தேர்த்திருவிழாவிற்கு முன்னதாக ஆண்டுதோறும் பல்லக்கு உற்சவம் கோலா கலமாக நடைபெறுவது வழக்கம்.

    அந்தவகையில் நேற்று இரவு திரவுபதி பூ கரகம் மற்றும் பல்லக்கு உற்சவம், விடியவிடிய நடைபெற்றது.

    இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பல்லக்கு களில் விநாயகர், சந்திரசூடேஸ்வார், முருகன் ஆஞ்சநேயர்,, பெருமாள், தர்மராஜ சுவாமி, ராமர், கிருஷ்ண சுவாமி, பாபா, கோட்டை மாரியம்மன், எல்லம்மன், காளியம்மன், துர்க்கை உள்ளிட்ட தெய்வங்களை வைத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பல்லக்கு உற்சவம் மேளதாளம் மற்றும் நையாண்டி ஆட்டத்துடன் விடிய, விடிய நடைபெற்றது.

    மேலும், பூ கரகம் ஆடியவாறு நகரின் முக்கிய வீதிகளின் சென்றது. அப்போது, பொதுமக்கள் கரகத்தை வரவேற்று பூஜைகள் செய்து வழிப ட்டனர்.

    மேலும் விழாவையொ ட்டி ஓசூர் பஸ் நிலையம் அருகே நாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    விழாவில், ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை தேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டு பல்லக்கு உற்வசத்தை கண்டு மகிழ்ந்தனர்.

    ×