என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மண் கடத்திய டிப்பர் லாரி உள்பட 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்துள்ள குட்லகொட்டாய் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக மல்லப்பாடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் பர்கூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் மண் திருடிய 4 பேர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். மண் கடத்திய ஒரு டிப்பர் லாரி, ஜே.சி.பி. ஆகிய 2 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மண் கடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த மாதப்பன் (வயது38), பழனி (31), ராஜா (36), செல்வராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை அருகே குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அடுத்துள்ள பெரியதோப்பு பகுதியை சேர்ந்தவர் மரகதவேல். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவரது மனைவி நதியா (வயது32).

    இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா வீட்டில் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். 

    இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமாலை நதியா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கெலமங்கலம் பேரூராட்சி பொருத்தவரையில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தலைவர் பதவியை தேர்வு செய்ய 8 பேர் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    இதில் அ.தி.மு.க. 5 இடங்களும், சுயேச்சை 6 இடங்களும், தி.மு.க. 2 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு, பா.ம.க. தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

    1-வது வார்டு-ஹாயினா (தி.மு.க.), 2-வது வார்டு- கிரிபாபு - சுயேச்சை, 3-வது வார்டு-மும்தாஜ் (அ.தி.மு.க.), 4-வது வார்டு- அகிலா (சுயேச்சை), 5-வது வார்டு- விஜயஸ்ரீ (சுயேச்சை), 6-வது வார்டு- ஜெயா (அ.தி.மு.க.), 7-வது வார்டு- நாகராஜ் (சுயேச்சை), 8-வது வார்ட- வத்சலா (சுயேச்சை), 9- வது வார்டு- எல்லம்மா (இ.கம்யூ), 10-வது வார்டு - மாலா - சுயேச்சை, 11-வது வார்டு சண்முகம்- அ.தி.மு.க., 12-வது வார்டு- சீனிவாசன்- அ.தி.மு.க., 13-வது வார்டு- வெங்கடாசலபதி (பா.ம.க.), 14-வது வார்டு உமா(தி.மு.க.), 15-வது வார்டு - தேவராஜ் (அ.தி.மு.க.).

    கெலமங்கலம் பேரூராட்சி பொருத்தவரையில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் தலைவர் பதவியை தேர்வு செய்ய 8 பேர் ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

    6 சுயேச்சைகளில் 3 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் அங்கு அ.தி.மு.க. தலைவர் பதவியை கைப்பற்றிவிடும். அதேபோல் 2 பேர் தி.மு.க.வில் வெற்றி பெற்று வரும் நிலையில் 6 சுயேச்சைகள் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தால் தி.மு.க. பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி விடும்.

    இதனால் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இதனால் கெலமங்கலம் பேரூராட்சியில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சை வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதில் தி.மு.க. அதிமுக நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    தற்போதைய நிலையை பொறுத்த வரை அ.தி.மு.க.வுக்கு 3 பேர் மட்டுமே ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் 3 சுயேச்சை வேட்பாளர்களுக்கு வலைவிரித்து வருகிறார்கள். அதேநேரத்தில் தி.மு.க.வுக்கு இன்னும் 6 பேர் ஆதரவு தேவைப்படுகிறது. 6 சுயேச்சை வேட்பாளர்களை தன் பக்கம் இழுத்து தலைவர் பதவியை கைப்பற்றும் பணியில் தி.மு.க. நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்து போன முதியவரின் உடலை கிராம மக்கள் வயலில் இறங்கி சுமந்து சென்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே சுடுகாட்டுக்கு செல்ல வழியில்லாததால் வயல் வரப்பு வழியாக உயிரிழந்த முதியவரின் உடலை தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேவசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது பெரிய அக்ரஹாரம் கிராமம். இப்பகுதியில் சுமார், 70 குடும்பங்களுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அதே பகுதியில் சுடுகாடு உள்ளது. ஆனால் அந்த சுடுகாட்டுக்கு செல்ல வழியில்லை. 

    சுடுகாட்டை சுற்றி நான்கு புறங்களிலும் தனி நபர்களுக்கு சொந்தமான வயல்வெளி உள்ளதால், வயல்களிலும, சேற்றிலும் இறங்கி சடலத்தை தூக்கி செல்லும் நிலை உள்ளது.இது குறித்து இப்பகுதி மக்கள் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில்  நேற்று பெரிய அக்ரஹாரம் பகுதியில் உயிரிழந்த முதியவரின் உடலை அவரது உறவினர்கள் சிரமப்பட்டு வயலில் இறங்கி, சேரும் சகதியுமான வரப்புகள் வழியாக தடுமாறி கொண்டு எடுத்துச் சென்றனர்.

    மேலும் மழைக் காலங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் போது உடலுடன் தடுமாறி விழுந்து செல்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சுடுகாட்டுக்கு உடலை எடுத்து செல்லும் வகையில் பாதை வசதி செய்து தரவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் நடத்த வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கிருஷ்ணகிரி நகராட்சி மற்றும் ஓசூர் மாநகராட்சி , காவேரிப் பட்டணம், பர்கூர், நாகோஜனஅள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக் கோட்டை, கெலமங்கலம் ஆகிய 6 பேரூராட்சிகளில் கடந்த 19&ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

    இதையடுத்து வாக்கு எண் ணிக்கை இன்று காலை நடந்தது.

    கிருஷ்ணகிரி நகராட்சி யின் 33 வார்டுகளில் பதி வான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. இதே போல் கிருஷ்ணகிரி ஆண் கள் கலைக்கல்லூரியில் காவேரிப் பட்டணம், பர்கூர், நாகோஜன அள்ளி, ஊத்தங் கரை ஆகிய 4 பேரூராட் சிகளில் தலா 15 வார்டுகளின்  வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதேபோல் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை மத்திகிரி அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 17 வார்டுகள், கெலமங்கலம் பேரூ ராட்சியில் 15 வார் டுகள்  என மொத்தம் 32 வார்டுகளின் வாக்கு எண்ணிக்கை தேன்கனிக் கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந் தது. 

    கிருஷ்ணகிரி நகராட்சி

    கிருஷ்ணகிரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் வார்டு வாரியாக வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்கள் விவரம் வருமாறு:&

    1-வது வார்டு பரிதா நவாப் (தி.மு.க.).
    2-வது வார்டு&ஜோதி (தி.மு.க.).
    3-வது வார்டு-சுதா (தி.மு.க.).
    4-வது வார்டு- ஜெய குமார் (தி.மு.க.)
    5-வது வார்டு மீனா, (தி.மு.க.)
    6-வது வார்டு- முகமது அலி(தி.மு.க).
    7-வது வார்டு- ஆயிஷா- திமுக கூட்டணி சார்பில்  த.மு.மு.க.).
    8-வது வார்டு- முகமது ஆசிப் (தி.மு.க)
    9-வது வார்டு- நாகஜோதி (அ.தி.மு.க)
    10-வது வார்டு- பா.ஜனதா கட்சி வெற்றி.

    தொடர்ந்து வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி நகராட்சியில் தி.மு.க. 13 இடங்களிலும்,  காங்கிரஸ் ஒரு இடத்திலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும், பா.ஜனதா கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
    கிருஷ்ணகிரி நகராட்சியில் 22 வார்டுகள் முடிவு வெளியாகி உள்ள நிலையில் திமுக கூட்டணி 14 இடங்களில் முன்னிலை இருந்து வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 பேரூராட்சிகளில் தி.மு.க. கைப்பற்றியது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், நாகோஜன அள்ளி, ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சிகள் உள்ளன. இந்த  6 பேரூராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது.

    கெலமங்கலம் பேரூராட்சி

     வார்டு-1 திமுக வெற்றி, வார்டு-2 சுயச்சை வெற்றி, வார்டு -3 அதிமுக வெற்றி, வார்டு-4 சுயச்சை வெற்றி, வார்டு- 5 சுயச்சை வெற்றி, வார்டு-6 அதிமுக வெற்றி, வார்டு-7 சுயச்சை வெற்றி,   வார்டு-8 சுயச்சை வெற்றி.

    தேன்கனிகோட்டை பேரூராட்சி

    வார்டு-1 சுயச்சை வெற்றி, வார்டு -2 திமுக வெற்றி, வார்டு-3 திமுக வெற்றி, வார்டு -4 திமுக வெற்றி, வார்டு- 5 காங்கிரஸ் வெற்றி( தி.மு.க. கூட்டணி), வார்டு-6 திமுக வெற்றி வார்டு -7 திமுக வெற்றி, வார்டு-8 திமுக வெற்றி

    கிருஷ்ணகிரியில் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி வேட்டியும் பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் வயது 26. கூலித்தொழிலாளி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. 

    இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் கிரானைட் கல் கடத்திச்சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கனிமவள உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் ஜெகதேவி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த டாரஸ் லாரியை சோதனை செய்தபோது அதில் 5 கிரானைட் கல்லை கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அதிகாரி பொன்னுமணி பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி அடுத்த ஆத்துக்காவாய் முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த ஆத்துக்காவாய் அருகில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோவில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

    இதையொட்டி கணபதி ஹோமம்,கோ பூஜை, நவகிரக சாந்தி தீபாராதனையும், காலை 11 மணிக்கு, சாமி கரிகோலம் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜை, யாகசாலை பூஜை மற்றும் முனீஸ்வரர் மூலமந்திர ஹோமம், சுவாமி பிரதிஷ்டை, பஞ்சமுக ருத்ர ஹோமம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து 3&ம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை, ருத்ர ஹோமம், தீபாராதனை நடந்தது. 

    தொடர்ந்து மூலவருக்கு சந்தன, குங்கும, பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார்.
    ஓசூர்:

    தேன்கனிக்கோட்டை தாலுகா கல்லு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது21).  கூலித்தொழிலாளி. 

    இவர் ஓசூரில் எம்ஜி சாலையில் உள்ள தனியார் மருத்து வமனை அருகில் டிராக்டர் ட்ரெய்லரில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். ஜெனரேட்டர் உடன் பொருத்தப்பட்டிருந்த அந்த ட்ராக்டர் டிரைலரில் எதிர்பாராதவிதமாக விஜயகுமாரை மின்சாரம் தாக்கியது.

    இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் இனிப்புக்கடை மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது31). இனிப்பு கடை மாஸ்டர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

    இதுதொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலியானார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அஞ்செட்டி அருகே உள்ள பஞ்சல் துணை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் என்கிற வீரபத்திரன் (வயது25). 

    இவர் மோட்டார் சைக்கிளில் அஞ்செட்டி -தேன் கனிக்கோட்டை சாலையில் மரக்கட்டா அருகே சென்று கொண்டிருந்தார்.  இவருடன் இவரது சகோதரி புட்டம்மா என்கிற புட்ட மாதம்மா என்பவரும் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் திடீரென கவிழ்ந்தது. 

    இந்த விபத்தில் படுகாயமடைந்த புட்டம்மாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புட்டம்மா பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×