என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலியானார்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அஞ்செட்டி அருகே உள்ள பஞ்சல் துணை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் என்கிற வீரபத்திரன் (வயது25).
இவர் மோட்டார் சைக்கிளில் அஞ்செட்டி -தேன் கனிக்கோட்டை சாலையில் மரக்கட்டா அருகே சென்று கொண்டிருந்தார். இவருடன் இவரது சகோதரி புட்டம்மா என்கிற புட்ட மாதம்மா என்பவரும் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் திடீரென கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த புட்டம்மாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புட்டம்மா பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






