என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் டிரைவரை கத்தியால் குத்திய பைனான்சியரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 38). டிரைவர். குறிஞ்சி நகரை சேர்ந்தவர் கணேஷ் (36). பைனான்சியர். ராமகிருஷ்ணன், ரூ.10 ஆயிரம் தொகையை கணேசிடம் வாங்கினார். 

    அதில் ராமகிருஷ்ணன் ரூ.5 ஆயிரத்தை திரும்ப கொடுத்து விட்டார். மீதி தொகை ரூ.5 ஆயிரத்தை கணேஷ் ராமகிருஷ்ணனிடம் கேட்டார். அப்போது ராமகிருஷ்னன் தன்னிடம் இல்லை என கூறியதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த கணேஷ் கத்தியால் ராம கிருஷ்ணனை குத்தினார். இதில் காயம் அடைந்த ராம கிருஷ்ணன் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

    இது குறித்து அவர் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில்  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாயமான கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள மாதஅக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நாயனநாயக் (வயது21). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து மாணவனின் தந்தை ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்து டெப்போ அருகில் நேற்று 75 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் சென்னை செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து டெப்போ உள்ளது. இந்த டெப்போ அருகில்  நேற்று 75 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். 

    இது பற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்தவித தகவலும் உடனடியாக தெரியவில்லை.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே தொகரப்பள்ளி அடுத்துள்ள ஆடாளம் பகுதியை சேர்ந்தவர் சென்னகேசவன். இவரது மனைவி சரோஜா.

    இந்த நிலையில் சென்னகேசவனுக்கும், தம்பி மனைவி மணியம்மாளுக்கு இடையே நிலத்தகராறு பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 18ந்தேதி அன்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. 

    இதனால் சென்ன சேகவன் மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகியோர் சேர்ந்து மணியம்மாளை சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

    இது குறித்து மணியம்மாள் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் பெண்ணை தாக்கியதாக சென்னகேசவனை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள முங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது34). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி விஜய லட்சுமி (27). 

    இந்த நிலையில் சிலம்பரசன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனை களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிலம்பரசன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத மின்விசிறியில் தூக்குபோட்டு செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

    இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித் தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே 2 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நகை_பணம் எரிந்து சேதமானது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சின்ன மாதையன். கூலி தொழிலாளி. 

    இந்த நிலையில் நேற்று இவர் தனது மனைவியுடன் கூலி வேலைக்கு சென்றி ருந்தார். பிற்பகலில் இவரது குடிசை வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்குள்ள மக்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது. 

    மேலும் அருகில் வசித்த சத்யராஜ் என்பது வீட்டிலும் தீ பரவியது. 

    நகை-பணம் நாசம் 

    இந்த தீ விபத்தில் சின்ன மாதையன் வீட்டில் இருந்த 4 பவுன் நகை  ,ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. இதேபோல் சத்யராஜ் வீட்டில் இருந்த அனைத்து தொடக்கம் தீயில் எரிந்து சேதமானது. 

    இந்த தீ விபத்து குறித்து நாகரசம் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட் டதாக கூறப் படுகிறது. 

    அடுத்தடுத்து இரண்டு வீடு களில் தீப்பிடித்து நகை பணம் சேதமான சம்பவம் அப்ப குதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

    ஒசூர் வனப்பகுதிகளில் வாழும் காட்டுயானைகளை கொன்று அதன் தந்தங்களை எடுத்து சென்று பெங்களுரு பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தமிழக வனப்பகுதிகளில் காட்டுயானைகளை கொன்று அதன் தந்தங்களை மர்மநபர்கள் சிலர் பெங்களுருவில் விற்பனை செய்து வருவதாக கர்நாடகா மாநிலம் தெப்பகுடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அங்குள்ள பொம்மசந்திரா பகுதியில் யானை தந்தங்களை விற்க முயன்ற தமிழகத்தை சேர்ந்த 5 பேர், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேரை பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த ரபீக் (வயது35), கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள பூதுகோட்டை கிராமத்தை சேர்ந்த மணி (35), நமிலேரி கிராமத்தை சேர்ந்த ஹரிஸ் (25), குச்சிப்பாறை கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் (37), தருமபுரி மாவட்டம் நாகசேனஹள்ளியை சேர்ந்த மணிகண்டன் (33) மற்றும் தியாகராஜன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் 6 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 2 காட்டுயானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒசூர் அருகே பெட்டமுகிலாளம் கிராமத்தை சேர்ந்த பவுன்ராஜ் (40) மற்றும் பசவராஜ் (45) ஆகியோர் தங்களுக்கு காட்டுயானைகளின் தந்தங்களை சப்ளை செய்ததாக தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து கர்நாடகா மாநில போலீசார் அவர்களை கைது செய்ய ஒசூர் வனக்கோட்ட பாதுகாவலர் கார்த்திகேயினியின் உதவியை நாடினர். பெட்டமுகிலாளம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த போலீசார் பவுன்ராஜ், பசவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஒசூர் வனப்பகுதிகளில் வாழும் காட்டுயானைகளை கொன்று அதன் தந்தங்களை எடுத்து சென்று பெங்களுரு பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்டு வந்தார்களா? அல்லது இவர்களுக்கு காட்டுயானைகளின் தந்தங்கள் எப்படி கிடைத்தது? தந்தங்கள் விற்பனையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என கர்நாடகா மாநில போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 2 நர்சிங் மாணவிகள் மாயமானார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கக்கதாசத்தை சேர்ந்த முத்துராஜ். இவரது மகள் சசிகலா (வயது22). இவர் குருபரபள்ளியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

    மேலும், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சிக்காக வந்து சென்றவர், கடந்த 21-ந்தேதி அன்று வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங் களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து முத்துராஜ் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சசிகலாவை தேடி வருகின்றனர்.

    இதே போல் ஓசூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவரது மகள் மகேஸ்வரி (20). இவர் நர்சிங் முடித்துவிட்டு, ஓசூர் ஏரித்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ராதா கிருஷ்ணன் ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மகேஸ்வரிவை தேடி வருகின்றனர்.
    ஓசூர் மாநகராட்சியில் போட்டியிட்ட 274 வேட்பாளர்களில் 170 பேர் டெபாசிட் இழந்தனர்
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் போட்டியிட்ட 274 வேட்பாளர்களில் 4 அ.தி.மு.க வேட்பாளர்கள் உள்பட 170 பேர் தங்கள் டெபாசிட்டுகளை இழந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜா, காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 274 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக 21, அதிமுக 16, காங்கிரஸ் 1,

    பா.ஜா 1, பா.ம.க 1, சுயேட்சைகள் 5 என மொத்தம் 45 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 170 பேர் தங்கள் டெபாசிட்டுகளை இழந்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 6 பேரூராட்சிகளில் 178 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த 6 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 178 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

    அதன் விவரம் வருமாறு: ஊத்தங்கரை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 87 பேர் போட்டியிட்டதில் 53 பேரும், பர்கூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 57 பேர் போட்டியிட்டதில் 27 பேரும்,

    நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் 15 வார்டுகளில் 53 பேர் போட்டியிட்டதில் 22 பேரும், தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் 17 வார்டுகளில் 72 பேர் போட்டியிட்டதில் 33 பேரும், கெலமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 64 பேர் போட்டியிட்டதில் 25 பேரும், காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 50 பேர் போட்டியிட்டதில் 18 பேரும் என மொத்தம் 6 பேரூராட்சியில் போட்டியிட்ட 383 வேட்பாளர்களில் 178 வேட்பாளர் தங்களது டெபாசிட்டுகளை இழந்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியை 36 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க. கைப்பற்றியது
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. மொத்த வாக்குகள் 16550 ஆகும். இதில் ஆண்கள் 7978. பெண்கள் 8586. மற்றவர்கள் 16. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சுயேட்சைகள் என 87 பேர் போட்டியிட்டனர்.  11 ஆயிரத்து 567 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மையத்தில் எண்ணப்பட்டது. இதில் திமுக 12 வார்டுகளிலும், அதிமுக ஒரு வார்டிலும், பாமக ஒரு வார்டிலும், சுயேட்டை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். 

    அதன்படி, 15 வார்டுகளில் தி.மு.க 12 வார்டுகளில் வெற்றி பெற்று, 38 ஆண்டிற்கு பின்னர் (1986-1991) ஊத்தங் கரை பேரூராட்சியை தி.மு.க கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற 9 பெண்களில் 8 பேர் தி.மு.க, ஒருவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்.

    கிருஷ்ணகிரியில் தி.மு.க. முகவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கோட்டை பகுதியை சேர்ந்தவர் பயாஸ்(40). இவர் நேற்று நகராட்சி வாக்குகள் எண்ணும் மையத்தில், வார்டு எண்1-ல் திமுக முகவராக செயல்பட்டார். 

    நகராட்சியில் தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றியதால், வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பயாஸ் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பயாஸ் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தி.மு.க.வினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×