என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    உக்ரைன்-ரஷ்யா போர் தமிழக& கேரள மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஓசூர் மாணவி கூறினார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் ஜான் எபினேசர் ராஜா (வயது50). இவர் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனிதா விடியா, தனியார் பள்ளி ஆசிரியை ஆவார். இவர்களது மூத்த மகள் சாரா லிசா கேடியா (21). உக்ரைனில் கார்க்கிவ் என்ற இடத்தில் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    உக்ரைன்-ரஷ்யா இடையே போர் சூழல் ஏற்பட்டதை அடுத்து கடும் அச்சமடைந்த ஜான் எபினேசர்,வனிதா தம்பதியினர் தங்களது மகளை அங்கிருந்து தமிழகம் அழைத்து வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். 

    அதனைத்தொடர்ந்து கடந்த 23-ந் தேதி போர் தொடங்கு வதற்கு ஒரு நாளைக்கு முன்பு உக்ரைனில் இருந்து அவர்களது மகள் சாரா விமானம் மூலம் தமிழகம் திரும்பி னார். சென்னையில் இருந்த அவர் நேற்று ஓசூர் வந்தார். அவரை பெற்றோர்கள் வாரி அணைத்து, பாசத்துடன் வரவேற்றனர்.

    உக்ரைன்&ரஷ்யா இடையே தற்போதைக்கு போர் வராது என்று மாணவர்கள் எண்ணி கொண்டிருந்தனர். ஆனால், எனது பெற்றோர்கள் மிகவும் அச்சமடைந்து கண்டிப்பாக நாடு திரும்பி விட வேண்டும் என வற்புறுத்தியதால் கடும் போராட் டத்துக்கு இடையே விமான டிக்கெட் பெற்று போருக்கு ஒரு நாளைக்கு முன்பு தமிழகம் வந்தேன். 

    என்னுடன் படிக்கும் மற்ற மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களை   சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு பாதுகாப்பு இல் லாமல், தவித்து வருகின்றனர்.

    தற்போது, அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. போர் சூழலில், பாதாள அறையில்  உணவின்றி தவிக்கும் தமிழக மாண வர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    ஒவ்வொரு மாணவர்களின் கைகளில் இருக்கும் செல் போன்களிலும் இணையதள வசதி இல்லாமல் போகக்கூடிய சூழலும் ஏற்படும். அப்போது அவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே விரைவில் அவர்களை பாது காப்பாக நாடு திரும்ப முயற்சிகளை மத்திய&மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரியில் 9ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி, 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 23ந் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாணவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் , பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    இதைத்தொடர்ந்து மாணவியின் தாய் நாகமணி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சுரேஷ் (20) என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஆட்டை தெருநாய்கள் கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா சூளகிரி சுற்று வட்டாரமான சூளகிரி பேரிகை சாலை, ஒசூர் கிருஷ்ணகிரி சாலை, உத்தனப்பள்ளி பகுதியில், அத்தி முகம் பகுதியில், பேரிகை பகுதியில், காமன் தொட்டி பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.

    இதனால் பகலிலும் இரவிலும் சாலை செல்வோர்களை நாய்கள் விரட்டுவதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் அத்திமுகம் கிராமத்தில் முரளி என்பவர் வீட்டில் சில ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    இந்த ஆடுகள் நேற்று மதியம் பேரிகை சூளகிரி சாலை அத்திமுகம் பகுதி மசூதிமுன்பு ஒரமான பகுதியில் ஒரு ஆடு மட்டும் மேய்ந்து கொண்டிருந்தது.

    அப்போது அங்கு சுற்றிதிரிந்த நாய்கள் அந்த ஆட்டை துரத்தி சென்று பிடித்து கடித்து குதறியது. இதனை கண்ட டெம்போ ஆட்டோ ஒட்டுனர்கள் நாய்களை விரட்டினர். இதனால் நாய்கள் ஓட்டம் பிடித்த தால் ஆடு சிறிய காயத்துடன் உயிர் தப்பியது.

    கிருஷ்ணகிரி நகராட்சியில் வெற்றி பெற்ற சுயேச்சை பெண் வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகராட்சி 14-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சங்கீதா, அ.தி.மு.க  துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந் தார். 

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி நகராட்சி 14-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட சங்கீதா கலைவாணன் , தி.மு.க வேட்பாளர் பர்வீன் ரசாத்தை விட விட 324 வாக்குகள் அதிக பெற்று வெற்றி பெற்றார், 

    இந்த நிலையில் காவேரிப்பட்டணத்தில் உள்ள  அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. வை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    கிருஷ்ணகிரியில் பெண்ணை தாக்கி வீட்டுச்சுவரை சேதப்படுத்திய மருத்துவ கல்லூரி காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே மேலசோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி நந்தினி (வயது 30). இவர் ஒரு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஜெய்குமார் (35). இவர் கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக ஜெய்குமார், நந்தினியிடம் அவதூறாக பேசி வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது வீட்டு காம்பவுண்டு சுவரை இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றிய புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஜெய்குமாரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் கருவூல அலுவலர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 47). இவர் கருவூலத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இவர் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே சிங்காரவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்& இன்ஸ்பெக்டர் சிவசந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் மனநலம் பாதித்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மகராஜகடை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ராமராஜ் (வயது 34). இவர் சற்று மனநிலை பாதித்தவர் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி, வீட்டில் வைத்து ராமராஜ் , தூக்குபோட்டார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமராஜ்  பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி கிருஷ்ணகிரி மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடித்த பாம்புடன் விவசாயி மருத்துவமனைக்கு வந்த சம்பவம் போச்சம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வீரமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (வயது 44). விவசாயியான இவர் இவரது விவசாய மாந்தோப்பில் தண்ணீர் பாய்ச்ச சென்றார்.

    அப்போது புதரில் இருந்த வி‌ஷ பாம்பு அவரை கடித்து விட்டது. இதனால வலியில் துடித்த அவர், தன்னை கடித்த பாம்பை விரட்டிச் சென்று பிடித்தார். பின்னர் அந்த பாம்பை பிளாஸ்டிக் பையில் கட்டி போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

    பாம்புடன் மனோகரன் வருவதை கண்ட மற்ற நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் மனோகரனை பரிசோதித்த மருத்துவர் தீவிர சிகிச்சையளித்தார்.

    கடித்த பாம்புடன் விவசாயி மருத்துவமனைக்கு வந்த சம்பவம் போச்சம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 105 கிலோ குட்கா கடத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகே சிப்காட் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் 105 கிலோ, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 7 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதனை, அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது31) என்பவர் விற்பனைக்காக, பெங்களூருவில் இருந்து காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து ரூ.42,000/- மதிப்புள்ள குட்கா பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் பிரதீப்பையும் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் திருமல்லப்பா. இவரது மனைவி பூமிகா (வயது19). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. பூமிகா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.  இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த பூமிகா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டில் இளம்பெண் இறந்துள்ளதால் இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா விசாரணை நடத்தி வருகிறார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கூட்டுறவு வங்கி தலைவர் பதவியில் இருந்து அ.தி.மு.க. பிரமுகர் நீக்கம் செய்யப்பட்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாரண்டப் பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பஜ்ஜேப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர் மாதேசப்பா என்பவர் தலைவ ராகவும், துணைத்தலைவராக புஷ்பம்மா என்பவரும் 9 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலை யில் சங்கத் தலைவர் சங்க நடவடிக்கைக்கு விரோதமாக செயல்படுவதாகவும் , உறுப்பினர்களுக்கு வேளாண்மை கடன் வழங்காமலும் சங்க பணிகளில் தொய்வு இருப்பதாகவும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளருக்கு நிர்வாக குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 22ந் தேதி சங்க கூட்டம் கூட்டி துணைத் தலைவர் உள்பட 8 நிர்வாக குழு உறுப்பினர்களும் மாதே சப்பா மீது நம்பிக்கையில்லா  தீர்மானம் கொண்டு வந்தனர். அதன்பேரில் சங்கத் தலைவர் மாதேசப்பாவை தகுதி நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். மேலும் துணைத் தலைவர் புஷ்பம்மா பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    மத்திகிரி அருகே முன் விரோதத்தில் வாலிபரை வெட்டிக் கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மத்திகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே பேள கொண்டப் பள்ளி பக்கமுள்ளது பெரியமேனா அக்ரஹாரம். இந்த ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 30). கூலித் தொரிலாளி.

    இவர் ஓசூர் அருகே குமாரனப்பள்ளி ஏரிக்கரையில் நேற்று முன்தினம் கை, வயிறு, முகம் ஆகிய பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டு கொலையுண்டு கிடந்தார்.

    இந்த கொலை தொடர் பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 

    மேலும் கொலை செய்யப்பட்ட கிருஷ்ணப் பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணப்பாவை அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 31), ஜாக்கி என்கிற ஜெயகுமார் (25), லச்சு என்கிற லட்சுமி நாராயணன் (24) என தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீசாரின் விசார ணையில் மஞ்சுநாத்தின் உறவுக்கார பெண் ஒருவரை பற்றி கிருஷ்ணப்பா தவறாக பேசியதும், அதனால் ஏற்பட்ட பிரச்சினையில் கிருஷ்ணப்பாவை மஞ்சுநாத் தரப்பினர் வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது- அது தொடர்பாக மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×