என் மலர்
உள்ளூர் செய்திகள்

105 கிலோ குட்காவுடன் கைது செய்யப்பட்ட கார் டிரைவர்
105 கிலோ குட்கா கடத்திய கார் டிரைவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 105 கிலோ குட்கா கடத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகே சிப்காட் போலீசார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் 105 கிலோ, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 7 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை, அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது31) என்பவர் விற்பனைக்காக, பெங்களூருவில் இருந்து காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து ரூ.42,000/- மதிப்புள்ள குட்கா பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் பிரதீப்பையும் கைது செய்தனர்.
Next Story






