என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுயேச்சை வேட்பாளர் சங்கீதா , கே.பி.முனுசாமி  முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த போது எடுத்த படம்.
    X
    சுயேச்சை வேட்பாளர் சங்கீதா , கே.பி.முனுசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த போது எடுத்த படம்.

    வெற்றி பெற்ற சுயேச்சை பெண் வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்

    கிருஷ்ணகிரி நகராட்சியில் வெற்றி பெற்ற சுயேச்சை பெண் வேட்பாளர் அ.தி.மு.க.வில் இணைந்தார்
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி நகராட்சி 14-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சங்கீதா, அ.தி.மு.க  துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந் தார். 

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி நகராட்சி 14-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட சங்கீதா கலைவாணன் , தி.மு.க வேட்பாளர் பர்வீன் ரசாத்தை விட விட 324 வாக்குகள் அதிக பெற்று வெற்றி பெற்றார், 

    இந்த நிலையில் காவேரிப்பட்டணத்தில் உள்ள  அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ. வை அவரது இல்லத்தில் சந்தித்து, தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    Next Story
    ×