என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி பஸ் டெப்போ அருகில் இறந்து கிடந்த முதியவர்
கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்து டெப்போ அருகில் நேற்று 75 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் சென்னை செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து டெப்போ உள்ளது. இந்த டெப்போ அருகில் நேற்று 75 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார்.
இது பற்றி கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்தவித தகவலும் உடனடியாக தெரியவில்லை.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






