என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர் வெற்றி பெற்றார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், நாகோஜன அள்ளி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் இந்த 6 பேரூராட்சிகளிலும் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவராக தி.மு.க. வை சேர்ந்த அம்சவேணி செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நாகோஜன அள்ளி பேரூராட்சி தலைவராக வி.சி.தம்பிதுரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த அமானுல்லா வெற்றி பெற்றார்.
தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி தலைவராக 18&வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.சீனிவாசன், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பர்கூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வேட்பாளராக செந்தாமரை பாலன் நிறுத்தப்பட்டு இருந்தார்.
இதையொட்டி இன்று காலை நடந்த தலைவர் தேர்தலில் செந்தாமரை பாலனை எதிர்த்து தி.மு.க. வை சேர்ந்த சந்தோஷ்குமார் போட்டியிட்டார். கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சந்தோஷ்குமார் வெற்றி பெற்றார்.
கெலமங்கலம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக உமா நிறுத்தப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று நடந்த தேர்தலில் உமாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.பி.தேவராஜ் மனு செய்தார். இதில் உமா தலைவர் பதவிக்கு மனு செய்ததால் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.தேவராஜ் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
தி.மு.க. வேட்பாளர் உமா, தலைவர் பதவிக்கு போட்டியிடாதது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கு நிறுத்தியிருந்த உமாவும், தற்போது தலைவர் பதவியில் வெற்றி பெற்ற கே.பி.தேவராஜிம் உடன்பிறந்த அண்ணன்- தங்கை ஆவார்கள்.
இதனால் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவியை தனது அண்ணனுக்காக உமா, விட்டு கொடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவி பறிபோனதால் தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் எதிர்பாராத திருப்பமாக தலைவர் பதவியை கைப்பற்றியதால் அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கழிவுநீர் தொட்டியில் ஆண் பிணம் கிடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே தனியார் கார் கம்பெனி உள்ளது.
இதன் அருகில் ஊழியர்கள் தங்கும் அறையின்பகுதியில் கழிவுநீர் தொட்டிஉள்ளது. இந்த தொட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார்.
இதை அங்குள்ளவர்கள் பார்த்து குருபரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் முகமது சுபானுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணிமற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கழிவுநீர் தொட்டியில் பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து பெயிண்டர் பலியானார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பளளி அருகே உள்ள தேவீரஹள்ளியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 37).பெயிண்டர்.
இவர் ஓசூர் கதிரேப்பள்ளியில் தண்ணீர் தொட்டிக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சிலம்பரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிலம்பரசன் இறந்தார்.
இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து நேற்று மாலை 6.30 மணிக்கு அம்மனுக்கு விடாய் உற்சவமும், ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் ஏராளமானபக்தர்கள் கூழ் எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். தொடர்ந்து அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடல் பாடினார்கள்.
பின்னர் தீபம் ஏற்றி அம்மனைவழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று(மார்ச் 4) மாலை 6:30 மணிக்கு அக்னி குண்ட தீ மிதி விழா நடைபெற உள்ளது.
தி.மு.க. சார்பில் ஓசூர் மாநகர பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்ஏவுமான எஸ். ஏ.சத்யா அறிவிக்கப்பட்டு, இன்று நடந்த மறைமுக தேர்தலில் அமோக வெற்றிபெற்றார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு நடைபெற்ற முதல் தேர்தலில், தி.மு.க.சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.ஏ.சத்யா 27வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் எஸ். நாராயணனுக்கு 18 வாக்குகள் கிடைத்தன.
ஓசூர் நகராட்சியாக இருந்து, கடந்த 2016-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட ஓசூர் மாநகராட்சி, கடந்த 19-ந் தேதி முதல் தேர்தலை சந்தித்தது. இதில், தி.மு.க. 21 இடங்களிலும், அ.தி.மு.க. 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. பா.ஜ.க, காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களிலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் பெற்றி பெற்றனர். பின்னர், 4 சுயேட்சைகள் தி.மு.க.விலும், 1 சுயேட்சை வேட்பாளர் காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்தனர். சுயேட்சைகள் தி.மு.க.வில் சேர்ந்ததை அடுத்து தி.மு.க.விற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தது.

மேலும், கட்சியினர் நகரின் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயரான எஸ்.ஏ.சத்யா ஓசூர் மாநகர தி.மு.க. பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவர், மோட்டார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் இயக்குனர் ஆவார். இவருக்கு, ஹரிஹரன் என்ற மகன் உள்ளார்.
சத்யா, கடந்த 2006 ஆம் ஆண்டு ஓசூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். பின்னர், கடந்த 2019 ஆண்டு, அ.தி.மு.க அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டி, தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஓசூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளராக சத்யா போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆனார். சத்யா, தற்போது ஓசூர் 23-வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.என். போடுர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா மற்றும் பாலம்மா. இவர்களின் இரு தரப்பு உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த நாகபூஷணம் மற்றும் யுவராணி ஆகியோர் காதலித்து வந்தனர். இது தொடாபாக இருதரப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இதையடுத்து யுவராணி தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாக பூஷணம் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் காதல் ஜோடியின் உறவினர்களான சசிகலா மற்றும் பாலம்மா குடும்பத்தினர் கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை யடுத்து இருதரப்பினரும் சிகிச்சை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக சசிகலா மற்றும் பாலம்மா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பினரை சேர்ந்த பாலம்மா, ராஜப்பா, சென்றாயன், சங்கரம்மா,பசவராஜ் சீதப்பா, லட்சுமிபதி, சசிகலா ஆகியோர் மீது வேப்பனப் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் மாநகராட்சி மேயர், துணைமேயர் தேர்தலில் 3 மொழிகளில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் நேற்று பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மேயர், துணை மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குச்சீட்டு, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இருக்கும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை பின் பற்றி,அனைத்து உறுப்பினர்களும் காலை 9.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் கூட்டரங்கிற்கு வந்துவிட வேண்டும். மேயருக்கான மறைமுக தேர்தல், காலை 10 மணிக்கு நடைபெறும். 10 மணிக்கு பின்னர் உறுப்பினர்கள் யாரேனும் வந்தால், கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேயர் தேர்தலைத் தொடர்ந்து, அன்று பிற் பகல் 3 மணிக்கு துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெறும். இதில் கலந்து கொள்ள 2.30 மணிக்கு, கவுன்சிலர்கள் அனைவரும் அரங்கிற்குள் வந்துவிட வேண்டும்.
மேயர், துணை மேயருக் கான மறைமுகத்தேர்தலின்போது, 45 கவுன்சிலர்கள் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவிர வேறு யாரும் தேர்தல் நடைபெறும் இடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒருவேளை, வாக்குச் சீட்டை பயன்படுத்தி வாக்களிக்க இயலாத கவுன்சிலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் உதவியுடன் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம். இவ்வாறு ஆணையாளர் பாலசுப்பிர மணியன்,நிருபர்களிடம் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வாகனம் மோதி ராணுவ வீரர் பலியானார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே மாரி செட்டிஅள்ளி ஜெக்கு கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35), காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காவேரிப்பட்டணத்தில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் அறிவழகன் சென்று கொண்டிருந்தார். அப்போது தென்பெண்ணை ஆற்றுபாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட அறிவழகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத் ததும் நாகரசம்பட்டி போலீ சார் விரைந்து வந்து அறிவழகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப் பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தொடர்ந்து தேடி வரு கின்றனர்.
விபத்தில் பலியான ராணுவ வீரர் அறிவழகனுக்கு விக்டோரியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஆட்டோ டிரைவரிடம் ‘குரங்கு’ காட்டிய பாச விளையாட்டு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த தேவரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 42). ஆட்டோ ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு , ரவியின் ஆட்டோவில் ஒரு குரங்கு ஏறியது. அப்போது ரவி, குரங்கை விரட்டினார். ஆனால் குரங்கு ஆட்டோவை விட்டு செல்லாமல் அடம்பிடித்தது.
மேலும் ரவி, ஆட்டோவை எடுத்து கொண்டு சென்றால், குரங்கு அவரது தலையின் மீது அமர்ந்து கொண்டது. இதனால் குரங்கின் பிடியில் இருந்து ரவி சிக்கி தவித்தார். எப்போதும் ஆட்டோவில் குரங்கு இருந்து வந்ததால் பயணிகளும் ஆட்டோவில் ஏற மறுத்தனர்.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் ரவி, குரங்கை தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க நேற்று முடிவு செய்தார். அதன்படி வனத்துறை அலுவலகத்துக்கு வந்த ரவி, குரங்கை ஒப்படைக்க முயன்றார். ஆனால் குரங்கு அவரை விட்டு பிரிய மனமில்லாமல் தலை மீது அமர்ந்து கொண்டது. இதனால் வனத்துறையினரும் குரங்கை பிடிக்க எவ்வளவோ போராடி பார்த்தனர். அப்போது கோபத்தில் இருந்த குரங்கு, கடிப்பது போல் வாயை திறந்து மிரட்டியது.
பிறகு ஒருவழியாக வனத்துறை ஊழியர்கள், ரவியிடம் இருந்து குரங்கை பிரித்தனர். ஆனாலும் குரங்கு ரவியை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் வனத்துறை ஊழியர்களை ஏமாற்றி விட்டு, மீண்டும் ரவியின் மேல் தாவி ஏறியது.
குரங்கின் பிடிவாத விளையாட்டால் இதென்ன வம்பா போச்சு...? என்று ரவி மீண்டும் நொந்து போனார். பிறகு ஒருவேளையாக வனத்துறையினர், குரங்கை பிடித்து விட்டு ரவியை ஆட்டோவுடன் அனுப்பினர்.
இந்த நிலையிலவனத்துறை ஊழியர்களின் பிடியில் இருந்து நேற்று மாலை குரங்கு தப்பி வெளியே சென்றது. பிறகு தேன்கனிக்கோட்டை ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ரவியை அங்குமிங்கும் குரங்கு தேடி பார்த்தது.
ஆனால் குரங்கின் வருகையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட ரவி, தற்போது தனது ஆட்டோவை வேறு இடத்தில் நிறுத்தி சவாரிக்கு சென்று வருகிறார்.
ஆட்டோ டிரைவரிடம் ‘குரங்கு’ காட்டிய பாச விளையாட்டு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை யை சேர்ந்த மாவட்ட மீனவர் அணி தலைவர் ஸ்ரீராமன் மற்றும் தேன்கனிக்கோட்டைக்கு உட்பட்ட மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்த மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் ரமேஷ், ஆகிய இருவரும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராக மாற்று கட்சியினருக்கு தேர்தல் பணியில் ஈடுபட்ட நிர்வாகிகளை மாநில தலைமை அறிவிப்பின்படி கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளனர் .
இதனால் ஸ்ரீராமன், ரமேஷ் ஆகிய இருவரிடமும் கட்சி நிர்வாகிகள் கட்சி ரீதியாக எந்த தொடர்பில இருக்கவேண்டாம் என்று மாவட்ட தலைவர் நாகராஜ் வௌ¤யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே மாடு முட்டி முதியவர் இறந்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 60).
இந்த நிலையில் நேற்று இவர் கந்திகுப்பம் பகுதியில் நடந்த மாட்டுச்சந்தைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு நின்ற ஒரு மாடு, திடீரென சின்னதம்பியை முட்டி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதம்பி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. இந்த விழாவினையொட்டி காலை அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பக்தர்கள் அலகு குத்தியும், உடலில் எலுமிச்சம் பழங்களை குத்திக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி வேடம் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
பூசாரிகளிடம் பக்தர்கள் சாட்டையடின வாங்கி கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் பூத வாகனத்தில் அமர்ந்து அம்மன் மயான கொள்ளைக்கு புறப்பட்டு சென்றார். இந்த திருவிழாவில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
விழாவில்,கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் 50-க்கும் மேற்பட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், பொதுமக்கள் தண்ணீர், நீர்மோர், அன்னதானம் போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்கள்.