என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்கு

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பெண்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.என். போடுர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா மற்றும் பாலம்மா. இவர்களின் இரு தரப்பு உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த நாகபூஷணம் மற்றும் யுவராணி ஆகியோர் காதலித்து வந்தனர். இது தொடாபாக இருதரப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. 

    இதையடுத்து யுவராணி தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாக பூஷணம் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. 

    இந்நிலையில் நேற்று  மாலை இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் காதல் ஜோடியின் உறவினர்களான சசிகலா மற்றும் பாலம்மா குடும்பத்தினர் கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதை யடுத்து  இருதரப்பினரும் சிகிச்சை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு வேப்பனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    இது தொடர்பாக சசிகலா மற்றும் பாலம்மா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் இரு தரப்பினரை சேர்ந்த பாலம்மா, ராஜப்பா, சென்றாயன், சங்கரம்மா,பசவராஜ் சீதப்பா,  லட்சுமிபதி, சசிகலா ஆகியோர் மீது வேப்பனப் பள்ளி போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×