என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
ஓசூர் மாநகராட்சி மேயர், துணைமேயர் தேர்தலில் 3 மொழிகளில் வாக்குச்சீட்டு
ஓசூர் மாநகராட்சி மேயர், துணைமேயர் தேர்தலில் 3 மொழிகளில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும் என்று ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஓசூர்:
ஓசூர் மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் நேற்று பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மேயர், துணை மேயர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குச்சீட்டு, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இருக்கும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை பின் பற்றி,அனைத்து உறுப்பினர்களும் காலை 9.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் கூட்டரங்கிற்கு வந்துவிட வேண்டும். மேயருக்கான மறைமுக தேர்தல், காலை 10 மணிக்கு நடைபெறும். 10 மணிக்கு பின்னர் உறுப்பினர்கள் யாரேனும் வந்தால், கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேயர் தேர்தலைத் தொடர்ந்து, அன்று பிற் பகல் 3 மணிக்கு துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெறும். இதில் கலந்து கொள்ள 2.30 மணிக்கு, கவுன்சிலர்கள் அனைவரும் அரங்கிற்குள் வந்துவிட வேண்டும்.
மேயர், துணை மேயருக் கான மறைமுகத்தேர்தலின்போது, 45 கவுன்சிலர்கள் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவிர வேறு யாரும் தேர்தல் நடைபெறும் இடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒருவேளை, வாக்குச் சீட்டை பயன்படுத்தி வாக்களிக்க இயலாத கவுன்சிலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் உதவியுடன் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம். இவ்வாறு ஆணையாளர் பாலசுப்பிர மணியன்,நிருபர்களிடம் கூறினார்.
Next Story






