என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் மாது. இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார். 

    இந்த நிலையில் கணவன் & மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 

    இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாக 3 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ்சூப்பிரண்டு அலெக்சாண்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் விஸ்வநாதபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52). பழவியாபாரி. 

    இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக மன முடைந்து காணப்பட்ட இளங்கோவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்துஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே மாயமான 3 குழந்தைகளின் தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள தேவீரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுகவனீஸ்வரன். இவருக்கு சசிகலா (வயது 27) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். 

    இந்த நிலையில் சசிகலாவிற்கு கணவர் சுகவனீஸ்வரனுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் மீண்டும் கடந்த 1-ந் தேதி கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. சிறிதுநேரம் கழித்து கடைக்கு சென்றுவதாக கூறி சசிகலா சென்றார். கடைசி குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

    இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் சுகவனீஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடியும்  மனைவி& குழந்தையை காணவில்லை.

    இதையடுத்து அவர் பாரூர்  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது21). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் ஓசூரில் மூக்கண்டப்பள்ளியில் என்.டி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார். 

    சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளை அந்த விடுதியில் நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தினேஷ்குமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரஷ்யா போரை நிறுத்த கோரி வாலிபர் நூதன போராட்டம் நடத்தினார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவில், உக்ரைன் மீது, ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், ரஷ்யா உடனடியாக போரை கைவிடக் கோரியும், உக்ரைனில் பயின்று வரும், இந்திய மாணவர்களை பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவர் ஒருவர், பதாகையை கையில் ஏந்தி, நேற்று மாலை திடீரென நூதன போராட்டம் செய்தார்.

    பிறகு சிறிதுநேரம் கழித்து அந்த மாணவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். 

    ரவுண்டானா அருகே வாலிபர் திடீரென போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல் பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்கான் இவரது மனைவி தீபா (வயது 34).

    இவருக்கும் கணவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தீபா சம்பவத்தன்று  தன் உடல் மீது மண் எண் ணை ஊற்றி கொண்டு அலறினார்.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக தீபாவை ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில்   சேர்த்தனர்.  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தீபா நள்ளிரவு இறந்தார். 

    இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சோம நாதேஸ்வரர் கோவில் வலாளகத்தில் ஏற்கனவே இருந்த ஸ்ரீ தூருவாச முனிவர் கோயில் புதியதாக புனர் அமைக்கப்பட்டு கும்பாபேபிஷேகம் விழா நடந்தது .
    ராயக்கோட்டை, மார்ச்.5& -

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சோம நாதேஸ்வரர் கோவில் வலாளகத்தில் ஏற்கனவே இருந்த ஸ்ரீ தூருவாச முனிவர் கோயில் புதியதாக புனர் அமைக்கப்பட்டு கும்பாபேபிஷேகம் விழா  நடந்தது .

    காலை கணபதி பூஜை, கங்கா பூஜை, புண்ணி யாதானம் காப்புகட்டுதல், பிராணபிஸ்த, மகாபூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று பிரம்மா முகூர்த்தத்தில் விமான கோபுர கும்ப கலச அபிஷேகமும் தூருவாச முனிவருக்கு கலச அபிஷேகமும் சிறப்பு ஆராதனை, அலங்காரமும், சிறப்பு அர்ச் சனையும், சுவாமிக்கு கண் திறப்பும், கோமாதா பூஜை ஆராதனையும் அதை தொடர்ந்து மகாதீப ஆராதனையும் நடை பெற்றது. அதை தொடர்ந்து தீர்த்த பிரசா தமும் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய் திருந் தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய் தனர் அனைவருக்கு அன்னதானம் வழங் கப்பட்டது.

    தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட போட்டிவேட்பாளர் சந்தோஷ்குமார் வெற்றி பெற்று தலைவரான சம்பவம் தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 15 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், தி.மு.க. 9 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும்,சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

    இதையடுத்து தி.மு.க. சார்பில் 10-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.பேரூர் செயலாளரின் மனைவியும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான செந்தாமரைபாலனை வேட்பாளராக தி.மு.க. தலைமை அறிவித்தது.

    நேற்று நடந்த தலைவர் தேர்தலில் செந்தாமரை பாலனை எதிர்த்து தி.மு.க. சார்பில் 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றசந்தோஷ்குமார் போட்டி வேட்பாளராக போட்டியிட்டார்.

    வாக்குப்பதிவில் 15 வார்டு உறுப்பினர்களும் பங்கேற்று வாக்களித்தனர்.

    வாக்கு பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளரான செந்தாமரை பாலனுக்கு எதிராக போட்டியிட்ட, தி.மு.க.வை சேர்ந்த போட்டி வேட்பாளர் சந்தோஷ்குமார் 9 வாக்குகளும்,தி.மு.க. வேட்பாளர் செந்தாமரை 6 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    இதையடுத்து பேரூராட்சி தலைவராக சந்தோஷ்குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

    இந்த நிலையில் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் 5-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி லட்சுமி மனோகரன் வெற்றி பெற்றார்.

    தி.மு.க. தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட போட்டிவேட்பாளர் சந்தோஷ்குமார் வெற்றி பெற்று தலைவரான சம்பவம் தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர்கள் பதவியில் கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

    இதை ஏற்று பர்கூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து வெற்றிபெற்ற சந்தோஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே கார் மோதி மெக்கானிக் பலியானார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி  அடுத்த பேர் அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 41). இவர் கிருஷ்ணகிரியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் நேற்று வேலை முடிந்து கிருஷ்ணகிரியில் இருந்து பேரஅள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பூச்சி தாக்குதலால் தொடர் நஷ்டம் ஏற்பட்டதால் மா மரங்களை விவசாயி அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி மாரிசெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவண பெருமாள் (வயது 45),விவசாயி.

    இவர் கடந்த 25 ஆண்டுகளாக தனது 3 ஏக்கர் நிலத்தில் மா விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர் நஷ்டம் ஏற்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் மாமரங்களில் அதிகளவு பூக்கள் பிடித்தன. அதிக மகசூல் கிடைக்கவும், பூக்கள் உதிராமல் இருக்கவும், பூச்சி மருந்து  அடித்து ஒரு மாதம் ஆன நிலையில் பூக்கள் கருகின. மேலும் வெறும் மாமரம் மட்டுமே இருந்ததால் சரவண பெருமாள் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் வேதனையில் இருந்து வந்த அவர், தனது தோப்பில் இருந்து மாமரங்களை வெட்டி செங்கல் சூளைக்கு விற்று வருகிறார்

    இதுகுறித்து விவசாயி சரவண பெருமாள் கூறியதாவது:

    கடந்த வாரம் கிருஷ்ணகிரியில் மாவட்ட கலெக்டரிடம் மா விவசாயிகள் சார்பில் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.  அதேபோல் பையூர் வேளாண்மை மைய அதிகாரிகள், இந்த பகுதிக்கு வந்து மாமரத்துக்கு என்ன மருந்து பயன்படுத்த வேண்டும் என்று இதுவரை ஆய்வு செய்யாமல் இருந்து வருகிறார்கள். இனி மா விவசாயத்தை நம்பி எந்த பலனும் இல்லை.

    மேலும் மா விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் விரக்தியில் தோப்பில் இருந்து அனைத்து மாமரங்களையும் வெட்டி விற்று விட்டேன். இனி மாற்று  விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் பேட்டராய சாமி கோவில் அருகில் ரோந்து சென்றனர்.

    அங்கு பணம் வைத்து சூதாடிய மாரசந்திரம் ரமேஷ் (42), பி.ஜி.தொட்டி முத்து (22), கோட்டைவாசல் பாக்யராஜ் (38), சந்தைமேடு தெரு விஜய் (38), அண்ணாநகர் மாதேஷ் (37), மேல்கொட்டாய் சாகுல் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா ஆனந்தூர் அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35).தொழிலாளி. 

    இவர் மோட்டார் சைக்கிளில் ஓலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் கோவிந்தராஜ் மீது மோதினார்.

    இந்த விபத்தில் கோவிந்தராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தராஜ் இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×