என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
3 குழந்தைகளின் தாய் மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே மாயமான 3 குழந்தைகளின் தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள தேவீரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுகவனீஸ்வரன். இவருக்கு சசிகலா (வயது 27) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சசிகலாவிற்கு கணவர் சுகவனீஸ்வரனுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் மீண்டும் கடந்த 1-ந் தேதி கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டது. சிறிதுநேரம் கழித்து கடைக்கு சென்றுவதாக கூறி சசிகலா சென்றார். கடைசி குழந்தையுடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் சுகவனீஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடியும் மனைவி& குழந்தையை காணவில்லை.
இதையடுத்து அவர் பாரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Next Story






