என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரஷ்யா போரை நிறுத்தக்கோரி வாலிபர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்திய போது எடுத்த படம்
    X
    ரஷ்யா போரை நிறுத்தக்கோரி வாலிபர் பதாகை ஏந்தி போராட்டம் நடத்திய போது எடுத்த படம்

    ரஷ்யா போரை நிறுத்தக்கோரி வாலிபர் போராட்டம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரஷ்யா போரை நிறுத்த கோரி வாலிபர் நூதன போராட்டம் நடத்தினார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவில், உக்ரைன் மீது, ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்துவதை கண்டித்தும், ரஷ்யா உடனடியாக போரை கைவிடக் கோரியும், உக்ரைனில் பயின்று வரும், இந்திய மாணவர்களை பாதுகாப்புடன் மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரியும் மாணவர் ஒருவர், பதாகையை கையில் ஏந்தி, நேற்று மாலை திடீரென நூதன போராட்டம் செய்தார்.

    பிறகு சிறிதுநேரம் கழித்து அந்த மாணவர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். 

    ரவுண்டானா அருகே வாலிபர் திடீரென போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×