என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    காவேரிப்பட்டணம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி
    காவேரிப்பட்டணம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால்
    பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள குண்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் மணிக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் கணவரை விட்டு ரேணுகா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் கடந்த 1 வருடமாக தாய் வீட்டில் ரேணுகா மனமுடைந்து காணப்பட்டது. இதில் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து காவேரிப் பட்டணம் போலீசார்  வழக்குபதிவு செய்தனர்.மேலும் ரேணுகாவுக்கு திருமணமாகி 4 வருடம் ஆன நிலையில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரணை நடத்தி வருகிறார்.
    டாஸ்மாக் கடை அருகே பீர் பாட்டிலால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தேன்கனிகோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த தேவகான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் போலசாரி. இவரது மகன் ராஜேஷ் (வயது 26 ).இவர் உளிவீரனப்பள்ளியில் உள்ள தனியார் பேட்டரி கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ராஜேஷ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மதக்கொண்டபள்ளி டாஸ்மாக் கடை பின்புறம் ராஜேஷ் அடித்து படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் சப்இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்த ராஜேசின் தலையில் பின்புறம் பலத்த ரத்தக்காயம் நெற்றியில் வாய்ப்பு காயங்களும் இருந்தன. மேலும் சற்று தூரத்தில் பாறை ஒன்றின் மீது உடைந்த பீர் பாட்டில் ரத்தக்கறை இருந்தது. இதையடுத்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மது குடிக்கும் போது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் ராஜேஷ், அடித்துக் படுகொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. ராஜேசை படுகொலை செய்தவர்கள் யார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டாஸ்மாக் கடை அருகே பீர் பாட்டிலால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஓசூரில் வீட்டின் பூட்டு உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூர் கே.சி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ். இவரது மனைவி கவிதா (வயது40). 

    இந்த நிலையில் இவர் கடந்த 7&ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். 

    அப்போது  பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர்

    வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை பெற்றோர் கண்டித்ததால் அரசு போக்குவரத்து கண்டக்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது32). இவர் சென்னையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து துறையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கு மதுகுடிக்கம் பழக்கம் உள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை பெற்றோர் பாரதிராஜாவை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்றிரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த சிங்காரபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தூக்கில் பிணமாக கிடந்த பாரதிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி டேம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே சாப்பரம் அடுத்துள்ள கருத்தமாரம்பட்டி பகுதியில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் அறங்காவலராக அபிமன்னன் (வயது44) இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 8&ந்தேதி அன்று வழக்கம் போல் பூஜையை பூசாரி செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்க்கும் போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அறங்காவலர் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் இரவு கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்றது தெரியவந்தது. 

    இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசில் அறங்காவலர் அபிமன்னன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது41). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளை அங்குள்ள போட்டோ ஸ்டுடியோ முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் காணவில்லை. 

    இதேபோல்  திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணி (27) என்பவர் லாட்ஜி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் காணவில்லை.

    இது குறித்து இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (28). மெக்கானிக் கான இவர் தனது மோட்டார் சைக்கிளை டிராவல்ஸ் ஆபீஸ் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் மாயமானது.

    இதேபோல் குருபரபள்ளியை சேர்ந்த பழனி (49) என்பவர் ஏரிக்கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் காணவில்லை.

    இது குறித்து குருபரபள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    சூளகிரி அருகே எருது விடும் விழா நடைபெற்றது.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், - சூளகிரி தாலுகா- காமன்தொட்டி அருகே தாசன்புரம் எருது விடும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, கோபசந்திரம், புக்காசாகரம், அட்டகுறுக்கி, டோரிப்பள்ளி, கானல்லட்டி, அத்திமுகம், சூளகிரி பேரிகை, பாத்தகோட்டா, உத்தனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 மேற்பட்ட எருதுகள் கொண்டு வரப்பட்டன. இந்த எருதுவிடும் விழாவில் 500 மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு எருதுகளை அடக்கினர்.

    இந்த நிகழ்ச்சியை அனைத்து கிராமத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த எருதாட்டத்தை பேரிகை சூளகிரி காவல் நிலையத்தை சார்ந்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மத்தூர் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் திடீர் என மாயமானார்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் செட்டியப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ரேஸ்மா (வயது19). இவருக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த சையது உசேன் என்ப வருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன்& மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்கு தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு ரேஸ்மா சென்று விட்டார்.

    கடந்த 6&ந்தேதி அன்று தனது  தாயிடம் ரேஸ்மா கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து சகிரா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ரேஸ்மாவை தேடி வருகின்றனர்.

    ஊத்தங்கரை அருகே இரும்பு சீட்டை திருடிய வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர்& சேலம் செல்லும் சாலை 4 வழி சாலையாக  மாற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 

    இந்த பணியின் போது பாலம் கட்டுவதற்கு வைத்திருந்த இரும்பு சீட்டை மர்ம நபர்கள் 2 பேர் நேற்று திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் திருடர்களை சுற்றி வளைத்து பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர். 

    அங்கு போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கொண்டம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் விஜய் (வயது19), திப்பம்பட்டியை சேர்ந்த முருகன் மகன் அருள் (18) ஆகியோர் என தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.

    அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சூளகிரி,.

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டை தெரு, வாணியர் தெரு, கீழ்தெரு, மூஸ்லீம் தெரு, அண்ணா நகர், கமலா காலனி, காமராஜர் நகர்,  ஒசூர் கிருஷ்ணகிரி சாலை, சூளகிரி பேரிகை சாலை மற்றும் பல பகுதிகளில் குரங்கள் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் குரங்குகள் இன பெருக்கம் அதிகரிப்பால் நாளுக்கு நாள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    இந்த பகுதிகளில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை எப்போதும் பூட்டிய நிலையில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. வீட்டை திறந்தால் வீட்டுக்குள் நுழைந்து ரகளை செய்வதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

     வீட்டு தோட்டங்கள் நாசம் செய்து வருவதால் வீட்டு தோட்டம் வாழை, தென்னை, காய்கறிகள் தோட்ட பயிர் செய்ய முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    வேப்பனப்பள்ளி அருகே ஆற்றில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது ஆற்றில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக  சிகரமாகனபள்ளி கிராமத்தை சேர்ந்த  சுரேஷ் (வயது40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
    சொத்து வரியை கண்டித்து ஓசூரில் அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க.சார்பில், தமிழகத்தில் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியதாக தி.மு.க. அரசை கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் நேற்று ஓசூரில்  அர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ராம்நகர் அண்ணாசிலையருகில் நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் எம்.மாரே கவுடு தலைமை தாங்கினார். நகர செயலாளர் வீரய்யா வரவேற்றார். 

    இதில், மாவட்ட அவைத்தலைவர் அன்வர்பாஷா, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளதுரை, மாவட்ட பொருளாளர் சிவகுமார் , லோகேசன், துரைராஜ், அரப்ஜான் உள்ளிட்ட கட்சியினர்  திரளாக கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது, தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், சாய்கிரண் நன்றி கூறினார்.
    ×