என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வேன் மோதி வாலிபர் பலியானார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சின்ன மட்டார பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களது மகன் தேவேந்திரன் (வயது 31).

    இந்த நிலையில் கடந்த 12 ந் தேதி தேவேந்திரன், வரட்டனப்பள்ளி  குப்பம் சாலையில் மோட்டார் சைக் கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தேவேந்திரனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மது என நினைத்து விஷத்தை குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    கிருஷ்ணகிரி ,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மருதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பா (வயது 52). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

     கடந்த, 11 ந் தேதி வீட்டில் பாட்டிலில் இருந்த விஷத்தை, மது என நினைத்து குடித்து மயங்கினார். கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

    இது குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திம்மராய பெருமாள் கோவில் திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர் மீது கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே திம்மராய பெருமாள் கோவில் திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர் மீது கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம்  அருகே உள்ள மாதம்பதி பகுதியில் ஸ்ரீ திம்மராய பெருமாள் சுவாமி, வீரபத்திர சுவாமி ஆகிய பிரசித்தி பெற்ற கோயில்களின் திருவிழா மாதம்பதி, சந்தம்பட்டி, மூங்கம்பட்டி, முருக்கம்பட்டி, கொல்லப்பட்டி, குல்லம்பட்டி, படவானூர், பொஜ்ஜனூர் , பனைமரத்துப்பட்டி, குருவப் பட்டி, கோர்லப்பட்டி, கந்த கவுண்டனூர், வீராட்சி குப்பம் உள்ளிட்ட 18 கிராமங்களை  சேர்ந்த கிராம பொதுமக்கள் ஒன்று கூடி மூதாதியர் காலத்தில் இருந்து சுமார் 150 வருடங்களாக   சித்ரா பவுர்ணமி இவ்விரு கோவில்களின் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வந்தது. 

    இந்த நிலையில்  வீராட்சிகுப்பம் பகுதியை சேர்ந்த கோவில் நிர்வாகியான வீரபத்திரன் உள்பட பொதுமக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:&

    இக்கோவில்களின் திருவிழா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. தற்பொழுது தமிழக அரசு கொரோனா தடையை நீக்கி முழுதளர்வு அளித்து நிலையில் மீண்டும் ஸ்ரீ திம்மராய பெருமாள் சுவாமி, வீரபத்திர சுவாமி கோயில்களின் திருவிழா சித்ரா பௌர்ணமி அன்று செய்ய முடிவு செய்து வந்த நிலை யில் மாதம்பதி பகுதியை சேர்ந்த சில நபர்கள் கோயில் எங்கள் ஊரில் உள்ளதால் திருவிழா செய்ய தடை விதித்து வரு கின்றனர்.

    அப்படி திருவிழா செய்தால்  தங்களுக்கு தான் முழு உரிமையும் அத்துடன் தங்கள் தலைமையில் தான் நடைபெற வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். மற்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை தகாத வார்த்தை களால் திட்டி கோயில் திருவிழா செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் எலுமிச்சம் பழம் ஒன்று ரூ.12&க்கு விற்பனையானது.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஓசூரில் உள்ள உழவர் சந்தை மற்றும் இதர காய்கறி சந்தைகளில் எலுமிச்சை பழத்தின் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து வருகிறது.

    இது குறித்து ஓசூர் காமராஜ் காலனி உழவர் சந்தை சாலையை சேர்ந்த  எலுமிச்சை பழ வியாபாரிகள் கூறியதாவது:&

    ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலேயே எலுமிச்சை பயிரிடப்படுகிறது. இதனால் ஓசூர் சந்தையில் கோடை காலத்தில் எலுமிச்சை பழம் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஆந்திர மாநிலம்  நெல்லூர், கூடுர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழத்தை வாங்கி வந்து ஓசூரில் விற்பனை செய்கிறோம். இம்முறையில் ஓசூரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் எலுமிச்சை பழம் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் வரை ரூ.2க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு பெரிய எலுமிச்சை பழம் தற்போது ரூ.10 முதல் 12 வரையும், சிறிய எலுமிச்சை பழம் ரூ.5க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகமாக இருப்பினும் கோடை வெயிலில் உடல் வெப்பம் தணிக்கும் மருத்துவ குணமுள்ள எலுமிச்சை பழத்தை வாங்கிச் செல்வதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளதால், விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது. கோடை காலம் முடியும் வரை இந்த விலை உயர்வு தொடரும். 

    இவ்வாறு அவர்கள் கூறினார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள வேலா வள்ளி பகுதியை சேர்ந்தவர் கலையரசி (வயது 59),  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான சிவா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப் படுகிறது.
      
    இதனையடுத்து கடந்த 12 ந் தேதி வழி தகராறு காரணமாக கலையரசியை சிவா அவரது மகன்கள் வேலவன் (22), ஹரீஷ் (20), வேலவன் மனைவி சுதா (25) , சிவாவின் மனைவி தவமணி (48) ஆகிய 4 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், கட்டையாலும், கையாளும் தாக்கினர். இதில் படுகாயடைந்த கலையரசி மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந் தார்.  பின்னர் மேல்சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத் துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். 

    இது குறித்து கலையரசி மத்தூர் போலீஸ் நிலையத்தில் அளித் தனர். அதன் பேரில் சிவா அவரது மகன்கள் வேல வன், ஹரீஷ், மருமகள் சுதா, மனைவி தவமணி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தவமணி, சுதா ஆகிய இருவரையும் சேலம் மகளிர் சிறையிலும், வேலவன், ஹரீஷ் ஆகிய இருவரையும் கிருஷ் ணகிரி கிளை சிறையிலும் அடைத்தனர். தலை மறைவான சிவாவை மத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கியதில் 4 ஆடுகள் பலியானது.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அடுத்த கெட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி மாது(வயது 37). இவர்கள் 15 ஆடுகளை வளர்த்து வந்தனர். 

    இந்நிலையில் நேற்று மாலை மேய்சலுக்கு சென்றிருந்த ஆடுகளை வீட்டிற்கு ஓட்டி சென்றார். அப்போது லேசான மழை பெய்திருந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி அருகே, திருமலை நகருக்கு செல்லும் வழியில் சாலையோரம் இருந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும், மின்சார பெட்டி அருகே ஆடுகள் சென் றுள்ளார்.
     
    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், 4 ஆடுகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்தன. 

    இறந்த 4 ஆடுகளின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. 
    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே மருதேப்பள்ளியில் எருது விடும் திருவிழா நடந்தது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில் நேற்று எருதுவிடும் திருவிழா நடந்தது. இதில், திருவண் ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 200&க்கும் மேற்பட்ட காளை களைக் கொண்டு வந்திருந்தனர்.

    காளைகளை குறிப்பிட்ட தூரம் ஓடவிட்டு, அந்த தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு பரிசு வழங்கப்பட்டது. 

    அதன்படி, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2&ம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.55 ஆயிரம் என மொத்தம் 55 பரிசுகள் வழங்கப்பட்டன-. முன்னதாக கால்நடை மருத்துவர்கள் காளை களை பரிசோதனை செய்த பிறகு விழாவிற்கு அனுமதித்தனர். இதையொட்டி கந்திகுப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    இதற்கிடையில், இந்திய விலங்குகள் நலவாரியம் மற்றும் ஜல்லிக்கட்டு ஆய்வுக் குழுவின் உறுப்பினர் மிட்டல், எருது விடும் விழாவை ஆய்வு செய்தார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலியானார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி  அருகே சின்னமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் பிரபு (வயது 30). இவர் காவேரிப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று சோக்காடி பழைய பையனப்பள்ளி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் பிரபு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக்கப் வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு, பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கால்நடை தீவனத்திற்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் நேற்று நடந்தது. 

    கூட்டத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் நசீர் அகமத், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி பெருமா, ஒன்றிய துணைத் தலைவர் கணேசன், மாவட்ட இளைஞர் அணி  துணை செயலாளர் அனுமந்தராஜ், சாப்பரம் தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். 

    இதில் மேற்கு மாவட்டத் தலைவர் வண்ணப்பா, மேற்கு மாவட்டத் தலைவர் சுப்ரமணிரெட்டி, ஒன்றிய செயலாளர் கண்ணப்பன், மாவட்ட துணைத் தலைவர் வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில்,  பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 ஆக உயர்த்தி, உற்பத்தி மானியமாக லிட்டருக்கு ரூ.5 என அரசு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி ஒன்றியம் தொடக்க சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 9 வார பால் பண பட்டுவாடாவை உடனடியாக வழங்க வேண்டும். 

    கால்நடைத் தீவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு கால்நடை தீவனத்திற்கு 50 சதவீதம் மானியம்  வழங்க வேண்டும். தாது உப்புக்களை இலவசமாக வழங்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு சத்துணவில் ஆவின் பால் அல்லது பால் பவுடர் வழங்க வேண்டும். ஆவின் பால் மற்றும் உப பொருட்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சொத்துவரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
    ஓசூர்

    ஓசூர் மாநகராட்சி கூட்டம், மாமன்ற கூடத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தை தொடங்கிவைத்து மேயர் சத்யா பேசுகையில்,  ஓசூர் மாநகராட்சிக்கு சொந்தமான காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு திடலுக்கு, "கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்டவும், சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் உள்ளிட்ட 9 பொருட்களை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைத்து, அவற்றை நிறைவேற்றி ஒத்துழைப்பு தருமாறு, உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சபையில் உறுப்பினர்கள் பேசியதாவது:&

    எஸ்.நாராயணன் (அ.தி.மு.க.-மாமன்ற எதிர்க்கட்சி தலைவர்): காமராஜ் காலனியில் உள்ள விளையாட்டு திடலுக்கு, "டாக்டர் புரட்சித் தலைவி ஜெயலலிதா.விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்ட வேண்டும். என்றார். 

    மேலும், மாமன்றத்தில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜிஆர், ஜானகி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் படங்களை வைக்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த ஆணையாளர், விதிமுறைகளை சரிபார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி பகுதியில் நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை வசூல் செய்வது குறித்தும், சொத்து வரி உயர்வு தொடர்பாகவும், நாராயணன், அ.தி.மு.க. மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் தி.மு.கவை சேர்ந்த நிலைக்குழு தலைவர் மாதேஸ்வரன் ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில், விளையாட்டு திடலுக்கு கருணாநிதி பெயரை சூட்டுவதற்கும், சொத்து வரி உயர்வுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள்,  நாராயணன் தலைமையில் மன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தீர்மான நகல்களை கிழித்து எறிந்து, மன்ற கூடத்தில், தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இவர்களுக்கு ஆதரவளித்து பா.ஜ.க. கவுன்சிலர் பார்வதி நாகராஜ், தர்ணாவில் கலந்துகொண்டார்.
     
    மன்ற கூட்டத்திற்கு நாராயணன் மற்றும் மண்டல தலைவர்கள் இருவரும் கறுப்பு சட்டை அணிந்தும் மற்ற உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர். பின்னர் ஜெயப்பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, "மூதறிஞர் ராஜாஜி படித்த பள்ளியின் விளையாட்டு திடலுக்கு, அவரை பெயரை சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டும், மாமன்ற கூடத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜானகி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படத்தை வைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்வதாக கூறினார்.

    அ.தி.மு.க வினர் வெளிநடப்பு செய்த நிலையில், மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக, மேயர் சத்யா அறிவித்தார். இதனை, தி.மு.க உறுப்பினர்கள் மேஜையை தட்டி, ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கிராமங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஈரம் கலந்த காற்றும், மிதமான தட்பவெட்ப நிலையும் உள்ள பகுதிகளில் மட்டுமே சிறப்பாக சின்ன வெங்காயம் மகசூல் பெற முடியும்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது.

    கடந்த மாதங்களில் சின்ன வெங்காயம் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் ஓட்டல் உரிமையாளர்கள் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சமையலுக்கு சின்ன வெங்காயத்தை தவிர்த்து பெரிய வெங்காயத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் வெங்காய விலை திடீர் உயர்வு காரணமாக விவசாயிகள் தங்களது நிலங்களில் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் சாகுபடி செய்து வந்தார்கள். தற்போது சந்தையில் சின்ன வெங்காயம் வரத்து அதிகமாக உள்ளதால் விலை பலமடங்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்து கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

    சாகுபடி செலவைக் கூட வீடு கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்று விட வேண்டும். இல்லாவிட்டால் அவை அழுகி வீணாகி விடும். இதனால் விவசாயிகள் வியாபாரிகள் கேட்ட விலைக்கு விற்பனை செய்யும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது ரூ.100-க்கு விற்ற சின்ன வெங்காயம் தற்போது ரூ.10 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், இல்லத்தரசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து சின்ன வெங்காயத்தை கிலோ கணக்கில் வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் லோடு ஆட்டோவில் சின்ன வெங்காயத்தை கூவி, கூவி வியாபாரிகள் விற்று வருகிறார்கள்.

    மகாராஜா கடை அருகே நிலத்தகராறில் இருத்தரப்பினர் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் விவசாயி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி

    மகாராஜா கடை அருகே நிலத்தகராறில் இருத்தரப்பினர் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் விவசாயி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அடுத்துள்ள கம்மம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (வயது39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான ரங்கன் (65) என்பவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களாக நிலப்பிரச்சினை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2&ந்தேதி அன்று மீண்டும் இவர்  களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த   கார்த்திக்கேயன் மற்றும் ரங்கன் ஆகிய இருதரப்பினர்களும் மோதி தாக்கியுள்ளனர்.

    இது குறித்து மகாராஜாகடை போலீசில் இருதரப்பினரும் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் சப்& இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன்,  ரங்கன், பாஞ்சாலி, செந்தில்குமார், விஜயா மற்றும் கார்த்திக்கேயன், லோகநாதன், காந்தா, கல்பனா ஆகிய 8 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    ×