என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தென்னை மட்டை விழுந் ததில் மின் வயர் அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தாதம்பட்டி அருகே உள்ள விருப்பம் பட்டி கிராமத்தில் பழனி என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பு உள்ளது. இந்த தோப் பில் நாகரசம்பட்டி அடுத்த கமக் காலக்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதன் (வயது 65) என்பவர் தேங்காய் எடுக்க குத்தகை பேசி தேங்காய் வெட்டி வந் துள் ளார்.
மின்சாரம் தாக்கி பலி.
இந்த நிலையில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தேங் காய் விழுந்திருக்கும் என்று மாதன், தென்னந் தோட்டத்திற்கு வந்துள்ளார், அப்போது எதிர் பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து தென்னை மட்டை விழுந்து மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக் காமல் மாதன் நடந்து சென்ற போது மின் வயரை மிதித்து அங்கேயே பரிதாபமாக துடி துடித்து இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், உடலை மீட்டு போச்சம்பள்ளி போலீ சாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி செய்திகள்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாவக்கல் கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரபு (வயது 37). வெங்கடேஷ் (35), கோடீஸ்வரன் (35). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். லாரி டிரைவர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் பிரபு உள்பட 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பாவக்கல்லில் இருந்த அனுமன்தீர்த்தத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வேலூரில் இருந்து சேலம் நோககி வந்த அரசு பஸ், திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரபு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடேஷ், கோடீஸ்வரன் ஆகிய இருவரையும்அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பஸ் மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் பெய்த மழை காரணமாக, ஓசூர் பகுதியில் பசுமை குடில்கள் நாசமாகின. கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து துவங்கியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கடும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 13 ந் தேதி மாலை, சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கிருஷ் ணகிரியில் 27.30 மி.மீ., ஓசூரில், 18.6, நெடுங்கல் பகுதியில், 12, பாரூரில், 10.2, தேன்கனிக்கோட்டையில், 10, சூளகிரியில், 9, அஞ்செட்டியில், 5.4, தளியில், 5, போச்சம்பள்ளியில், 4.2, ராயக்கோட்டையில், 2, ஊத்தங் கரையில், 1 மி.மீ., என மாவட்டம் முழுவதும், 104.7 மி.மீ., மழை பதிவானது.
நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்த தால், குடிசா கனப் பள்ளி, பாக லூர், குடி செட்லு, பேரிகை, கெல மங்கலம் சுற்று வட்டார பகுதிகளில், ரோஜா, கார்னேசன், கிரசாந்திமம் போன்ற கொய்மலர்கள் மற்றும் குடைமிளகாய் போன்ற தோட்டங்களுக்கு அமைக் கப்பட்டிருந்த, பசுமை குடில்கள் கிழிந்து நாச மாகின.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், இந்த ஆண்டில் 3 முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. நேற்று அணைக்கு, 90 கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, 114 கனஅடி நீர் பாசனத்திற்காக திறக்கப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே நள்ளிரவில் கணவன் மனைவியை தாக்கிய 10 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது மனைவி செரீனா(வயது 33).
இந்த நிலையில் நேற்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (23) என்ற வாலிபர், தனது நண்பன் அருணை பார்ப்பதற்காக மத்தூர் முத்து நகருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது வரும் வழியில் அவர், சிக்கந்தர் வீட்டு முன்பு அசுத்தம் செய்ததாக வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த சிக்கந்தர் , வெங்கடேசனை தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், சிக்கந்தரை தாக்கினார். மேலும் இதை தடுக்க வந்த செரீனாவையும் தாக்கினார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து நள்ளிரவில் வெங்கடேசன், தனது ஊரில் இருந்து 9 பேர் கொண்ட கும்பலை அழைத்து வந்தார். பின்னர் அவர்கள், சிக்கந்தரிடம் தகராறு செய்தனர். திடீரென அவர்கள் ஆத்திரத்தில் சிக்கந்தர், அவரது மனைவி செரீனா ஆகியோரை கண்மூடித்தனமாக சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து கூச்சல் போட்டனர்.
இதனால் சத்தம் கேட்டு ஊர்மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வெங்கடேசன் உள்பட 10 பேர் கும்பலை விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்களை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மத்தூர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (23), விக்னேஷ் (22), சக்தி(23), விஜய்(19), திருப்பதி (18), சஞ்சய் (19), லோகநாதன் (23), நடராஜன் (30) மற்றும் மத்தூர் முத்துநகரை சேர்ந்த அருண் (21) ஆகிய 10 பேர் என தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 10 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் கணவன் மனைவியை 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் மத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சுடுகாட்டு பாதை வேண்டி கிராம மக்கள் பிணத்தை ரோட்டில் வைத்து போராட்டம் நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேயுள்ள கமலாபுரம் பிரிவு சாலையில் 350க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய ஊருக்கு வெளியே உள்ள புறம்போக்கு நிலத்தில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை கந்தன் என்பவர் பாதையை இரும்பு வேலி அமைத்து அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம மக்கள் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போல¦சார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று உடல்நல குறைவாக இறந்த பன்னீர் என்பவரின் உடலை அடக்கம் செய்ய கந்தன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுமார் 200&க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பிணத்தை ரோட்டில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ, மத்தூர் இன்ஸ்பெக்டர் முருகன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கண்ணாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், ஜவுளி வியாபாரி. இவரது மனைவி தேவிஸ்ரீ (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தேவிஸ்ரீ, கடந்த சில மாதங்களாக வயிற்று வலிநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த தேவிஸ்ரீ நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் குறைந்த விலையில் சிமெண்டு வழங்குவதாக கூறி ரூ.4.83 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் என்ஜிஜிஓ காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 68). இவர் எலக்டிரிகல் கடை நடத்தி வருகிறார். மேலும் பில்டிங் காண்டிராக்டர் தொழிலும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது செல்போன் வாட்ஸ் அப்புக்கு அடையாளம் தெரியாத நபர் மூலம் ஒரு தகவல் வந்தது. அதில் குறைந்த விலையில் சிமெண்டு மூட்டைகள் வழங் குவதாக தெரிவிக்கப்ட்டு இருந்தது. இதை நம்பி அந்த வாட்ஸ் அப் நம்பரை தொடர்பு கொண்டு 4 ஆயிரம் சிமெண்ட் மூட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்தார். பின்னர் அந்த நபருக்கு ரூ.4.83 லட்சத்தை ஆறுமுகம் அனுப்பினார்.
இதையடுத்து பணம் பெற்ற நபர், சிமெண்ட் மூட்டைகளை அனுப்பவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை ஆறுமுகம் உணர்ந்தார். பின்னர் இந்த மோசடி குறித்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் லாட்ஜில் என்ஜீனியரை அடைத்து வைத்து ரூ.1.50 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் எட்மண்ட் ஜார்வின். இவரது மகன் ஆல்வின் ரெய்ட் பார்கு (வயது 31). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. கம்பெனியில் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் விடுமுறையையொட்டி கடந்த 14&ந் தேதி பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் ஆல்வின் புறப்பட்டு சென்றார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம்அடுத்த சுப்பிரமணியபுரம் என்ற இடத்தில் வந்த போது ஆல்வின் ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர். உடனே ஆல்வின், காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே காயம் அடைந்த 2 பேரின் உறவினர்கள் என்று கூறி ஆல்வினிடம் 3 பேர் பேச்சு கொடுத்தனர். விபத்தை ஏற்படுத்தியதால் தங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதாவது ரூ.1.50 லட்சம் வரை பேரம் பேசி ஆல்வினை மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆல்வின் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேர் கும்பல் ஆல்வினை கடத்தினர். பின்னர் காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அவரை சிறைவைத்தனர். இதைதொடர்ந்து லாட்ஜில் வைத்து ஆல்வின் தந்தை எட்வினிடம் போன் செய்தனர்.
அப்போது தங்களது மகனின் கார் மோதியதில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். எனவே எங்களுக்கு ரூ.1.50 லட்சம் கொடுத்து பைசல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆல்வினை நாங்கள் விட மாட்டோம் என்று மிரட்டினர். இதைகேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி காவேரிப்பட்டணம் போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுக்கப்பட்டது.
தப்பி வந்தார்
இதற்கிடையே லாட்ஜில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆல்வின், அந்த மிரட்டல் கும்பலிடம் இருந்து நைசாக தப்பி வந்தார். பின்னர் அவர் நேராக காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அதில் தன்னை 3 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தி லாட்ஜில் வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
போலீசாரின் விசாரணையில் ஆல்வினை கடத்தி பணம் கேட்டு மிரட்டியவர்கள், காவேரிப்பட்டணம் அம்பேத்கார் தெருவை சேர்ந்த சந்தோஷ் (27), அன்பரசன் (26), லோகநாதன் (25) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த கடத்தல் விவகாரத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜீனியரை கடத்தி லாட்ஜில் வைத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் காவேரிப்பட்டணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஒரே நேரத்தில் மக்கள் புறப்பட்டு சென்றதால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 4 நாட்கள் விடுமுறை விடப் பட்டுள்ளது. பெங்களூரு, சுற்று வட்டார பகுதிகளில் வசிக்க கூடிய பலருக்கும் நேற்று முதல் 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை விடப்பட்டுள்ளது.
எனவே அங்கு வசிக்கும் தமிழர்கள் மற்றும் ஓசூர் பகுதியில் உள்ளவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். இதனால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ஆயிரக் கணக்கான கார்கள் ஸ்தம்பித்து நின்றன. சுங்கச்சாவடி கடந்து செல்ல வாகனம் ஒன்றிற்கு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
போக்குவரத்து நெரிசல்
குறிப்பாக ஓசூர், பெங்களூருவில் இருந்து கார்களில் அதிகம் பேர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றதை காண முடிந்தது. இதனால் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பகுதியில் வழக் கத்திற்கும் மாறாக நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மாயமான 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பகுதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவர் 9 ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 9 ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். பேடரப்பள்ளி, பாரதி யார் நகர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து விட்டு பாதியில் படிப்பை நிறுத்தி விட்டார்.
இவர்கள் மூவரும் தோழிகள் ஆவார்கள். கடந்த, 11 ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற இவர்கள் மூவரும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிப்காட் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடன் தொல்லை காரணமாக அரசு பள்ளி ஆசிரியர் மாயமானார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 55).பெங்கிலி அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அதிகமான கடன் இருந்ததால் கடந்த சில தினங் களாக மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த, 7 ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ராதாகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வாலிப் பட்டி பக்கமுள்ளது வேலவள்ளி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கலையரசு (வயது 59). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் வேலன் (22) உறவினர்கள். இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்து வருகிறது.
சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில், கலையரசன் தாக்கப்பட்டார். அதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து வேலவன் தரப்பை சேர்ந்த ஹரீஷ் (20), சுதா (25), தவமணி (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.






