என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கண்ணாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், ஜவுளி வியாபாரி. இவரது மனைவி தேவிஸ்ரீ (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் தேவிஸ்ரீ, கடந்த சில மாதங்களாக வயிற்று வலிநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த  தேவிஸ்ரீ நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×