என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதுப்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்ஓசூர் தேர்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் அபிராமி (வயது 24). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக இவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி விஜயலட்சுமி (27). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் அசேன். இவரது மனைவி உமேரா (24). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதில் மனமுடைந்த உமேரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெண்ணின் தந்தை பயாஸ் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருமணமாகி 3 மாதத்தில் புதுப் பெண் இறந்துள்ளதால் இது குறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரியில் 3 டன் ரேசன் அரிசியை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்கும் வகையில், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கிருஷ்ணகிரியில் -திருவண்ணாமலை சாலையில் ராசுவீதி பகுதியில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப் இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வாகன தணிக்கையில்ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத் திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த மினிலாரி நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 62 மூட்டைகளில் 3100 கிலோ ரேசன் அரிசியை கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச்செல்ல முயன்றது தெரிந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடகாவிற்கு அதிக விலைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், லாரியின் டிரைவரான கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்த பரத், ரேசன் அரிசியின் உரிமையாளரான கிருஷ்ணகிரி சீனிவாசா காலனியை சேர்ந்த அமரீஷ் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர். மேலும், ரேசன் அரிசி, மினி லாரி உள்ளிட் டவையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் தொடர் மழையால் மார்க்கண்டேயன் நதி தடுப்பணை நிரம்பியது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு முக்கிய நீர் பாசன ஆதராமாக மார்க்கண்டேயன் நதி இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் வரத்து தொடங்கியது. இந்த நிலையில் மூன்றே மாதங்களாக ஆற்றில் நீர்வரத்து நின்று ஆற்றில் நீர் வற்றி பாறைகளாக வரண்டு காட்சி யளித்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் நீர்பாசனமாக நினைத்திருந்த விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக வேப்பனப்பபள்ளி அருகே உள்ள கர்நாடக மாநில எல்லைப்பகுதிகளில் வனப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மீண்டும் மார்கண்டேயன் நதியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
நீரின்றி காய்ந்து பாறைகளாக காணப்பட்ட ஆற்றில் தற்போது நீர் மீண்டும் பெருக்கெடுத்தது கடல் போல் காட்சி யளித்து வருவதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக எல்லையில் உள்ள சிகரலப்பள்ளி அருகே மார்க்கண்டேயன் நதி குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து தற்போது கரையை கடந்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப் பகுதியில் நீண்ட நாட்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்த ஆற்றில் தற்போது நீர் நிரம்பி வருவதா பொதுமக்கள் வந்து மகிழ்ச்சியாக உள்ளனர்.
மீண்டும் ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் மே மாதங்களில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தட்டுபாடு இருக்காது எனவும், நீலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும் எனவும் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியாக கூறி வரு கின்றனர். நாளுக்கு நாள் வெயிலின் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் ஆற்றில் நீர் நிரம்பி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் சூறை காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் 500 வாழைகள் சாய்ந்து சேதமானது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக வெப்பத் தின் தாக்கம் அதிகரித்து காணப் படுகிறது. இந்நிலையில் இரவு கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், பெனுகொண்டாபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மிதமான முதல் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப் பட்ட நிலை யில் நேற்று மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் காற்று, இடியு-டன் கூடிய மழை பெய்தது. மழையால் சாலையில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. கழிவு நீருடன், மழைநீர் ஓடியதால் துர்நாற்றம் வீசியது.
பர்கூர் பகுதியில் காற்று டன் பெய்த மழைக்கு மரங்கள் முறிந்து மின் கம்பி மீது விழுந்ததில் 50&க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைப் பட்டது.மேலும், மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து, குளிர்ந்த சிதோஷ்ண நிலை காணப் பட்டது. பெனுகொண்டாபுரத்தில் 63.40,போச்சம்பள்ளியில் 20.20, தளியில் 10, பாரூர், தேன்கனிக்கோட்டையில் தலா 9,அஞ்செட்டியில் 7.60, கிருஷ்ணகிரியில் 6.20, ஓசூரில் 5, ஊத்தங் கரையில் 3, சூளகிரியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மேட்டுத் தாங்கல் ஊராட் சியில் உள்ள கிராமங்களில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சேதம் அடைந் ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஊத்தங்கரை,கல்லாவி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இரவு இடி, மின்னலுடன் சூறாவளி காற்று வீசியதோடு ஆலங்கட்டி மழை பெய்தது.
இதில் மேட்டுதாங்கல் ஊராட்சி பச்சினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 1.5 லட்சம் சேதம் ஏற் பட்டது.
அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவரது ஓட்டு வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது. மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களும், இதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது இரண்டு ஏக்கர் நெல் பயிர் களும், வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது தென்னை மரங்கள், வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதமானது.
இது தவிர தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது. ஒரு சில மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பலத்த இடி, மின்னல்,சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி கன மழையால் வாழைமரங்கள், தென்னை மரங்கள்,நெல் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொண்டபள்ளியில் சித்ரா பவுர்ணமிமைமொட்டி பெட்டதம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கலு கொண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட பேர காணபள்ளி அருகிலுள்ள பெட்டதம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவிழா நடைபெற்றது.
திருவிழாவையொட்டி கோயிலில் சிறப்பு யாகங்கள் ஹோமங்கள் நடைபெற்றது விழாவையொட்டி கலு கொண்ட பள்ளி, பேளகொண்டப்பள்ளி, உலிவீரணபள்ளி, கப்பக் கல், உள்ளிட்ட 10 கிராம பக்தர்கள் ஆண்கள் பெண் கள் உள்பட கலச சொம்பில் பாலை எடுத்துக்கொண்டு மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலா பிஷேகம், ருத்ராபிஷேகம் செய்தனர் தொடர்ந்து அருகில் உள்ள நாக தேவதை புற்றுக்கு பால் அபிஷேகம் செய் யப்பட்டது.
அம்மனுக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் ஒதி மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜை நடத்தப் பட்டது. அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் இருகைகளால் கூப்புமணமுறுங்கி பிராத்தனை செய்து வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு நீர்மோர் ,பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .விழாவில் தமிழ்நாடு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட அம்மன் தரிசனம் செய்து வழிபட்டு அம்மன் அருள்பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மேட்டுத்தாங்கல் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இரவு கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், பெனுகொண்டாபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மிதமான முதல் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீருடன், மழைநீர் ஓடியதால் துர்நாற்றம் வீசியது.
பர்கூர் பகுதியில் காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் முறிந்து மின் கம்பி மீது விழுந்ததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது.மேலும், மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து, குளிர்ந்த சிதோஷ்ண நிலை காணப்பட்டது.
பெனுகொண்டாபுரத்தில் 63.40, போச்சம்பள்ளியில் 20.20, தளியில் 10, பாரூர், தேன்கனிக்கோட்டையில் தலா 9, அஞ்செட்டியில் 7.60, கிருஷ்ணகிரியில் 6.20, ஓசூரில் 5, ஊத்தங்கரையில் 3, சூளகிரியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மேட்டுத்தாங்கல் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை, கல்லாவி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இரவு இடி, மின்னலுடன் சூறாவளி காற்று வீசியதோடு ஆலங்கட்டி மழை பெய்தது.
இதில் மேட்டுதாங்கல் ஊராட்சி பச்சினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 1.5 லட்சம் சேதம் ஏற்பட்டது.
அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவரது ஓட்டு வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது. மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களும், இதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது இரண்டு ஏக்கர் நெல் பயிர்களும், வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது தென்னை மரங்கள், வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதமானது.
இதுதவிர தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது. ஒரு சில மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பலத்த இடி, மின்னல்,சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி கனமழையால் வாழைமரங்கள், தென்னை மரங்கள், நெல் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இரவு கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஓசூர், பெனுகொண்டாபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மிதமான முதல் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கழிவுநீருடன், மழைநீர் ஓடியதால் துர்நாற்றம் வீசியது.
பர்கூர் பகுதியில் காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் முறிந்து மின் கம்பி மீது விழுந்ததில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது.மேலும், மழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து, குளிர்ந்த சிதோஷ்ண நிலை காணப்பட்டது.
பெனுகொண்டாபுரத்தில் 63.40, போச்சம்பள்ளியில் 20.20, தளியில் 10, பாரூர், தேன்கனிக்கோட்டையில் தலா 9, அஞ்செட்டியில் 7.60, கிருஷ்ணகிரியில் 6.20, ஓசூரில் 5, ஊத்தங்கரையில் 3, சூளகிரியில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் மேட்டுத்தாங்கல் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சூறாவளி காற்றில் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை, கல்லாவி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இரவு இடி, மின்னலுடன் சூறாவளி காற்று வீசியதோடு ஆலங்கட்டி மழை பெய்தது.
இதில் மேட்டுதாங்கல் ஊராட்சி பச்சினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 500 வாழை மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 1.5 லட்சம் சேதம் ஏற்பட்டது.
அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவரது ஓட்டு வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது. மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது நிலத்தில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களும், இதே கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது இரண்டு ஏக்கர் நெல் பயிர்களும், வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது தென்னை மரங்கள், வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதமானது.
இதுதவிர தென்னை மரங்கள் முறிந்து விழுந்தது. ஒரு சில மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு பலத்த இடி, மின்னல்,சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி கனமழையால் வாழைமரங்கள், தென்னை மரங்கள், நெல் உள்ளிட்ட விவசாயப் பயிர்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகில் உள்ள கள்ளக்குறி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ்(வயது49). இவர் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள போலீஸ் குடியிருப்பில் மனைவி, ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வந்தார். கே.ஆர்.பி.டேம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார், இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் மதியம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அந்த நேரம் அவர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே அருகிலிருந்தவர்கள் பார்த்து அளித்த தகவலின்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த 7 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்ததும், கடந்த 15 நாட்களாக மிகவும் சோர்வாகவும், விரக்தியுடனும் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை கொட்டி தீர்த்தது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வயல்களிலும் குளம் குட்டை ஏரிகளில் நீர் நிரம்பியது. சில நாட்களாக வெப்பம் வாட்டி வைத்து வந்த நிலையில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் இந்த இப்பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2 மாதங்களாக தண்ணீரின்றி காய்ந்து கிடந்த ஏரிகள், குளங்கள் தற்போது இந்த மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் 1 வயது பெண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 24). இவரது மகள் அஸ்வினி (1).
இந்த நிலையில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் புதினா விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் புதினாவை ஆற்றங்கரையோரம் வீசி சென்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டாரத்தில் சூளகிரி மற்றும் சுற்று வட்டாரங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு சாகுபடி செய்யப் படும் புதினா தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக, கேரளா, ஆந்திர மாநிலங் களுக்கும் நேரி டையாக புதுச்சேரி மாநிலங் களுக்கும் லாரி, மினிலாரி, உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் ஏற்றுமதி செய்யப் படுவது வழக்கம்.
கடந்த 2 மாதங்களாக புதினா விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சூளகிரி அடுத்த கனஜ்ஜுர் பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘புதினா விலை கடந்தத ஜனவரி மாத இறுதியில் இருந்து சரிந்து உள்ளது.
ஒரு ஏக்கரில் புதினா பயிரிட ரூ.2 ஆயிரம் செல வாகிறது. 90 நாட்களுக்குள் வளர்ந்து விளைச்சல் தரும் புதினாவுக்கு விலை இல்லாததால் செலவு செய்த பணம் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. 200 புதினா கட்டுகள் அடங்கிய ஒரு மூட்டை 1000 ரூபாய் வரை விற்ற நிலையில் தற்போது மூட்டை 100 ரூபாய்க்கு கூட விற்பதில்லை.
ஆற்றங்கரையோரம் புதினாவை வாங்க வியா பாரிகளும் வராததால் அறுவடைக்கு தயாரான புதினா நிலங்களில் வீணாகி வருவதை தடுக்க புதினா செடிகளை பறித்து ஆற்றங் கரை யோரத்தில் கொட்டி வருகிறோம்’’ என்றனர்.
கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் சில்மிஷம் செய்ததை தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை செய்யப் பட்டார்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த நாரணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சுமித்ரா (வயது 37).
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அதே ஊரை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் நரசிம்மன் (40), சுமித்ராவிடம் சில் மிஷத்தில் ஈடுபட் டுள்ளார். இதையறிந்த சுமித்ராவின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நரசிம்மனை கண்டித் துள்ளனர்.
அப்போது சுமித்ராவின் உறவினரான குடிசாதனப் பள்ளியை சேர்ந்த விவசாயி திம்மராஜ் என்பவர், நரசிம்மனை அடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 14 ந் தேதி மாலை நரணி குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு திம்மராஜ் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது கார்மெண்ட்ஸ் கம்பெனி அருகே, திம்மராஜை தடுத்து நிறுத்திய நரசிம்மன், எப்படி நீ என்னை அடிக்கலாம்? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஆத்திரமடைந்த நரசிம்மன், அங்கிருந்த கட்டையை எடுத்து திம்மராஜின் பின்னந்தலையில் அடித் துள்ளார். இதில் பலத்த காயமடைந்த திம்மராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.
இது குறித்து குருபரப் பள்ளி இன்ஸ்பெக்டர் அன்பு மணி, கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து தலைமறைவாக இருந்த நரசிம்மனை தேடி வந்தனர். நேற்று காலை அவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திம்மராஜ் பரிதாப மாக உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி தூய பாத்திமா ஆலயத்தில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், ஈஸ்டர் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. திருத்தலத்தின் பங்குத் தந்தை இசையாஸ் திருப்பலி பூஜைகளை நிறைவேற்றி வைத்தார்.
இதன் முன்னதாக, அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து மூன்றாவது நாள் இயேசு உயிர்த்தெழும் நிகழ்வு ஒளி வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இயோசுவை வரவேற்கும் வகை யில் அனைவரும் கைகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இந்த சிறப்பு திருப்பலியின் போது, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும்மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.






