என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழாவில் பெட்டதம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    X
    விழாவில் பெட்டதம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தேன்கனிக்கோட்டை அருகே பெட்டதம்மன் கோவில் திருவிழா

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொண்டபள்ளியில் சித்ரா பவுர்ணமிமைமொட்டி பெட்டதம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கலு கொண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்ட பேர காணபள்ளி அருகிலுள்ள  பெட்டதம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவிழா நடைபெற்றது. 

    திருவிழாவையொட்டி கோயிலில் சிறப்பு யாகங்கள் ஹோமங்கள் நடைபெற்றது விழாவையொட்டி கலு கொண்ட பள்ளி, பேளகொண்டப்பள்ளி, உலிவீரணபள்ளி, கப்பக் கல், உள்ளிட்ட 10 கிராம பக்தர்கள் ஆண்கள் பெண் கள் உள்பட கலச சொம்பில் பாலை எடுத்துக்கொண்டு மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலா பிஷேகம், ருத்ராபிஷேகம் செய்தனர் தொடர்ந்து அருகில் உள்ள நாக தேவதை புற்றுக்கு பால் அபிஷேகம் செய் யப்பட்டது.

    அம்மனுக்கு  சிறப்பு பூ அலங்காரம்  செய்யப்பட்டு  வேத மந்திரங்கள் ஒதி மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜை நடத்தப் பட்டது. அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் இருகைகளால் கூப்புமணமுறுங்கி பிராத்தனை செய்து வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு நீர்மோர் ,பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .விழாவில் தமிழ்நாடு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட அம்மன் தரிசனம் செய்து வழிபட்டு அம்மன் அருள்பெற்றனர்.
    Next Story
    ×