என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்தவர் கைது செய் யப்பட்டார்.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள இனாம்குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சந்தியா (வயது 19). 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியா வீட்டில் தனியாக இருந்தபோது அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (28)  என்பவர் சந்தியாவிடம் பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். 

    இதையடுத்து சம்பவத்தன்று மாலை இந்த சம்பவம் தொடர்பாக சுரேசிடம் சந்தியாவின் கணவர் சீனிவாசன் தட்டி கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுரேஷ், சீனிவாசனை தாக்கியதில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 

    இதைதொடர்ந்து சந்தியா அளித்த புகாரின் பெயரில் வேப்பனப் பள்ளி போலீசார்  வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கோழிக்குழம்பு சாப்பிட்ட சிறுவன் பலியானான்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது48). இவரது மகன் முரளி (17). கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று அகலக்கோட்டை அடுத்த போடிக் குட்டை அருகே, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கல் உடைக்கும் வேலையில் ஈடுபட் டிருந்தார்.

    பின்னர் நேற்று முன்தினம் வைத்த கோழிக் குழம்புடன் சாப்பாடு சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்ட உறவினர்கள், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், முரளி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    கோழிக்குழம்பு சாப்பிட்டபோது, நெஞ்சு பகுதியில் அடைத்து அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.
    முரளியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான், உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா விற்குட்பட்ட அகலகோட்டை அருகே உள்ள வனகனப் பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் முரளி (வயது 23). 

    சம்பவத்தன்று இவர் இரவு மோட்டார் சைக்கிளில்  சென்றார். அப்போது வனகனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திடீரென அவர் தவறி கீழே விழுந்து படு காயம் அடைந்தார். 

    உடனே அவரை  அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக் கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித் தனர். அங்கி ருந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்ட முரளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சுடுநீர் கொட்டியதில் குழந்தை பலியானது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா விற்கு உட்பட்ட தளி அருகே உள்ள சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது பெண் குழந்தை புண்ணியா (வயது 2).
    இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தாள்.

    அப்போது அங்கிருந்த சுடுநீர் பாத்திரத்தை பிடித்து இழுத்த போது குழந்தையின் உடலில் கொட்டியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்ட உறவினர்கள் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 
    சுடுநீர் கொட்டி பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
     காவேரிப்பட்டினம், 

     கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணி ஹள்ளி பஞ்சாயத்திற்கு அருகில் பெரமன் கொட்டாய் கிராமத்தின் அருகே  மாதையன் (வயது 45) என்பவருக்கு சொந்தமான நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
     இந்நிலையில் நேற்று இரவு 10.45 மணி அளவில் தொழிற் சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சாலைக்கு வெளியே வந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

     அப்போது  திடீரென தொழிற்சாலையில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். 

    இதையடுத்து  சம்பவ இடத்திற்குதீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் தொழிற்சாலையில்  இருந்த எந்திரங்கள், நார் மற்றும் கயிறுகள், முழுவதுமாக எரிந்த நிலையில் இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் என்று கூறப் படுகிறது. 

    இந்த தீ விபத்து குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர்  முரளி  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நோய் தாக்கம் காரணமாக ரோஜா உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டாரத்தில் ரோஜா உள்ளிட்ட கொய்மலர் கெடிகளில் கோடை கால நோய் மற்றும் பூச்சி தாக்கத்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி சுற்று வட்டாரத்தில் உள்ள ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா, ஜெர்புரா, கார்னேசன், கிரசாந்திமம், போன்ற அலங்கார கொய்மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். 
    ஆண்டுதோறும் நவ. மற்றும் டிசம்பரில் குடும் குளிரால் செடிகளில் டவுனியா நோய் தாக்கம் ஏற்பட்டு உற்பத்தி குறையும், அதேபோல் கோடையில் பூச்சிகள் மற்றும் நோய் தாக்கல் ஏற்படும் கொரோனாவில் ஏற்றுமதி பாதித்து வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், தற்போது தான் மெல்ல மீண்டு வருகின்றனர்.

    தற்போது செடிகளில் கோடைகால பூச்சிகளான இலைபேன், சாறு உறிஞ்சும் பூச்சி சிகப்பு, வெள்ளை சிலந்தி மற்றும் வெள்ளை பூஞ்சான் நோய் ஆகியவை, ரோஜா உள்ளிட்ட கொய்மலர் செடிகளை தாக்கி வருகிறது.

    இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் நாளொன்றுக்கு, 2500 ரோஜா சாகுபடியான நிலையில் தற்போது, 1,700 பூக்கள் மட்டுமே கிடைக்கின்றன. தற்போது தேவை இருந்தும் பூ உற்பத்தி குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக தேசிய தோட்டக்கலை வாரிய இயக் குனர் பாலசிவப்பிரசாத் கூறியதாவது:

    பசுமை குடில்களில் வெப்பம் அதிகரித்து காற் றில் ஈரப்பதமும் மாறி, மாறி வருகிறது. தற்போது கோடைகால நோய் தாக்கத் தால் உற்பத்தி பாதித்துள்ளது.

    ஆண்டில் ஏப். முதல் ஜூன் வரையிலான மாதத்தில் அதிக முகூர்த்த நாட்கள் வருவதால் அப்போது பூக்கள் தேவை அதிகமாக இருக்கும். தற்போது ஒரு கட்டு ரோஜா, 200 ரூபாய் கிரசாந்திமம் 200, ஜெர்புரா 100 ரூபாய், என  விற்கிறது. புதிய செடிகளை விட பழைய செடிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தரமான மலர்கள் இல்லாததால் உள்ளூர் சந்தை மற்றும் ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
    மத்தூர்,

    ஊத்தங்கரை  அருகே மோட்டார் சைக்கிள்  மோதி தொழிலாளி பலியானார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பஞ்சாயத்து துணை தலைவர் சரவணன் (வயது51). இவருடைய நண்பரான நாயக்கனூர் பகுதியை சேர்ந்த விஜயராஜ் (50) ஆகிய இவர்கள் நேற்று புல்லட்டில் ஊத்தங்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பாம்பாறு டேம் அருகே வந்த போது எதிரே செல்வேந்திரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக புல்லட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். 
    பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயராஜை தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
    ஓசூர்,

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    ஒசூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக   கனமாகவும், பரவலாகவும் மழை பெய்து வருகிறது.

    மேலும்,கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக ஒசூர்  கெலவரப்பள்ளி  அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28அடிகளாகும். அணையில் 39.52 அடி நீர் இருப்பு உள்ள நிலையில், இன்று காலை,அணைக்கு  வினாடிக்கு 353 கனஅடி நீர் வந்தது. வினாடிக்கு 408 கன அடிநீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

    கடந்த 3 மாதங்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்த அளவாகவே  இருந்த நிலையில், கனமழை எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது, மழை மேலும் தொடரும் என்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்திருப்பதால், அணை முழுவதும் படர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும்,விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி செய்திகள்
    ஓசூர்,

    ஓசூரில் பொக்லைன் உரிமையாளர்கள் சங்கத்தினர், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 200-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் உள்ளன. தற்போது, டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஓசூர்- கொத்தூர் கூட்டு ரோடடில் ஒரு தனியார் நிலத்தில் அனைத்து பொக்லைன் எந்திரங்களை நிறுத்தி,அதன் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் குரேந்திர பிரசாத், பொருளாளர் சிவகுமார், துணைத்தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
    ஓசூர் ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    ஓசூர்,

    ஓசூர் ராம்நகரில் மிகவும் பழமையான ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

    இதையொட்டி நேற்று, கணபதி பூஜை, மகாகணபதி ஹோமத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.  தொடர்ந்து தேவதா அனுக்ஞை, பகவத் அனுக்ஞை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ண ஹுதி ஆகிய நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலையில், அங்குரார்ப்பணம்,யாகசாலை, பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தொழில் அதிபர் எம்.கே.வேலு, விழா குழுவினர்  மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
    சூளகிரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பாப் பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளியை சேர்ந்தவர் செல்வம் (வயது 52). கூலித் தொழிலாளி. வேலை விஷயமாக சூளகிரி வந்திருந்த அவர் ஓசூர், கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி யில் தனியார் லாட்ஜ் அருகில் நடந்து சென்று கொண் டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் அவர் மீது மோதியது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 64). இவர் மோட்டார்சைக்கிளில் போச்சம்பள்ளி புலியூர் சாலையில் குள்ளனூர் பக்கமாக சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்தவர், மோட்டார் சைக்கிளின் குறுக்கே வந்தார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முனுசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். 
    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×