என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி"

    போச்சம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவியை அடுத்த வேடர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சீனன் (வயது62). இவரது மனைவி சாவித்ரி (57). இவர்களுக்கு 2 மகள்களும், 4 மகன்களும் உள்ளனர்.

    போச்சம்பள்ளியை அடுத்த வேடர்பட்டபசுல் கிராமத்தில் சீனன் தனது மகள்களை திருமணம் செய்து கொடுத்துள்ளார். அதனால் மகள்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் சீனன் சென்றார். அப்போது அங்குள்ள ரேசன் கடையின் முன்பு நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற பேத்தி படுகாயம் அடைந்தார்.

    குடவாசல்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே எட்டியலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 55). ராஜகோபால் தனது பேத்தி சாருமதியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மணக்கால் ஜீவா நகரை சேர்ந்த மணிகண்டன் (22) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். திடீரென மணிகண்டனின் மோட்டார் சைக்கிள், ராஜகோபால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகோபாலுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சாருமதிக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து படுகாயம் அடைந்த ராஜகோபால், சாருமதியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக இறந்தார். சாருமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து குடவாசல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சந்தான மேரி, ராஜா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×