என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பொக்லைன் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
ஓசூரில் பொக்லைன் உரிமையாளர்கள் சங்கத்தினர், வேலைநிறுத்த போராட்டம்
கிருஷ்ணகிரி செய்திகள்
ஓசூர்,
ஓசூரில் பொக்லைன் உரிமையாளர்கள் சங்கத்தினர், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 200-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் உள்ளன. தற்போது, டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர்- கொத்தூர் கூட்டு ரோடடில் ஒரு தனியார் நிலத்தில் அனைத்து பொக்லைன் எந்திரங்களை நிறுத்தி,அதன் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். செயலாளர் குரேந்திர பிரசாத், பொருளாளர் சிவகுமார், துணைத்தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
Next Story






