என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யாகசாலை பூஜைகள் நடந்த காட்சி.
    X
    யாகசாலை பூஜைகள் நடந்த காட்சி.

    ஓசூர் ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், யாகசாலை பூஜைகள் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    ஓசூர் ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
    ஓசூர்,

    ஓசூர் ராம்நகரில் மிகவும் பழமையான ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

    இதையொட்டி நேற்று, கணபதி பூஜை, மகாகணபதி ஹோமத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.  தொடர்ந்து தேவதா அனுக்ஞை, பகவத் அனுக்ஞை, நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ண ஹுதி ஆகிய நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மாலையில், அங்குரார்ப்பணம்,யாகசாலை, பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தொழில் அதிபர் எம்.கே.வேலு, விழா குழுவினர்  மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×