என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    போச்சம்பள்ளி அருகேஏரி நிலம் ஆக்கிரமிப்பால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் போக்கம்பட்டி பெரிய ஏரி அமைந்துள்ளது. போக்கம்பட்டி, தரிகாரகொட்டாய், சின்னபாளேதோட்டம், நயினார் கொட்டாய், மூக்கம்பட்டி, ஒட்டுகொள்ளனூர், மொளுகனூர் ஆகிய 7 கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக போக்கம்பட்டி பெரிய ஏரி அமைந்துள்ளது. 

    சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமையப் பெற்றிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சிப்காட் தொழிற்சாலைக்கு கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கையகப்படுத்தும் பணியின்போது போக்கம்பட்டி பெரிய ஏரியின் பெரும் பாலான பரப்புகளை ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகின்றனர். 

    ஏரிக்கு மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ள ஆழ்துளை கிணறு இரண்டு, ராஜவேட்டை முனியப்பன் கோவில் ஆகியவற்றையும் கையகப்படுத்த முயல்கின்றனர். 
    இதனை எதிர்த்து கிராம மக்கள்  நேற்றுமாலை சிப்காட் செல்லும் சாலையில் போக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஏரிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் தொடர்ந்து போராட்டம் செய்வோம் என கூறினர். அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் போராட்டகாரர்களிடம் கூறினர்.  இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அந்த  பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு- ஏற்பட்டது.
    காவேரிப்பட்டணம் அருகே விவசாய விளைநிலங்களை 3 காட்டுயானைகள் முகாமிட்டு சேதப்படுத்தியுள்ளது.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள தாளமடுவு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    இன்றுகாலை 3 காட்டுயானைகள் அந்த கிராம பகுதியில் முகாமிட்டு விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தியது. 

    இதனால் அதிர்ச்சி விவசாயிகள் அடைந்த அந்த காட்டுயானைகளை பட்டாசு வெடித்தும், தாரதப்பட்டை அடித்து விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்கேயே சுற்றித்திரிந்தது.

     இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இன்றுகாலை காட்டுயானைகள் விவசாய விளைநிலங்களை சேதப்படுத்தியதால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
    ரூ.25 லட்சம் கடனை திருப்பி தராததால் துணி வியாபாரியை காரில் கடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பர்கூர்,ஏப்.22-

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த எமக்கல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 30). இவர் ஐதராபாத்தில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சிந்து. பர்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் சூரி (26), தெய்வானை (45), மணி (21), முருகன் (35), கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் லட்சுமி (40) இவர்கள் அனைவரும் உறவினர்கள்.

    இவர்களிடம் சிவபிரசாத் ரூ.25 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கடனாக வாங்கினார். இதற்காக ஐதராபாத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உத்தரவாத கையெழுத்து போட்டு இருந்தார்.

    இந்த நிலையில் சிவபிரசாத் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்து வந்தார். மேலும் நீதிமன்றம் மூலம் என்னால் தொகையை தர இயலாது என ஐ.பி. நோட்டீஸ் பணம் வாங்கிய 5 பேருக்கும் சிவபிரசாத் அனுப்பி இருந்தார்.

    இதற்கிடையே சிந்து பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் சூரி, தெயவானை, மணி, லட்சுமி, முருகன் ஆகிய 5 பேரும் வீட்டில் இருந்த சிவபிரசாத்தை காரில் கடத்தி சென்று விட்டதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நட்ததினார்கள். அதில் கிருஷ்ணகிரியில் ஒரு வீட்டில் சிவபிரசாத்தை அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு ªன்ற போலீசார் சிவபிரசாத்தை மீட்டனர். இது தொடர்பாக சூரி, தெய்வாணை, மணி, லட்சுமி, முருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கெலமங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயக்கோட்டை,ஏப்.22-

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் போலீசார் பேவநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருடுகள் விற்ற தங்கராஜ் (44) என்பவரை கைது செய்தனர். 

    மத்தூர் போலீசார் மாடரஹள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்ற கிருஷ்ணமூர்த்தி (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    சூளகிரி அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
    சூளகிரி,ஏப்.22-

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள பெரிய தியாகரசனப்பள்ளியை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது 48). கூலித் தொழிலாளி. இவர் ஓசூர் & கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி மார்க்கெட் பக்கமாக மொபட்டில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். 

    அப்போ அந்த வழியாக சென்ற சரக்கு வேன் சாக்கப்பா ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சாக்கப்பா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற தச்சு தொழிலாளி பலியானார்.
    ஓசூர்,ஏப்.22-

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா நூனலஹள்ளியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). தச்சு தொழிலாளி. வேலை விஷயமாக ஓசூர் வந்திருந்த அவர் கிருஷ்ணகிரி & ஓசூர் சாலையில் சீதாராம்மேடு பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் சென்ற நபர் மாரியப்பன் மீது மோதினார். 

    இதில் பலத்த காயம் அடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்காரப்பேட்டை அருகே கடன் பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், ஏப்.22- 

    சிங்காரப்பேட்டை அருகே கடன் பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள இடகானூரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 68). விவசாயி. கடன் பிரச்சினை காரணமாக அவர் கோணார்கொட்டாய் பகுதியில் நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை,ஏப்.22- 

    தேன்கனிக்கோட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உளள அகலகோட்டை பக்கமுள்ளது கல்லுபாலம். இந்த ஊரை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மனைவி கீதா (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கணவன் & மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கீதா தேன்கனிக்கோடடை அருகே உள்ள தொட்ட பிலிமுத்திரையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு மன வருத்தம் காரணமாக கீதா தனது பாட்டி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீதாவின் தாய் சுதா தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் திருமணம் ஆகி 3 ஆண்டில் இளம்பெண் இறந்துள்ளதால் இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜா முகமது விசாரணை நடத்தி வருகிறார்.
    வேப்பனப்பள்ளி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

    வேப்பனப்பள்ளி, ஏப்.22-

    வேப்பனப்பள்ளி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள இனாம்குட்டப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (28). சம்பவத்தன்று சீனிவாசனின் மனைவியிடம் சுரேஷ் தகராறு செய்தார். 

    இது குறித்து தட்டி கேட்ட சீனிவாசனை சுரேஷ் தாக்கினார். இதில் காயம் அடைந்த சீனிவாசன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி,ஏப்.22-

    கிருஷ்ணகிரியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி செந்தில் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 55). இவர் கோவில் ஒன்றில்  மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி (51). இவர்களுக்கு திருமணமாகி, 24 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லை. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். இதனால் சுமதிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டும் இருந்துள்ளது. 

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சுமதிக்கு மருத்துவபரிசோதனை செய்த நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரிக்கு திரும்பியுள்ளனர். 

    இரவு கோவிலுக்கு அருகில் வழங்கப்பட்ட வீட்டிலேயே இருவரும் தங்கிய நிலையில், நேற்று காலை சுமதியை காணவில்லை. அவரது கணவர் வெங்கடேசன், சுமதியை தேடி அலைந்த போது, அருகிலுள்ள கிணற்றில் பிணமாக மிதந்த சுமதியை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு படையினர் சுமதியின் உடலை மீட்டனர். சுமதி கிணற்றில் குதித்து தற்கொ¬  செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா உரிகம் பகுதியை சேர்ந்த சிவமாதன் மகன் சிவா (வயது 21). தேன்கனிக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த சின்னராஜ் மகள் அபிநயா (18). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உரிகம் பகுதியில் நடந்த திருவிழாவிற்காக அபிநயா சென்றிருந்தார். அங்கு வன அலுவலகம் பின்புறம் உள்ள தடுப்பணையில் அபிநயா குளிக்க சென்றார்.

    அப்போது நீச்சல் தெரியாததால் அபிநயா தண்ணீரில் மூழ்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்த சிவா ஓடி வந்து காப்பாற்றுவதற்காக தடுப்பணைக்குள் இறங்கினார். அபிநயாவை காப்பற்ற முயன்ற சிவாவும் தண்ணீரில் மூழ்கினார். இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

    நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். பொதுமக்கள் தடுப்பணையில் இறங்கி 2 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மராஜா சுவாமி கோவில் தேரோட்ட விழாவில் முறம், துடைப்பத்தால் பூசாரியிடம் அடி வாங்கி பக்தர்கள் ஆசிபெற்றனர்
    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த டீ கொத்த பள்ளி கிராமத்தில் திரவுபதி அம்மன், தர்மராஜ சுவாமி கோயில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா நேற்று மதியம் நடந்தது.

     கிராம மக்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நிலையை அடைந்தது. முன்னதாக பக்தர்களுக்கு பிடித்த பில்லி சூனியம் ஏவல் போன்றவை நீங்க கோவில் பூசாரி பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் முறம் மற்றும் துடைப்பத்தால் அடித்தபடி ஓடினார். பக்தர்கள் அவரிடம் அடி வாங்கி சுவாமி தரிசனம் செய்தனர். 

    இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். விழாவையொட்டி கடந்த 15&ந் தேதி இரவு தர்மராஜ சுவாமி திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் திரவுபதி அம்மனுக்கு அழகு சேவை, பச்சை கரகம், தீபாராதனை, பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
    ×