என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குட்கா விற்ற மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள தொகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 47). மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது கடையை சோதனைநடத்தினர். அப்போது கடையில் 5.400 கிலோ கிராம் எடையுள்ள குட்கா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்து மளிகை கடைக்காரர் பாஸ்கரை மத்தூர் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘சட்டவிரோதமாக குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள 300 ஆண்டுகளை பழமை வாய்ந்த கால பைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கால பைரவ மகா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகிய வை நடந்தது.
பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத் தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங் களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதற் கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தஷ்ண காலபைரவர் கோயில் மற்றும் கந்திகுப்பம் கால பைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூரில் அரசு மருத்துவமனை நர்சு தற்கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (வயது 36). இவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கல்பனா தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஓசூர் அரசு மருத்துவமனையில் தட்டச்சராக பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வலந்தி வலசு பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் கல்பனா தேவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததுதெரியவந்தது.
மேலும், இந்த கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், ரமேஷிடம் இருந்து கல்பனாதேவி தொடர்பை துண்டித்தார். ஆனால் ரமேஷ் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், கல்பனா தேவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ரமேசை, சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (வயது 36). இவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த கல்பனா தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ஓசூர் அரசு மருத்துவமனையில் தட்டச்சராக பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வலந்தி வலசு பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் கல்பனா தேவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததுதெரியவந்தது.
மேலும், இந்த கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், ரமேஷிடம் இருந்து கல்பனாதேவி தொடர்பை துண்டித்தார். ஆனால் ரமேஷ் தொடர்ந்து தொந்தரவு செய்ததால், கல்பனா தேவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ரமேசை, சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்,
கர்நாடக வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக தமிழக வன பகுதிக்குள் வருவது வழக்கம். ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் சுமார் 4 மாதங்களுக்கும் மேல் இந்த பகுதியில் விவசாய பயிர்களை நாசம் செய்வதை தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 3 காட்டு யானைகள், நேற்று முன்தினம் இரவு பாலக்கோடு வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளி கிராமத்திற்குளு வந்தது. அங்கு தாளமடுவு என்ற பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் நெல், வாழை, தென்னை பயிர்களை சேதப்படுத்தியது.
இந்த நிலையில் 3 காட்டு யானைகள் ஊருக்குள் வந்த தகவல் அறிந்து கிராம மக்கள் அச்சமடைந்தனர். அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி மற்றும் ராயக்கோட்டை வனத்துறையினர் அங்கு சென்று 3 யானைகளை கண்காணித்து வருகிறார்கள்.
அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். யானைகள் உள்ள பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்த வண்ணம் உள்ளனர்.
இன்று 2 வது நாளாக வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் -திரவுபதி அம்மன் பூ கரகம் நிகழ்ச்சி நடைபெற்றது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா அருகே உள்ள டி, கொத்தபள்ளி கிராமத்தில் துரோபதி அம்மன், தர்மராஜ்சுவாமி கோவில் உள்ளது.
இக் கோவில் தேரோட்டம் கடந்த 20 ந் தேதி நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் பூசாரி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுமந்தவாறு கோவில் முன்பு ஆடினார்.
இதில் டி,கொத்தபள்ளி சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டபர்கூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மருமகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர்,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சிக்க மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி முருகம்மாள் (வயது40). இவர்களின் மகள் அலமேலு (20). இவருக்கும் பர்கூர் அருகே உள்ள வெங்கடசமுததிரத்தை சேர்ந்த திருப்பதி (25) எனபவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறில் அலமேலுவை திருப்பதி அடித்தார். இது குறித்து அலமேலு தனது தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதை அறிந்த முருகம்மாள் வெங்கடசமுத்திரம் வந்து தனது மருமகனிடம் எதற்காக எனது மகளுடன் சண்டை போடுகிறீர்கள் என கேட்டார்.
அந்த நேரம் முருகம்மாளை, மருமகன் திருப்பதி, அவரது அண்ணன் அன்பழகன், திருப்பதியின் தந்தை ராஜப்பா, தாய் கவுரம்மாள், சகோதரி அம்சா ஆகியோர் சேர்ந்து தாக்கி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த முருகம்மாள் எலி மருந்தை வாங்கி தின்று வேப்பனப்பள்ளி அருகே உள்ள பில்லனகுப்பத்திற்கு சென்றார்.
அங்கு தனது உறவினர்களிடம் நடந்ததை கூறி மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகம்மாள் நேற்று முன்தினம்இறந்தார்.
இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பதி, அன்பழகன், ராஜப்பா, கவுரம்மாள், அம்சா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கொத்தப்பள்ளி கிராமத்தில் எருதாட்ட விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சானமாவு ஊராட்சி டி. கொத்தப்பள்ளி கிராமத்தில் அமைந்த தர்மராஜ சாமி கோவில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சானமாவு,டி. கொத்தப் பள்ளி, ஒன்னல் வாடி, ஒசூர், தொப்பள்ளி பேரண்டப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி உத்தனப்பள்ளி, டி.குருபரப்பள்ளி, மற்றும் சுற்றுவட்டாரங் களில் இருந்து 5000 மேற்பட்ட மக்கள் வருகை தந்தனர். நிறைவு நாளாக எருதுவிடும் விழா நடைபெற்றது.
இந்த எருது விடும் விழாவில் 500 க்கும் மேற்பட்ட எருதுகள் வரவழைக்கப்பட்டது. சீறிப்பாய்ந்த எருதுகளை 300 மேற்பட்டவர்கள் எருதுகளை அடக்கினர்.
போச்சம்பள்ளி அருகே மெடிக்கல் கடை உரிமையாளரை காரில் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி ஊராட்சி ஐந்து ஆலமரம் பகுதியை சேர்ந்தவர் செண்பககவுண்டர். இவர் சொந்த ஊரான சேலத்தில் இருந்து குடியேறி 1972-ம் ஆண்டு ஐந்து ஆலமரம் பகுதியில் நிலம் வாங்கி கொண்டு விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இவரது மகன் சண்முகம். இவர் பார்மசி சார்ந்த மருத்துவ படிப்பு முடித்து சொந்தமாக சேலம் அலகாபுரம் பகுதியில் மெடிக்கல் சார்ந்த தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சண்முகத்திற்கு அதிக கடன் ஏற்பட்டதாலும், கடன் சுமை அதிகமானதாலும் மெடிக்கல் கடையை பூட்டி விட்டார். இதனால் சொந்த ஊரான தாதம்பட்டி ஐந்து ஆலமரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவி சத்யாவை அழைத்து கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து சண்முகம் சேலம் பகுதியில் உள்ள நண்பரான யூகேஷ் (36) என்பவரிடம் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சம் தொழில் செய்வதற்காக பணம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த பணத்தை சண்முகத்திடம் யூகேஷ் பல முறை கேட்டதாக தெரிகிறது.
பணம் கொடுக்காததால் சண்முகத்திடம் சேலம் பகுதியை சேர்ந்த யூகேஷ் சமாதானமாக பேசி காரில் சேலத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த சண்முகத்தின் மனைவி சத்யா கணவர் சண்முகத்தின் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சண்முகத்தின் செல்போன் அணைத்து வைக்கபட்டுள்ள நிலையில் யூகேஷ் சத்யாவின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு உனது கணவர் என்னிடம் வாங்கிய ரூ.8 லட்சத்தை கொடுத்து விட்டு உன் கணவரை மீட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா மாமனார் செண்பக கவுண்டரிடம் கூறியுள்ளார். இது குறித்து சண்முகத்தின் தந்தை செண்பககவுண்டர் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை மீட்க தனிப்படை அமைத்து சேலம் பகுதியில் சண்முகத்தை மீட்டனர்.
பின்னர் சண்முகத்தை காரில் கடத்திய வழக்கில் யூகேஷ், அஜீத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், சண்முகத்தை கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு உடைந்தையாக இருந்து தலைமறைவாகி உள்ள அர்ஜூன், கார்திக் ஆகியோர் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரூரில் பப்பாளி விலை உயர்வால் கிலோ ரூ.15க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டத்தில் அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி உள்பட பல்வேறு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பப்பாளி மரங்களை வளர்த்து வருகின்றனர்.
இங்கு விளை விளக்கப் படும் பப்பாளியை வியாபாரிகள் நேரடியாக வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
தற்போது தொடர்மழை பெய்து நல்ல வெயில் அடிப் பதால் பப்பாளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் விவசாயிகளிடம் பப்பாளியை கிலோ ரூ.15&க்கு மொத்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். இதனை மார்க்கெட், உழவர்சந்தை மற்றும் வாரச்சந்தைகளில் கிலோ ரூ. 50 வரை விற்பனை செய்கின்றனர்.
கடந்த வாரங்களை விட பப்பாளி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சூளகிரி பகுதியில் 4விவசாயிகளின் மாடுகளை திருடிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓசூர்,
சூளகிரி பகுதியில் தொடரும் மாடு திருட்டால், விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பிள்ளை கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது40)விவசாயி. இவர் வீட்டின் அருகே, இரு கறவை மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை நேற்று முன்தினம் இரவு கட்டி வைத்திருந்தார்.
அதேபோல், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (35) வீட்டின் அருகே, ஒரு மாட்டை கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு மாட்டு கொட்டகைக்குள் சென்ற இரு வாலிபர்கள், மூன்று மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை திருடி சென்றனர். இந்த காட்சிகள், அப்பகுதியில் இருந்த ‘சி.சி.டி.வி’ கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த, 5ந் தேதி அதிகாலை சூளகிரி மில்லத் நகரை சேர்ந்த அழகேசரெட்டி மற்றும் சூளகிரி கீழ் தெரு துரை ஏரி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி ஆகியோரது, தலா இரு மாடுகள் மற்றும் ஒரு கன்று குட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இது தொடர்பாக, சூளகிரி போலீசில், நான்கு விவசாயிகளும் புகார் செய்துள் ளனர். சூளகிரி சுற்றுப்புற பகுதியில், தொடர்ந்து மாடு திருட்டு அதிகரித்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் மாடுகளை திருடும் மர்ம கும்பலை பிடிக்க போலீசார் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூன்று மாதங்களில், 68 பாம்புகளை தீயணைப்புத் துறை வீரர்கள் பிடித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மலைகளையும், வனப்பகுதியையும் சூழ்ந்துள்ளதால், விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்துவிடுகிறது.
இதில் மான், மலைப்பாம்பு மட்டுமின்றி நாகப்பாம்பு, கண்ணாடிவிரியன் உள்ளிட்ட விஷப்பாம்பு களும் அடிக்கடி வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. இவற்றை வனத்துறை அலுலர்கள் பிடித்து காப்புக்காட்டில் விடுகின்றனர்.
புதிதாக இப்பணியில் தீயணைப்புத்துறை வீரர்களும் இணைந்துள்ளனர். வனத்து றையில் புகார் தெரிவிக்க பொதுவான தொலைபேசி எண்கள் எதுவும் இல்லாததால், தீயணைப்புத் துறையின், 101 என்ற எண்ணிற்கு கால் செய்வது பொது மக்களுக்கு பழக்க மாகி வருகிறது.
கடந்த ஜனவரி 1 முதல் மார்ச், 31 வரை தீயணைப்புத் துறை வீரர்கள், வீடு மற்றும் தோட்டத்திற்குள் புகுந்த நாகப்பாம்பு, கண்ணாடிவிரியன் உள்ளிட்ட 68 பாம்புகளைப் பிடித்து காட்டிற்குள் விட்டுள்ளனர்.
இது குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் கூறியதாவது:-&
வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதால், யாருக்கு தகவல் தெரிவிப்பது என்று தெரியாமல் அனைவருக்கும் தெரிந்த, 101 என்ற எண்ணில் எங்களை அழைக்கின்றனர்.
நாங்கள் 24 மணி நேரமும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். பாம்புகளை பிடிக்க கருவிகளையும் நாங்களே தயார் செய்து வைத்துள்ளோம். வீடுகளில் புகுந்துவிடும் பாம்புகள் மட்டுமின்றி, கிணற்றில் விழுந்துவிடும், நாய், பூனை, மான், காட்டுப்பன்றிகள் போன்றவற்றையும் மீட்டு வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிருஷ்ணகிரி, சூளகிரியில் 3 வது முறையாக ஏலம் எடுக்க யாரும் வராததால் கடைகள் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட சூளகிரியில் உள்ள தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தை விழாகத்தில் உள்ள கட்டிடம் சார்ந்த கடைகள் 42 ம் மற்றும் டென் அமைத்தும் வைக்கப்பட்ட கடைகள் பல உள்ளது.
இந்த சந்தை ஏலம்எடுத்து ஒரு ஆண்டு முடிஅடைந்ததால் மறு ஏலம் 28,3, 2022 முதல் ஏலம் பழைய பி,டி, ஒ அலுவலகத்தில் பி, டி, ஒ, சிவகுமார் மற்றும் அலுவலர்கள் ஆகியோர்டெப்பாசிட் கட்டியவர்கள் முன்னிலையில் ஏலம் விட்டனர்.
அன்று யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை பின்பு 11, 4, 2022 இரண்டாவது முறை இதே இடத்தில் இதே போல் ஏலம் விட்டனர். அப்போது ஏலம் கேட்கவில்லை. பின்பு நேற்று மாலை இதே இடத்தில் பி,டி,ஒ, அசோகன் தலைமையில் துணை பி, டி, ஒக்கள் உமாசங்கர், முகிலன் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் ஒரு நபர்க்கு ரூ1, லட்சத்து 50ஆயிரம் வீதம் இருவர் டெப்சிட் கட்டி இருந்தனர்.
இவர்கள் மத்தியில் ரூ. 34 லட்சத்து 8 ஆயிரத்து 145 க்கு ஏலம் அறிவித்தனர். இந்த முறையும் யாரும் ஏலம் எடுக்க முன் வராததால் மாவட்ட கலெக்டர் பார்வைக்கு எடுத்து சென்றனர்.அதிகாரிகள் மறுதேதி அறிவிக்காமல் ஏலம் ஒத்திவைத்தனர்.






