என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
விஷம் குடித்து பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக மருமகன் உள்பட 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டபர்கூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மருமகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர்,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சிக்க மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி முருகம்மாள் (வயது40). இவர்களின் மகள் அலமேலு (20). இவருக்கும் பர்கூர் அருகே உள்ள வெங்கடசமுததிரத்தை சேர்ந்த திருப்பதி (25) எனபவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறில் அலமேலுவை திருப்பதி அடித்தார். இது குறித்து அலமேலு தனது தாய்க்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதை அறிந்த முருகம்மாள் வெங்கடசமுத்திரம் வந்து தனது மருமகனிடம் எதற்காக எனது மகளுடன் சண்டை போடுகிறீர்கள் என கேட்டார்.
அந்த நேரம் முருகம்மாளை, மருமகன் திருப்பதி, அவரது அண்ணன் அன்பழகன், திருப்பதியின் தந்தை ராஜப்பா, தாய் கவுரம்மாள், சகோதரி அம்சா ஆகியோர் சேர்ந்து தாக்கி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனை அடைந்த முருகம்மாள் எலி மருந்தை வாங்கி தின்று வேப்பனப்பள்ளி அருகே உள்ள பில்லனகுப்பத்திற்கு சென்றார்.
அங்கு தனது உறவினர்களிடம் நடந்ததை கூறி மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகம்மாள் நேற்று முன்தினம்இறந்தார்.
இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பதி, அன்பழகன், ராஜப்பா, கவுரம்மாள், அம்சா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story






