என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால பைரவர், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
    X
    கால பைரவர், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    கிருஷ்ணகிரி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள்

    கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி அடுத்த கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள 300 ஆண்டுகளை பழமை வாய்ந்த கால பைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. 

    காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், கால பைரவ மகா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகிய வை நடந்தது. 

    பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத் தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங் களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

    இதற் கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தஷ்ண காலபைரவர் கோயில் மற்றும் கந்திகுப்பம் கால பைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×